இந்த ஒரு காருக்கு இவ்வளவு டிமாண்டா? ஷோரூம்ல கூட்டம் குவியுது! மத்த காரை வாங்க ஆளே இல்ல!
இந்தியாவில் செடான் கார்களின் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது. மக்கள் பலர் எஸ்யூவி கார் பக்கம் திரும்பி விட்டதால் இந்த ரக கார்களின் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது. ஆனால் ஒரே ஒரு கார் மட்டும் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. இப்படியாக இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 10 கார்கள் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
10. மாருதி சுஸூகி சியாஸ்
மாருதி நிறுவனம் இந்தியாவில் சியாஸ் என்ற மிட் சைஸ் செடான் காரை விற்பனை செய்து வருகிறது. இந்த காரின் தயாரிப்பை நிறுத்திவிட்டாலும் ஸ்டாக்கை காலியாக்க தற்போது இந்த காரை விற்பனை யில் வைத்துள்ளது. கட்நத செப்டம்பம் மாதம் ஒரு கார் கூட விற்பனையாகவில்லை. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 662 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது விற்பனை 100 சதவீதம் குறைந்துள்ளது.

9. டொயோட்டா கேம்ரி
டொயோட்டோ நிறுவனத்தின் கேம்ரி காரை பொருத்தவரை இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த கார் கடந்த செப்டம்பர் மாதம் 137 கார்கள் விற்பனவையாகியுள்ளது. இந்த கார் கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 127 கார்கள் தான் விற்பனையாகியிருந்தது. 8 சதவீதம் அளவிற்கு விற்பனையாகியுள்ளது.
8. ஹோண்டா சிட்டி
ஹோண்டா நிறுவனத்தின் சிட்டி செடான் கார் பிரபலமான காராக இருகு்கிறது. இந்த கார் கடந்த செப்டம்பர் மாதம் 496 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு 895 கார்கள் இதே காலகட்டத்தில் விற்பனையாகியுள்ளது. தற்போத 45 சதவீதம் அளவிற்கு விற்பனவை குறைந்துள்ளது.

7. ஹூண்டாய் வெர்னா
ஹூண்டாய் நிறுவனத்தின் வெர்னா காரை பொருத்தவரை கடந்த செப்டம்பர் மாதம் 725 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 1198 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 39 சதவீதம் அளவிற்கு விற்பனை சரிவடைந்து வருகிறது.
6. டாடா டிகோர்
டாடா நிறுவனம் டிகோர் காரை விற்பனை செய்து வருகிறது. இந்த காரை 966 பேர் இந்த காரை கடந்த செப்டம்பர் மாதம் வாங்கியுள்ளனர்.இதுவே கடந்த செப்டம்பர் மாதம் 894 பேர் விற்பனை செய்துள்ளனர். இது 8 சதவீத விற்பனை வளர்ச்சியாகும்.

5. ஸ்கோடா ஸ்லாவியா
ஸ்கோடா நிறுவனத்தின் ஸ்லாவியா காரை பொருத்தவரை கடந்த செப்டம்பர் மாதம் 1339 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 1391கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 4 சதவீதம் அளவிற்கு விற்பனை சரிவடைந்துள்ளது.
4. ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ்
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் விர்டுஸ் காரை பொருத்தவரை கடந்த செப்டம்பர் மாதம் 1648 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 1687 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 3 சதவீதம் அளவிற்கு விற்பனை சரிவடைந்துள்ளது.
3. ஹோண்டா அமேஸ்
ஹோண்டா நிறுவனத்தின் அமேஸ் காரை பொருத்தவரை கடந்த செப்டம்பர் மாதம் 2610 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 2820 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 7 சதவீதம் அளவிற்கு விற்பனை சரிவடைந்துள்ளது.
2. ஹூண்டாய் ஆரா
ஹூண்டாய் நிறுவனத்தின் ஆரா காரை பொருத்தவரை கடந்த செப்டம்பர் மாதம் 5387 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 4462 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 21 சதவீதம் அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது.
1. மாருதி சுஸூகி டிசையர்
மாருதி நிறுவனத்தின் டிசையர் காரை பொருத்தவரை கடந்த செப்டம்பர் மாதம் 20,038 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 10,853 கார்கள் விற்பனையாகியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் 85 சதவீதம் அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் செடான் கார்களின் விற்பனை சரிவடைந்த வருகிறது. டிசையர் காரை தவிற மற்ற கார்களின் விற்பனை பெரிய அளவில் அதிகமாகவில்லை. பெரும்பாலான கார்களின் விற்பனை சரிவடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications









