35.6 கி.மீ மைலேஜ், 7 பேர் போற மாதிரி கார்! இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் கார் இது!

இந்தியாவில் சிஎன்ஜி கார்களின் விற்பனை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. அதன்படி கடந்த நிதியாண்டில் அதிகமாக விற்பனையான சிஎன்ஜி காராக மாருதி எர்டிகா கார் இருக்கிறது. இப்படியாக கடந்த நிதியாண்டில் விற்பனையான டாப் 10 சிஎன்ஜி கார்கள் எது? இந்த கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

அதிக மைலேஜ் தருவதால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் சிஎன்ஜி வாகனங்களை தயாரித்து வருகிறது. இதில் மாருதி நிறுவனம், டாடா, ஹூண்டாய், உள்ளிட்ட நிறுவனங்கள் சிஎன்ஜி வாகனங்களை தயாரித்து விற்பனவ செய்து வருகிறது. இதன்படி கடந்த நிதியாண்டில் மொதம் விற்பனையான சிஎன்ஜி வாகனங்களில் அதிகமாக மாருதி நிறுவனத்தின் எர்டிகா கார் தான் விற்பனையாகியுள்ளது.

Maruti Ertiga CNG

மாருதி நிறுவனம் எர்டிகா சிஎன்ஜி கார் கடந்த நிதியாண்டில் மொத்தம் 1,29,920 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இந்த கார் 7 சீட்டர் கொண்ட காராக விற்பனையாகி வருகிறது. இனி இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 10 சிஎன்ஜி கார்கள் குறித்த விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்த பட்டியலில் மாருதி பலேனோ சிஎன்ஜி கார் இருக்கிறது. மொத்தம் 24200 கார்கள் விற்பனையாகியுள்ளது. 9வது இடத்தில் டாடா நெக்ஸான் சிஎன்ஜி கார் இருக்கிறது. இந்த கார் 34712 கார்கள் விற்பனையாகியுள்ளது. 8வது இடத்தில் மாருதி ஃபிராங்க்ஸ் சிஎன்ஜி கார் 42,051 கார்கள் விற்பனையாகியுள்ளது.

Maruti Ertiga CNG

7வது இடத்தில் ஹூண்டாய் ஆரா சிஎன்ஜி காரை பொருத்தவரை 49,464 கார்கள் விற்பனையாகியுள்ளன. 6வது இடத்தில் மாருதி ஈக்கோ சிஎன்ஜி கார் 59520 கார்கள் விற்பனையாகியுள்ளன. 5வது இடத்தில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா சிஎன்ஜி கார் மொத்தம் 70,928 கார்கள் விற்பனையாகியுள்ளன.

4வது இடத்தில் டாடா பஞ்ச் சிஎன்ஜி கார் இருக்கிறது. இந்த கார் மெசாத்தம் 71,113 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே 3வது இடத்தில் மாருதி டிசையர் சிஎன்ஜி கார் இருக்கிறது. இந்த கார் 89,015 கார்கள் விற்பனையாகியள்ளது. 2வது இடத்தில் மாருதி வேகன்ஆர் சிஎன்ஜி கார் இருக்கிறது. இந்த கார் மொத்தம் 1,02,128 கார்கள் விற்பனையாகியுள்ளது.

Maruti Ertiga CNG

முதலிடத்தில் முன்னரே சொன்னதுபடி 1,29,920 மாருதி எர்டிகா சிஎன்ஜி கார்கள் விற்பனையாகியுள்ளது. மாருதி எர்டிகா காரின் இந்த விற்பனைக்கு முக்கியமான காரணம் அதன் மைலேஜ் தான்.எர்டிகா கார் அதிகபட்சமாக 35.6 கி.மீ வரை மைலேஜ் தருவதாக பலர் சோதனை செய்து சான்றுகளை வழங்கியுள்ளனர். கார் வாலே நிறுவனம் ஹைவேயில் நடத்திய சோதனையில் இந்த விபரம் வெளியாகியுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனத்தின் எர்டிகா கார் சிறப்பாகவிற்பனையாகி வருகிறது. சிஎன்ஜி கார்களே மக்கள் மத்தியில் பிரபலமாகி வருவதற்கு மைலேஜ் மற்றும் விலை மிக முக்கியமான காரணம் என்பதால் மக்கள் இந்த ரக கார்களை விரும்பி வாங்கி வருகின்றனர். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Sunday, July 6, 2025, 22:36 [IST]
English summary
Top 10 cng cars sold in fy 25 know full list
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X