ஊரே இந்த காரை தான் வாங்குது! இந்த 10 கார்களில் அப்படி என்னதாங்க இருக்குது?
எஸ்யூவி கார்கள் விற்பனை கடந்த சில மாதங்களாக மிக வேகமாக விற்பனை வளர்ந்து வருகிறது. கடந்த மார்ச் மாத விற்பனையும் குறையவில்லை. எஸ்யூவி விற்பனை மிக அதிகமாக இருக்கிறது. இதனால் இந்திய மக்கள் மத்தியில்எஸ்யூவி கார்கள் மீதான மோகம் அதிகமாகிக்கெண்டே இருக்கிறது. இப்பொழுது நாம் கடந்த மார்ச் மாதம் விற்பனையான எஸ்யூவி கார்களில் அதிகம் விற்பனையான டாப் 10 கார்கள் குறித்த விபரங்களை தான் காணப்போகிறோம்.
இந்த பட்டியிலில் 10வது இடத்தில் கியா நிறுவனத்தின் சோனட் கார் இருக்கிறது. இந்த கார் கடந்த மார்ச் மாதம் 7705 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் 8750 கார்கள் விற்பனையாகியுள்ளது. அதை ஒப்பிடும் போது இந்தாண்டு 12 சதவீதம் விற்பனை குறைவு ஏற்பட்டுள்ளது. இந்த கார் விற்பனையில் சரிவு ஏற்பட்டாலும் டாப் 10 இடத்தில் இடம் பிடித்துள்ளது.

கியா சோனட் காரை பொருத்தவரை இந்திய மார்கெட்டில் ரூ8.99 லட்சம் முதல் ரூ18.41 லட்சம் வரை விற்பனையாகி வருகிறது. மொத்தம் 20 விதமான வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. இந்த காரில் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் உள்ளன.
இந்த பட்டியலில் 9வது இடத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் தார் கார் இருக்கிறது. கடந்த மார்ச் மாதம் மொத்தம் 8936 கார்கள் விற்பனையாகியுள்ளது. கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் இந்நிறுவனம் மொத்தம் 6,09 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. தற்போது 48 சதவீதம் விற்பனை வளர்ச்சியடைந்துள்ளது. ஆஃப்ரோடு ஸ்டைல் எஸ்யயூவிகளில் இந்த கார் நீண்ட காலம் சிறப்பாக விற்பனையாகியுள்ளது.

மஹிந்திரா நிறவனத்தின் தார் காரை பொருத்தவரை ரூ13.83 லட்சம் முதல் ரூ20.93 லட்சம் என்ற விலையில் மார்கெட்டில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் மொத்தம் 17 விதமான வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. இந்த காரில் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. இது போக மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களும் உள்ளன.
இந்த இடத்தில் 8வது இடத்தில் மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா கார் இருக்கிறது. இந்த கார் கடந்த மார்ச் மாதம் 10,418 கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் இந்நிறுவனம் மொத்தம் 11,232 கார்கள் விற்பனை செய்திருந்தது. தற்போது 7 சதவீதம் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த கார் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. குடும்பத்துடன் பயணிக்க ஏற்ற கார் இது.

