எஸ்யூவி கார் வாங்கப்போறீங்களா? இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் கார்கள் இது தான்!

இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தங்கள் விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ள நிலையில் தற்போது எஸ்யூவி செக்மெண்டில் எந்தெந்த கார்கள் அதிகம் விற்பனையாகியுள்ளன என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன்படி கடந்த ஜூலை மாதம் வெளியான டாப் 10 எஸ்யூவி கார்கள் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்த பட்டியலில் 10வது இடத்தில் கியா சோனட் கார் இருக்கிறது. இந்த கார் கடந்த ஜூலை மாதம் 7627 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஜூலை மாதம் மொத்தம் 9459 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 19 சதவீதம் அளவிற்கு விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளது.

Top 10 SUV Cars

9வது இடத்தில் ஹூண்டாய் வென்யூ கார் இருக்கிறது. இந்த கார் கடந்த ஜூலை மாதம் 8054 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு ஜூலை மாதம் 8840 கார்கள் விற்பனையாகியிருந்தது. இது 9 சதவீத விற்பனை வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

8வது இடத்தில் டொயோட்டா ஹைரைடர் கார் இருக்கிறது. இந்த கார் கடந்த ஜூலை மாதம் 8814 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு ஜூலை மாதம் 7419 கார்கள் விற்பனையாகியிருந்தது. இது 19 சதவீத விற்பனை வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Top 10 SUV Cars

7வது இடத்தில் மஹிந்திரா தார் கார் இருக்கிறது. இந்த கார் கடந்த ஜூலை மாதம் 9845 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு ஜூலை மாதம் 4385 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. இது 12 சதவீத விற்பனை வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

6வது இடத்தில் டாடா நிறுவனத்தின் பஞ்ச் கார் இருக்கிறது. இந்த கார் கடந்த ஜூலை மாதம் 10,785 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு ஜூலை மாதம் 16121 கார்கள் விற்பனையாகியிருந்தது. இது 33சதவீத விற்பனை வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Top 10 SUV Cars

5வது இடத்தில் டாடா நிறுவனத்தின் நெக்ஸான் கார் இருக்கிறது. இந்த கார் கடந்த ஜூலை மாதம் 12,825 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு ஜூலை மாதம் 13,902 கார்கள் விற்பனையாகியிருந்தது. இது 8 சதவீத விற்பனை வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

4வது இடத்தில் மாருதி நிறுவனத்தின் ஃபிராங்க்ஸ் கார் இருக்கிறது. இந்த கார் கடந்த ஜூலை மாதம் 12872 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு ஜூலை மாதம் 10,925 கார்கள் விற்பனையாகியிருந்தது. இது 18 சதவீத விற்பனை வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3வது இடத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ கார் இருக்கிறது. இந்த கார் கடந்த ஜூலை மாதம் 13747 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு ஜூலை மாதம் 12237 கார்கள் விற்பனையாகியிருந்தது. இது12 சதவீத விற்பனை வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2வது இடத்தில் மாருதி நிறுவனத்தின் பிரெஸ்ஸா கார் இருக்கிறது. இந்த கார் கடந்த ஜூலை மாதம் 14065 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு ஜூலை மாதம்14676 கார்கள் விற்பனையாகியிருந்தது. இது 4 சதவீத விற்பனை வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதல் இடத்தில் ஹூண்டாய் கிரெட்டா கார் இருக்கிறது. இந்த கார் கடந்த ஜூலை மாதம் 16.898 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு ஜூலை மாதம் 17,350 கார்கள் விற்பனையாகியிருந்தது. இது 3 சதவீத விற்பனை வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எஸ்யூவி கார்களை அதிகம் விற்பனை செய்து வரும் நிலையில் இந்த டாப் 10 பட்டியல் இந்த ரக கார்களை வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு தற்போது உள்ள டிரெண்டை எடுத்து காட்டும் நிலையில் உள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, August 8, 2025, 7:00 [IST]
English summary
Top 10 suv cars july 2025 creta scorpio thar hyryder venue sonet
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X