குரூப்ல டூப்பு மாதிரி இந்த ஒரு கார் சேல்ஸ் சும்மா பிச்சுக்கிட்டு போகுது! எப்படி தெரியுமா?

இந்தியாவில் செடான் கார்களின் விற்பனை சமீபகாலமாக சரிவடைந்து வந்தாலும், இந்த ரக கார்களுக்கு என்றே ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் விற்பனையான டாப் 10 செடான் கார்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

10. ஸ்கோடா ஆக்டவியா

ஸ்கோடா நிறுவனம் தனது ஆக்டவியா காரை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறது. இந்த கார்கள் இந்தியாவில் அதிக விலை காரணமாக குறைவாக தான் விற்பனையாகி வருகிறது. கடந்த நவம்பர் மாதம் 94 கார்கள் விற்பவனையாகியுள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதம் இந்த கார் விற்பனையிலேயே இல்லை என்பதால் ஒப்பிட முடியாது.

Top 10 Sedans

9. டொயோட்டா கேம்ரி

டொயோட்டா நிறுவனம் கேமரி காரையும் இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறது. கடந்த நவம்பர் மாதம் 222 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 130 கார்கள் தான் விற்பனையாகியிருந்தது. தற்போது 70.77 சதவீதம் விற்பனை வளர்ச்சியடைந்துள்ளது.

8. டாடா டிகோர்

டாடா நிறுவனம் செடாக் செக்மெண்டில் டிகோர் காரை விற்பனை செய்து வருகுிறது. இந்த கார் கடந்த நவம்பர் மாதம் 488 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 859 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 43.19 சதவீதம் விற்பனை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

Top 10 Sedans

7. ஹோண்டா சிட்டி

ஹோண்டா நிறுவனத்தின் சிட்டி கார் கடந்த நவம்பர் மாதம் 605 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 709 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 14.67 சதவீதம் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது.

6. ஹூண்டாய் வெர்னா

ஹூண்டாய் நிறுவனத்தின் வெர்னா கார் கடந்த நவம்பர் மாதம் 709 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 1213 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 41.55 சதவீதம் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது.

Top 10 Sedans

5. ஸ்கோடா ஸ்லாவியா

ஸ்கோடா நிறுவனத்தின் ஸ்லாவியா கார் கடந்த நவம்பர் மாதம் 1120 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 1131 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 0.97 சதவீதம் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது.

4. ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ்

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் விர்டுஸ் கார் கடந்த நவம்பர் மாதம் 2225 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 1457கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 52.71 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது.

3.ஹோண்டா அமேஸ்

ஹோண்டா நிறுவனத்தின் அமேஸ் கார் கடந்த நவம்பர் மாதம் 2763 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 2628 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 5.14 சதவீதம் விற்பனை வளர்ச்சியடைந்துள்ளது.

2. ஹூண்டாய் ஆரா

ஹூண்டாய் நிறுவனத்தின் ஆரா கார் கடந்த நவம்பர் மாதம் 5731 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 4248 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 34.91 சதவீதம் விற்பனை வளர்ச்சியடைந்துள்ளது.

1. மாருதி டிசையர்

மாருதி நிறுவனத்தின் டிசையர் கார் கடந்த நவம்பர் மாதம் 21,082 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 11,779 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 14.67 சதவீதம் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் செடான் கார்களுக்கு ஒரு பக்கம் மதிப்பு குறைந்தாலும் மற்றொரு பக்கம் டிசையர் கார் விற்பனை மட்டும் அதிக அளவில் அதிகரித்துள்ளது. இது நிச்சக்ஷயம் அந்த காருக்கு இருக்கும் வரவேற்ப்பை காட்டுகிறது. இந்தபட்டியலில் உங்களுக்கு பிடித்த காரை கமெண்டில் செய்யவும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 23, 2025, 15:20 [IST]
English summary
Top 10 sedans sold nov 2025 india
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X