இந்த கார் மார்கெட்டில் ரூ12.82 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரின் டாப் வேரியன்ட் ரூ22.95 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் மொத்தம் 17 விதமான வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் பெட்ரோல் மற்றும் ஹைபிரிட் ஆகிய இரண்டு ஆப்ஷன்களில் விற்பனையாகி வருகிறது.
இந்த பட்டியலில் 7வது இடத்தில்
ஹூண்டாய் வென்யூ கார் இருக்கிறது. இந்த கார் கடந்த மார்ச் மாதம் 10,418 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் இந்நிறுவனம் 9614 கார்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்தாண்டை விட இந்தாண்டு 9 சதவீதம் விற்பன வளர்ச்சி வந்துள்ளதை எடுத்து காட்டுகிறது.
ஹூண்டாய் வென்யூ காரை பொருத்தவரை ரூ9.04 லட்சம் முதல் ரூ16.13 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகுிறது. மொத்தம் 33 விதமான வேரியன்ட்களில் இந்த கார் விற்பனையாகி வருகிறது. இந்த காரில் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. இந்த காரில் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் விற்பனையாகி வருகிறது.
இந்த பட்டியலில் 6வது இடத்தில் மாருதி நிறுவனத்தின் ஃபிராங்க்ஸ் கார் இருக்கிறது. இந்த காரை பொருத்தவரை கடந்த மார்ச் மாதம் மொத்தம் 13.669 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் மொத்தம்12,531 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. அதை ஒப்பிட்டு பார்க்கும் போது தற்போது 9 சதவீதம் அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது.
மாருதி நிறுவனவத்தின் ஃபிராங்க்ஸ் காரை பொருத்தவரை ரூ8.39 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. டாப் வேரியன்ட் ரூ14.85 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் மொத்தம் 16 விதமான வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. இந்த காரில் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே இருக்கிறது. கியர் ஆப்ஷனை பொருத்தவரை மேனுவல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே உள்ளது.
இந்த பட்டியலில் 5வது இடத்தில் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கார் இருக்கிறது. இந்த கார் கடந்த மார்ச் மாதம் 16,366 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் மொத்தம் 15,151 கார்கள் விற்பனையாகியுள்ளன. அதை ஒப்பிட்டு பார்க்கும் போது தற்போது 8 சதவீதம் விற்பனை குறைந்துள்ளது.
இந்த காரின் விலையை பொருத்தவரை ரூ16.53 லட்சம் முதல் டாப் வேரியன்ட் ரூ21.03 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் மொத்தமே 4 வீதமான வேரியன்ட்களில் மட்டும் தான் விற்பனையாகி வருகிறது. இந்த கார் டீசல் இன்ஜின் ஆப்ஷன் உடன் விற்பனையாகிறது. இந்த விற்பனை எண்கள் ஸ்கார்பியோ என்ற காரையும் சேர்த்து தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் 4வது இடத்தில் டாடா நெக்ஸான் கார் இருக்கிறது. இந்த கார் கடந்த மார்ச் மாதம் 16366கார்கள் விற்பனையாகியுள்ளது. கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் 14,058 கார்கள் விற்பனையாகியிருந்தது. இதை ஒப்பிடும் போது தற்போது 6 சதவீதம் விற்பனை உயர்வு ஏற்பட்டுள்ளது. டாடாவில் சிறப்பாக விற்பனையாகும் கார்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது.
டாடா நெக்ஸான் காரை பொருத்தவரை மொத்தம் ரூ9.06 லட்சம் முதல் டாப் வேரியன்ட் ரூ18.41 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் 49 விதமான வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆகிய இரண்டு ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இந்த கார் விற்பனையாகிறது.
இந்த பட்டியலில் 3வது இடத்தில் மாருதி நிறுவனத்தின் பிரெஸ்ஸா கார் இருக்கிறது. இந்த காரை பொருத்தவரை மொத்தம் 16546 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் 14,614 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. தற்போது 13 சதவீதம் அளவிற்கு இந்த காரின் விற்பனை அதிகரித்துள்ளது.
இந்த பட்டியலில் 2வது இடத்தில் டாடா பஞ்ச் கார் இருக்கிறது. இந்த கார் கடந்த மார்ச் மாதம் 17714 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் 17,547 கார்ள் விற்பனையாகியிருந்தது. இது கிட்டத்தட்ட 1 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது என்பதை காட்டுகிறது.
இந்த பட்டியலில் முதல் இடத்தில் ஹூண்டாய் கிரெட்டா கார் இருக்கிறது. இந்த காரை பொருத்தவரை கடந்த மார்ச் மாதம் 18,059 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் வெறும் 16,458 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. இது 10 சதவீதம் வளர்ச்சியை காட்டுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எஸ்யூவி கார்கள் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. புதிதாக வாகனம் வாங்கும் பலர் எஸ்யூவி ரக கார்களை தான் அதிகம் விரும்புகிறார்கள். இது நிச்சயம் மக்கள் மத்தில் ஏற்றபட்டுள்ள மாற்றத்தை காட்டுகிறது. இன்னும் சில ஆண்டுகளுக்கு விற்பனை நிச்சயம் அதிகரிக்கும்.


Click it and Unblock the Notifications









