ஒரு கார் விலை ரூ250 கோடியா? உலகின் காஸ்ட்லியான 10 கார்கள் இது தான்!

உலகம் முழுவதும் வாகனங்கள் ஒரு முக்கியமான விஷயங்களாக இருக்கிறது. கார்கள் சமூகத்தில் நமக்கு அந்தஸ்தை தருகிறது. இந்த வாகனங்களின் விலை மிக முக்கியமான விஷயமாக இருக்கிறது. இந்நிலையில் உலகில் அதிகம் விற்பனையாகும் டாப் 10 கார்கள் குறித்த விபரங்களை காணலாம் வாருங்கள்.

10 புகாட்டி டிவோ - ரூ39.7 கோடி

Top 10 Most Expensive Cars
புகாட்டி நிறுவனம் டிவோ (Bugatti Divo) என்ற லிமிடெட் எடிசன் காரை விற்பவனை செய்துள்ளது. வெறும் 40 கார்களை மட்டுமே தயாரிக்கபட்டுள்ளது. இந்த கார் புகாட்டி சிரோன் காரின் டிராக் எடிசன் கார் ஆகும். இந்த காரில் 8.0 லிட்டர் டபிள்யூ 16 குவாட் டர்போ இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது குறைந்த எடை கொண்ட கார் ஆகும். இந்த காரின் தயாரிப்பு துவங்கும் முன்பே மொத்த கார்களும் விற்றுவிட்டன. இதன் விலை ரூ39.7 கோடியாகும்.

9. பகானி ஹூயாரா டிரைகலரி- ரூ46 கோடி

இத்தாலி நாட்டின் விமானப்படை ஏரோ பேட்டிக் குழுவின் 60வது ஆண்டை கொண்டாடும் வகையில் இந்த பகானி ஹூயாரா டிரைகலரி (Pagani Huayra Tricolore ) கார் வெறும் 3 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. இந்த காரில் 6.0லிட்டர் ட்வின் டர்போ வி12 பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் ரூ46 கோடி என்ற விலையில் விற்பனையானது.

8. பகானி ஹூயாரா கோடாலுங்கா - ரூ48 கோடி

இந்த ஹூயாரா கோடாலுங்கா (Pagani Huayra Codalunga) கார் ஹூயாரா ஹைப்பர் காரின் லாங் டெயில் வேரயின்ட் கார் ஆகும். இந்த கார் வெறும் 5 கார்கள் மட்டுமுே தயாரிக்கப்பட்டன. இந்த கார் முழுமையாக கையால் தயாரிக்கப்பட்ட கார் ஆகும். இந்தகாரில் 6.0 லிட்டர் ட்வின் டர்போ வி12 இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 829 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த கார் ரூ48 கோடி என்ற விலையில் விற்பனையானது.

7.புகாட்டி சென்டோடெய்ஸி - ரூ65 கோடி

புகாட்டி நிறுவனம் தனது 110வதுஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் இந்த சென்டோடெய்ஸி (Bugatti Centodieci)என்ற லிமிடெட் எடிசன் காரை அறிமுகப்படுத்தியது. இந்த கார்10 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டது. இந்த கார் அறிமுகமாகும் போது ரூ65 கோடிக்கு அறிமகமாகனது. இது சிரோன் காரின் மெக்கானில் அம்சங்களை கொண்டது. டிசைன் மட்டும் 1990களில் வந்த இபி110 சூப்பர் காரை கொண்டதாக இருக்கிறது.

6. புகாட்டி சிரோன் புரோஃபைல் -ரூ88 கோடி

புகாட்டி சிரோன் புரோஃபைல் (Bugatti Chiron Profilee) ஒரே ஒரு கார் மட்டுமே தயாரிக்கப்பட்டது. இந்த கார் சாலையில் பயன்படுத்துவதற்கு ஏற்றவறையில் அதிக பெர்ஃபர்மென்ஸைதரும் டபிள்யூ16 பிளாஸ்பார்மில் உருவாக்கப்பட்ட கார் ஆகும். இந்த ஒரு காரும் ரூ88 கோடிக்கு விற்பனையானது. இ்நத காரில் 8.0 லிட்டர் குவாட் டர்போ சார்ஜ்டு டபிள்யூ 16 இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

