நாடே எதிர்பார்க்கும் காரில் வரப்போகும் 10 மாற்றங்கள் இது தான்!

ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய தலைமுறை வென்யூ காரை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. வரும் நவம்பர் 4ம் தேதி இந்த கார் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகிறது. இந்த காருக்கான புக்கிங் தற்போது நடந்து வருகிறது. வெறும் ரூ25,000 செலுத்தி இந்த காரை புக் செய்து கொள்ள முடியும். இந்நிலையில் இந்த வென்யூ காரில் வரவுள்ள டாப் 10 மாற்றங்கள் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

1. ட்வின் டிஸ்பிளே

இந்த புதிய அப்டேட்டின் முக்கிய ஹைலைட்டே 12.3 இன்ச் டுயல் கர்வ்டு பானரோமிக் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. ஒரு டிஸ்பிளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாகவும், மற்றொரு டிஸ்பிளே டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டராகவும் பயன்படுகிறது. இது தற்போதைய செட்டப்பிலிருந்து வேறுபடும் மிகப்பெரிய மாற்றம் ஆகும்.

Top 10 Changes In New-Gen Hyundai Venue

2. அளவுகள்

தற்போது வரப்போகும் புதிய தலைமுறை கார் ஏற்கனவே உள்ள மாடலில் இருந்து 48 மிமி உயரமாகம், 30 மிமீ அலகமாகவும், வருகிறது. நீளம் அதே பழைய காரின் நீளம் தான். வீல் பேஸ் மட்டும் 20 மிமீ அதிகமாக வழங்கப்பட்டுள்ளது.

3. டேஷ்போர்டு மற்றும் கன்சோல்

புதிய வென்யூ காரில் டேஷ்போர்டு புதிதாக 3 லேயர் செட்டப்களில் வந்துள்ளது. சென்டரல் ஏசி அகலவாக்கில் வழங்கப்பட்டுள்ள வென்ட்கள், சீம் லெஸ் டிசைன் உடன் வழங்கப்பட்ட வடிவமைப்பு, காபி டேபிள் சென்டர் கண்சோல், ஆம்பியன்ஸ் லைட்டிங், கியர் ஸ்விஃப்ட் லிவர், வயர்லெஸ் சார்பர், 2 கப் ஹோல்டர், ரோட்டரி டயல், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

Top 10 Changes In New-Gen Hyundai Venue

4. ஸ்டியரிங் வீல் மற்றும் உட்புற கட்டமைப்பு

இந்த புதிய வென்யூ காரின் ஸ்டியரில் வீல் டி-கட் வீலாக 4 டாட்களுடன் வழங்கப்பட்டுள்ளது. இது எச் என்ற எழுத்தை கொண்டதாக உள்ளது. இந்த காரில் எச்-கட்டுமானம் கொண்ட கேப்பின் டுயல் தீமில் வழங்கப்ப்டடுள்ளது. இது டார்க் நேவி மற்றும் டவ் கிரே கலர் தீமில் உள்ளது. மற்றும் இதில் டெர்ராஸோ டெக்சர்டு கிராஷ் பேட் கார்னிஷ் வழங்கப்பட்டுள்ளது.

5. புதிய ஸ்டைலிங்

இந்த காரின் வடிவமைப்பில் பல்வேறு ஸ்டாண்ட் அவுட் அம்சங்கள் உள்ளன. முக்கியமாக டார்க் குரோம் ரேட்டியேட்டர் கிரில், குவாட் பீம் எல்இடி ஹெட்லைட், ட்வின் ஹார்ன் எல்இடி டிஆர்எல், பேட்ஜ் டைப் ரூஃப் ரெயில்கள், 16 இன்ச் கொண்ட டைமண்ட் கட் அலாய் வீல்கள், கனெக்டெட் டெயில் லைட் செட்டப் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

Top 10 Changes In New-Gen Hyundai Venue

6. புதிய அம்சங்கள்

இந்த காரில் புதிய அம்சமாக லெவல் 2 அடாஸ், முன்பக்க வென்டிலேட்டட் சீட்டுகள், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், முன்பக்க பார்க்கிங் சென்சார், பவர்டு டிரைவர் சீட், டுயல் டிஸ்பிளே உள்ளிட்டஅம்சங்கள் உள்ளன.

7. புதிய கலர்கள்

இந்த ஹூண்டாய்காரில் 4 புதிய கலர் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி மிஸ்டிக் சஃபையர், ஹசல் ப்ளூ, டிராகன் ரெட் மற்றும் டுயல் டோன் ஹசல் ப்ளூ, அபயாஸ் பிளாக் ரூஃப் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

8. புதிய வேரியன்ட்கள்

தற்போது உள்ள வென்யூ கார்கள், இ, இஎக்ஸ், எஸ், எஸ்எக்ஸ், மற்றும் எஸ்எக்ஸ் ஓ ஆகிய வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. புதிய கார் இனி எச்எக்ஸ், என் பெயரில் வரும் அதாவது எச்எக்ஸ்2, எச்எக்ஸ் 4, எச்எக்ஸ் 5, எச்எக்ஸ் 6, எச்எக்ஸ்7, எச்எக்ஸ் 8, மற்றும் டாப் வேரயின்டில் எச்எக்ஸ் 10 ஆகிய வேரியன்ட்களில் இந்த கார் விற்பனைக்கு வருகிறத.

9. பிராக்கடிக்கல் அம்சம் அதிகரிப்பு

புதிய வென்யூ காரில் நீண்ட வீல் பேஸ் காரணமாக பிராக்டிக்கல் அம்சம் அதிமாகியுள்ளது. முக்கியமாக 2வது வரிசை சீட்டில் உள்ளவர்களுக்கு அதிக இட வசதி, பின்பக்க விண்டோ சன் ஷேடு, 2 ஸ்டெப் ரிக்லைனிங் சீட்கள், அகலமான டோர் ஒப்பனிங் என பல பிராக்டிக்கல் அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளது.

10. புதிய பாதுகாப்பு அம்சங்கள்

இந்த காரில் புதிதாக லெவல் 2 அடாஸ் தொழிற்நுட்பம், முன்பக்க பார்க்கிங் சென்சார், 360 டிகிரி கேமரா, பார்க்கிங் கேமரா, எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆட்டோ ஹோல்டு, இஎஸ்சி, ஹில் ஹோல்டு அசிஸ்ட், 6 ஸ்டார்ட்டு ஏர்பேக்குகள், 1.2 லி நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல், 1.0 லி டிஜிடிஐ பெட்ரோல் மற்றம் 1.5 லி சிஆர்டிஐ டீசல் இன்ஜின் ஆகிய அம்சங்கள்உள்ளன. 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் உள்ளிட்ட அம்ஙசகளுடன் இது வழங்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வென்யூ காருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.இந்த கார் ரசிகர்கள் மத்தியில் பெரும்வரவேற்ப்பைபெற்றுள்ளது. இதன் புதிய கார் நிச்சயம் மார்கெட்டில் நல்ல வரவேற்ப்பை பெறும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Sunday, October 26, 2025, 17:46 [IST]
English summary
Top 10 changes in new gen hyundai venue updates
மேலும்... #hyundai #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X