இவ்வளவு பேர் சின்ன காரை வாங்கிட்டாங்களா? டாப் 10 ஹேட்ச்பேக் கார்கள் இது தான்!
இந்தியாவில் எஸ்யூவி பக்கம் என்னதான் மக்கள் அதிகமாக நகர்ந்துவிட்டாலும், சிறிய ரக கார்களுக்கான மவுசும் இருக்கத்தான் செய்கிறது. முக்கியமாக முதல் முறையாக கார் வாங்குபவர்கள் பலர் சிறிய ரக கார்களையே விரும்புகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் விற்பனையான டாப் 10 ஹேட்ச்பேக் கார்களின் பட்டியலை தான் இங்கே காணப்போகிறோம்.
10. மாருதி சுஸூகி இக்னீஷ்
இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் மாருதி நிறுவனத்தின் இக்னீஷ் கார் மொத்தம் 1977 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஜூலை மாதம் 2216 கார்கள் விற்பனையாகியிருந்தது. இந்த கார் 11 சதவீத விற்பனை சரிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த கார் நீண்ட காலமாக அப்டேட் இல்லாததால் குறைவாக விற்பனையாகியுள்ளது.

9. ஹூண்டாய் ஐ20
ஹூண்டாய் நிறுவனத்தின் ஐ20 காரை பொருத்தவரை கடந்த ஜூலை மாதம் 3396 கார்கள் விற்பனையாகியள்ளது. இதுவே கடந்தாண்டு ஜூலை மாதம் 4937 கார்கள் விற்பனையாகியிருந்தது. கடந்த ஜூலை மாதம் விற்பனை 32 சதவீதம் வரை குறைந்துள்ளது.
8. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ்
ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 நியோஸ் காரை பொருத்தவரை கடந்த ஜூலை மாதம் 3560 கார்கள் விற்பனவையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஜூலை மாதம் 4922 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 28 சதவீதம் அளவிற்கு இந்த காரின் விற்பனை குறைந்துள்ளது.

7. டாடா அல்ட்ராஸ்
டாடா நிறுவனத்தின் அல்ட்ராஸ் காரை பொருத்தவரை கடந்த ஜூலை மாதம் 3905 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஜூலை மாதம் 3444 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 13 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது.
6. டொயோட்டா கிளான்ஸா
டொயோட்டா நிறுவனத்தின் கிளான்ஸா காரை பொருத்தவரை மொத்தம் 5,019 கார்கள் கடந்த ஜூலை மாதம் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் வெறும் 4836 கார்கள் விற்பனையாகியுள்ளது. இந்த காரின் விற்பனை கடந்தாண்டு ஜூலை மாதம் 4836 என இருந்தது. தற்போது 4 சதவீதம் அளவிற்கு விற்பனவை அதிகமாகியுள்ளது.

5. டாடா டியாகோ
டாடா நிறுவனத்தின் டியாகோ காரை பொருத்தவரை கடந்த ஜூலை மாதம் 5575 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த 2024ம் ஆண்டு ஜூலை தமாதம் 5665 கார்கள் விற்பனவையாகியுள்ளது. தற்போது 2 சதவீத அளவிற்கு விற்பனை குறைந்துள்ளது.
4. மாருதி சுஸூகி ஆல்டோ
மாருதி நிறுவனத்தின் ஆல்டோ காரை பொருத்தவரை கடந்த ஜூலை மாதம் 5910 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஜூலை மாதம் 7353 கார்கள் வறி்பனையாகியிருந்தது. தற்போது விற்பனை 20 சதவீதம் குறைந்துள்ளது.
3. மாருதி பலேனோ
மாரதி நிறுவனத்தின் பலேனோ காரை பொருத்தவரை கடந்த ஜூலை மாதம் 12503 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஜூலை மாதம் 9309 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. தற்போது 34 சதவீதம் அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது.
2. மாருதி ஸ்விஃப்ட்
மாருதி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் காரை பொருத்தவரை கடந்த ஜூலை மாதம் 14,190 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஜூலை மாதம் 16,854 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 16 சதவீதம் அளவிற்கு விற்பனை குறைந்துள்ளது.
1. மாருதி வேகன் ஆர்
மாருதி நிறுவனத்தின் வேகன்ஆர் காரை பொருத்தவரை கடந்த ஜூலை மாதம் 14,710 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஜூலை மாதம் 16191 கார்கள் விற்பனையாகியுள்ளது. தற்போது விற்பனை 9 சதவீதம் குறைவாகியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கடந்த மாதம் சிறப்பாக வாகனங்கள் விற்பனையான நிலையில் சிறிய ரக கார்களில் பெரும்பாலன கார்கள் விற்பவனை சரிவை சந்தித்திருந்தாலும் சில கார்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதனால் மற்ற நிறுவனங்கள் தற்போது மக்களுக்கு பிடித்தமாதிரியான கார்களை வெளியிட்டால் விற்பனை அதிகமாகும்.


Click it and Unblock the Notifications