5. ரோல்ஸ் ராய்ஸ் ஸ்வீப் டெயில் - ரூ107 கோடி

Top 10 Most Expensive Cars

இந்த காரை ஒரு தனி நபர் கோரிக்கைக்கு ஏற்ற அந்நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த ரோல்ஸ் ராய்ஸ் ஸ்வப்டெயில் (Rolls-Royce Sweptail) காரின் விலை ரூ107 என்ற விலையில் விற்பனையாகியுள்ளது. இந்த காரின் பின்பக்கம் சாய்வான வடிவமைப்புவழங்கப்பட்டுள்ளது. ஒரு படகு வடிமவைப்பை அடிப்படையாக கொண்டு இந்த கார் வடிவமைக்கப்பட்டுளு்ளது. இந்த கார் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் மார்டனான கோச் பில்டை பிரதிபலிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

4. பகானி ஸோன்டா எச்பி பார்செட்டா - ரூ143 கோடி

Top 10 Most Expensive Cars

பகானி நிறுவனம்இந்த ஸோன்டா எச்பி பார்செட்டா (Pagani Zonda HP Barchetta) காரை 3 கார்கள் மட்டுமே தயாரித்துள்ளது. இந்த கார் குறைந்த உயரம் கொண்ட டாப் பகுதி திறந்தநிலையில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட கார் ஆகும். இந்த காரின் பின்பக்க வீல் பகுதி கார்பன் ஃபைபர் கொண்டு சற்று மூடப்பட்டுள்ளது. இந்த 3 காரில் ஒவ்வொரு காரும் ஒரு ஒரு கார் கலெக்டர்களுக்காக ஒதுக்கப்பட்டது. இந்த காரின் விலை ரூ143 கோடியாகும்.

3. புகாட்டி லா வயோட்டிர் நோய்ர் - ரூ157 கோடி

Top 10 Most Expensive Cars

புகாட்டி நிறுவனம் சிட்ரோன் பிளாட்ஃபார்மில் இந்த லா வயோட்டிர் நோய்ர் (Bugatti La Voiture Noire) என்ற காரை தயாரித்துள்ளது. இந்தகார் 1930களில் வெளியான டைப் 17 எஸ்சி அட்லாண்டிக் காரை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த கார் 8.0 லிட்டர் குவாட் டர்போ சார்ஜ்டு டபிள்யூ16 இன்ஜினை கொண்டது. இது 1479 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த கார் ஒரே ஒரு கார் தான் தயாரிக்கப்பட்டது. தனி நபரின் வேண்டுகோளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டது. இதன் விலை ரூ157 கோடியாகும்.

2. ரோல்ஸ் ராய்ஸ் போட் டெயில் -ரூ234 கோடி

Top 10 Most Expensive Cars

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் போட் டெயில் (Rolls-Royce Boat Tail) என்ற காரை தனது கோச் பில்டு புரோகிராமில் ஒரு பகுதியாக தயாரித்தத. இந்தகாரின் பின்பக்கம் ஒரு படகு போல வடிவமைத்து அதை ஸ்டோரேஜ் பகுதியாக பயன்படுத்த ஏற்ற காராக வடிவமைத்துள்ளனர். இந்த கார் அலுமினியம் கட்டமைப்பில் ட்வின் டர்போ வி12 இன்ஜின் உடன்வடிமவைத்துள்ளனர். இந்த 3 காரும் தனித்துவமான காராக இருக்கும். ஒவ்வொரு காருக்கும் வித்தியாசம் இருக்கும். இந்த கார் ரூ234 கோடிக்கு விற்பனையானது.

1. ரோல்ஸ் ராய்ஸ் லா ரோஸ் நோய்ர் டிராப்டெயில் - ரூ250 கோடி

Top 10 Most Expensive Cars

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் இந்த லா ரோஸ் நோய்ர் டிராப்டெயில் (Rolls-Royce La Rose Noire Droptail ) காரை வெறும் 4 கார்கள் தான் தயாரித்துள்ளது. இந்த கார் 2 சீட்டர் கொண்ட ரோடுஸ்டர் காராக அந்நிறுவமன் தயாரித்துள்ளது. இது அதன் உரிமையாளர்களுக்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது, இநத காரில் 6.75 லிட்டர் ட்வின் டர்போ வி12 இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.இந்த காரின் விலை ரூ250 கோடியாகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகின் காஸ்ட்லியான இந்த கார்கள் குறித்து பலருக்கும் தெரியாது. நிச்சயம்இவ்வளவு காஸ்ட்லியான காரெல்லாம் இருக்கிறதா என்று உங்களையே ஆச்சரியப்படுத்தும் அளவிற்குஇந்த பதிவு இருக்கலாம். இந்த கார்கள் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Thursday, October 23, 2025, 8:55 [IST]
English summary
Top 10 most expensive cars in the world 2025
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X