நம்பர் 1 இடத்தில் இந்த காரா? டாப் 10 எஸ்யூவி லிஸ்ட் இது தான்!
இந்தியாவில் கார்கள் விற்பனை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதனால் டாப் 10 கார்கள் பட்டியலில் பலபுதிய கார்கள் இடம்பெற்றுள்ளன. கார்களின் விற்பனை எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது. இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் விற்பனையான டாப் 10 கார்களின் பட்டியலையும் அதன் விற்பனை விபரங்களையும் காணலாம் வாருங்கள்.
10. மாருதி கிராண்ட் விட்டாரா
மாருதி நிறுவனத்தின் கிராண்ட் விட்டாரா கார் இந்த பட்டியலில் 10 இடத்தை பிடித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் மொத்தம் 11,339 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 10,148 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 12 சதவீதம் விற்பனை அதிகமாகியுள்ளது.

9. ஹூண்டாய் வென்யூ
ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ கார் இந்த பட்டியலில் 9 இடத்தை பிடித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் மொத்தம் 11,645 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 9754 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 19 சதவீதம் விற்பனை அதிகமாகியுள்ளது.
8. கியா சோனட்
கியா நிறுவனத்தின் சோனட் கார் இந்த பட்டியலில் 8 இடத்தை பிடித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் மொத்தம் 12,051 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 9255 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 30 சதவீதம் விற்பனை அதிகமாகியுள்ளது.

7. மாருதி விக்டோரிஸ்
மாருதி நிறுவனத்தின் விக்டோரிஸ் கார் இந்த பட்டியலில் 7 இடத்தை பிடித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் மொத்தம் 12,300 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் ஒரு கார் கூட விற்பனையாகவில்லை இந்த கார் சமீபத்தில்தான் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.
6. மாருதி பிரெஸ்ஸா
மாருதி நிறுவனத்தின் பிரெஸ்ஸா கார் இந்த பட்டியலில் 6 வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் மொத்தம் 13947 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 14918 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது7 சதவீதம் விற்பனை சரிவடைந்துள்ளது.

5. மாருதி ஃபிராங்க்ஸ்
மாருதி நிறுவனத்தின் ஃபிராங்க்ஸ் கார் இந்த பட்டியலில் 5வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் மொத்தம் 15,058 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 10,148 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 12 சதவீதம் விற்பனை அதிகமாகியுள்ளது.
4. மஹிந்திரா ஸ்கார்பியோ
மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ கார் இந்த பட்டியலில் 4வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் மொத்தம் 15,616 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 14,918 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 23 சதவீதம் விற்பனை அதிகமாகியுள்ளது.
3. ஹூண்டாய் கிரெட்டா
ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா கார் இந்த பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் மொத்தம் 17,344 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 15,452 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது12 சதவீதம் விற்பனை அதிகமாகியுள்ளது.
2. டாடா பஞ்ச்
டாடா நிறுவனத்தின் பஞ்ச் கார் இந்த பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் 18,753 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 15,435 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 21 சதவீதம் அளவிற்கு விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது.
1. டாடா நெக்ஸான்
டாடா நிறுவனத்தின் நெக்ஸான் கார் இந்த பட்டியலில் முதலில் இடத்தில் இருக்கிறது. கடந்த நவம்பர் மாதம் 22,434 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவேகடந்தாண்டு நவம்பர் மாதம் 15,329 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது இந்த காரின் விற்பனை 46 சதவீதம் அதிகமாகியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எஸ்யூவி கார்கள் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. இந்த கார்கள் தான் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகிறது. எதிர்காலத்தில் மற்ற செக்மெண்டில் உள்ள கார்கள் குறைந்தபட்ச விற்பனையை பெறவே திண்டாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









