26 கிமீ மைலேஜ், 7 சீட்டர் கொண்ட கார் தான் இந்தியாவிலேயே அதிகமாக வித்திருக்குது! டாப் 10 கார்கள் இதான்!
இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த விற்பனை விபரங்கள் எல்லாம் வெளியாகியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஜிஎஸ்டி குறையப்போகிறது என்பது தெரியாமல் பலர் புதிய கார்களை வாங்கியள்ளனர். இதன்படி இந்தியவாில் அதிகம் விற்பனையான டாப் 10 கார்கள் குறித்த விரிவான விபரங்களை தான் இங்கே நாம் காணப்போகிறோம்.
10. மாருதி ஈக்கோ
மாருதி நிறுவனத்தின் ஈக்கோ கார் இந்த பட்டியலில் 10 வது இடத்தில் இரு்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தம் 10,785 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 10,985 கார்கள் விற்பனையாகியிருந்தது. இது கடந்த மாதம் 2 சதவீத விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளதை காட்டுகிறது.

9. மாருதி ஸ்விஃப்ட்
மாருதி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் கார் இந்த பட்டியலில் 9வது இடத்தில் இருக்கிறது. இந்த காரை பொருத்தவரை கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தம் 12,385 கார்கள் விற்பனையாகியள்ளது. இதுவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மொத்தம் 12,844 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 4 சதவீதம் இந்த காரின் விற்பனை சரிவடைந்துள்ளது.
8. மாருதி ஃபிராங்க்ஸ்
மாருதி நிறுவனத்தின் ஃபிராங்க்ஸ் கார் இந்த பட்டியலில் 8வது இடத்தில் இருக்கிறது. இந்த காரை பொருத்தவரை கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தம் 12,422 கார்கள் விற்பனையாகியள்ளது. இதுவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மொத்தம் 12,387 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது இந்த காரின் விற்பனையில் பெரிய அளவல் மாற்றங்கள் இல்லை மிக குறைவான எண்ணிக்கையில் விற்பனை அதிகரித்துள்ளது.

7. மாருதி பலேனோ
மாருதி நிறுவனத்தின் பலேனோ கார் இந்த பட்டியலில் 7வது இடத்தில் இருக்கிறது. இந்த காரை பொருத்தவரை கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தம் 12,549 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மொத்தம் 12,485 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது இந்த காரின் விற்பனையில் 1 சதவீதம் அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது.
6. மாருதி பிரெஸ்ஸா
மாருதி நிறுவனத்தின் பிரெஸ்ஸா கார் இந்த பட்டியலில்6வது இடத்தில் இருக்கிறது. இந்த காரை பொருத்தவரை கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தம் 13,620 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மொத்தம் 19,190 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது இந்த காரின் விற்பனையில்29 சதவீதம் அளவிற்கு விற்பனை குறைந்துள்ளது.

5. டாடா நெக்ஸான்
டாடா நிறுவனத்தின் நெக்ஸான் கார் இந்த பட்டியலில் 5வது இடத்தில் இருக்கிறது. இந்த காரை பொருத்தவரை கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தம் 13,620 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மொத்தம் 19,190 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது இந்த காரின் விற்பனையில் 14 சதவீதம் அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது.
4. மாருதி வேகன் ஆர்
மாருதி நிறுவனத்தின் வேகன்ஆர் கார் இந்த பட்டியலில் 4வது இடத்தில் இருக்கிறது. இந்த காரை பொருத்தவரை கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தம் 14,552 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மொத்தம் 16,450 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது இந்த காரின் விற்பனையில் 12 சதவீதம் அளவிற்கு விற்பனை குறைந்துள்ளது.
3. ஹூண்டாய் கிரெட்டா
ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா கார் இந்த பட்டியலில் 3 வது இடத்தில் இருக்கிறது. இந்த காரை பொருத்தவரை கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தம் 15,924கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மொத்தம் 16,762 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது இந்த காரின் விற்பனையில் 5 சதவீதம் அளவிற்கு விற்பனை குறைந்துள்ளது.
2. மாருதி டிசையர்
மாருதி நிறுவனத்தின் டிசையர் கார் இந்த பட்டியலில் 2 வது இடத்தில் இருக்கிறது. இந்த காரை பொருத்தவரை கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தம் 16,509 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மொத்தம் 10,627 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது இந்த காரின் விற்பனையில் 55 சதவீதம் அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது.
1. மாருதி எர்டிகா
மாருதி நிறுவனத்தின் எர்டிகா கார் இந்த பட்டியலில் 1 வது இடத்தில் இருக்கிறது. இந்த காரை பொருத்தவரை கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தம் 18,445 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மொத்தம் 18,580 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது இந்த காரின் விற்பனையில் 55 சதவீதம் அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது. எர்டிகா சிஎன்ஜி கார் 26.11 கி.மீ மைலேஜ் தருகிறது. இதில் 7 பேர் தாராளமாக பயணிக்கலாம். இதனால் தான் இந்த காரின் விற்பனை அதிகமாக இருக்கும் என பலர் பேசுகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வரும் செப் 22ம் முதல் கார்களின் விலை குறையும் நிலையில் கடந்த மாதம் கார் வாங்கியவர்களுக்கு இது குறித்த தெரியாமல் வாங்கிவிட்டனர். இந்த மாதம் தற்போது வரை கார் விற்பனை மந்தமாக இருக்கும் சொல்லப்போனால் விற்பனையே இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால் ஒட்டும மொத்தமாக சேர்த்து 22ம் தேதி க்கு பிறகு விற்பனை நடக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









