2026ல் வரப்போகும் 10 எஸ்யூவி கார்கள்! ரொம்ப நாளா வெயிட் பண்ண கார் லிஸ்ட்ல இருக்குது!

இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கான டிமாண்ட் அதிகமாக உள்ளது. இந்த ரக வாகனங்கள் மீது மக்கள் எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது. இந்நிலையில் வரும் 2026ம் ஆண்டு அறிமுகமாகவுள்ள டாப் 10 எஸ்யூவி கார்கள் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டாடா நிறுவனம் வரும் 2026ம் ஆண்டு ஒன்று, இரண்டல்ல மொத்தம் மூன்று எஸ்யூவி கார்களை களம் இறக்க திட்டமிட்டுள்ளது. இதன்படி சியாரா இவி புதிய பஞ்ச் இவி மற்றும் அந்நிறுவனத்தின் புதிய அவ்னியா இவி ஆகிய கார்களை களமிறக்க திட்டமிட்டுள்ளது. இதில் அவ்னியா இவி கார் ஒரு பிரீமியம் லக்ஸரி காராகும். இந்நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய தயாரிப்புகளை களம் இறக்க திட்டமிட்டு வருகிறது. அதன் முக்கிய காராக அவனியா கார் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2030-ம் ஆண்டிற்குள் இந்நிறுவனம் மிகப்பெரிய அளவில் எலெக்ட்ரிக் கார்களை களம் இறக்க திட்டமிட்டு வருவதால் பெரும்பாலான கார்கள் எலெக்ட்ரிக் கார்களாகவே உள்ளன.

Top 10 Upcoming SUVs

இதில் சியாரா இவி கார் இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு முறை சார்ஜ் போட்டால் 500 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் உட்புறமும் வெளிப்புறமும் தற்போது விற்பனையில் இருக்கும். சியாரா கார் போலவே இருக்க வாய்ப்புள்ளது. அடுத்ததாக பஞ்ச் இவி காரை பொறுத்தவரை உட்புறமும் வெளிப்புறமும் அப்டேட் செய்யப்பட வாய்ப்புள்ளது. ஜாகுவார் நிறுவனத்தின் இஎம்ஏ கட்டுமானத்தில் உருவாக்கப்பட்ட காராக இருக்கும் என எதிர்பார்க்கலாம்

புதிய ரெனால்ட் டஸ்டர் மற்றும் நிஸான் டெக்டான்: ரெனால்ட் நிறுவனம் தனது புதிய டஸ்டர் காரை வரும் ஜனவரி 26ம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இந்த கார் முழுமையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் காராக உருவாக்கப்படுகிறது. இந்த கார் இரண்டு விதமான பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களில் இந்தியாவில் அறிமுகமாக வாய்ப்புள்ளது. சர்வதேச அளவில் விற்பனையாகி வரும் டஸ்டர் கார் போலவே இந்த கார் வடிவமைப்பு இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த காரை அடிப்படையாகக் கொண்ட நிஸான் நிறுவனத்தின் காராக டெக்டான் என்ற கார் வருகிறது. இந்த காரும் வரும் பிப்ரவரி மாதம் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Top 10 Upcoming SUVs
Top 10 Upcoming SUVs

மாருதி இ- விட்டாரா : மாருதி நிறுவனம் தனது முதல் எலக்ட்ரிக் காராக இ- விட்டாரா என்ற காரை களம் இறக்க திட்டமிட்டு வருகிறது. இந்த கார் கடந்த ஆண்டு காட்சிப்படுத்தப்பட்டாலும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் ஆகவில்லை. இந்த கார் இந்த 202ம்ம் ஆண்டு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் நிறுவனத்தின் ஹார்ட்ரேட் என்ற பிளாட்பார்மில் உருவாக்கப்பட்ட காராகவும் இந்த கார் பாரத் என்கேப் சோதனையில் 5 ஸ்டார் பெற்ற காராக இருக்கிறது. இந்த காரில் 49 கிலோ வாட் ஹவர் மற்றும் 61 கிலோ வாட் ஹவர் ஆகிய இரண்டு பேட்டரி அப்ஷன்கள் உள்ளன. முழுமையான சார்ஜில் 543 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா நிறுவனம் தனது எஸ்யூவி 700 காரை அடுத்த மாதம் அப்டேட் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த காரின் பெயரை எஸ்யூவி 7எக்ஸ்ஓ என மாற்ற அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கான புக்கிங் ஏற்கனவே இந்தியா முழுவதும் துவங்கி விட்டது. இதில் முக்கியமாக மூன்று டிஸ்ப்ளே கொண்ட செட்டப் காரின் உட்பகுதியில் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இது எக்ஸ்இவி 9எஸ் காரில் இருந்து பெறப்பட்ட அமைப்பாக இருக்கிறது. இதுபோக இந்நிறுவனம் விஷன் எஸ் என்ற கான்செப்ட்டை 2026ம் ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இது ஸ்கார்பியோ என் காரை அடிப்படையாகக் கொண்ட வடிவமைப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஹூண்டாய் நிறுவனம் முழுமையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட காம்பேக்ட்டான ஒரு எலெக்ட்ரிக் காரை 2026ம் ஆண்டு களமிறக்க திட்டமிட்டு வருகிறது. இந்த கார் சர்வதேச அளவில் இந்த பிராண்டின் கீழ் விற்பனையாகி வரும் இன்ஸ்டர் என்ற காரை அடிப்படையாகக் கொண்ட காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து கியா நிறுவனமும் தனது புதிய தலைமுறை வரும் ஜனவரி 2ஆம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதுவும் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு இடையில் உள்ள காராகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த பட்டியலில் மொத்தம் பத்துக்கும் மேற்பட்ட கார்கள் உள்ளன 2026ம் ஆண்டு எஸ்யூவி கார்கள் அதிகம் அறிமுகமாக திறமை பெற்றுள்ள நிலையில் இது நிச்சயம் மிகப்பெரிய மாற்றத்தை சமூகத்தில் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம். மக்கள் பலர் எஸ்யூவி பக்கம் திரும்பி வரும் நிலையில் இந்த கார்கள் எல்லாம் நிச்சயம் மிகப்பெரிய அளவில் விற்பனையை பெறும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, December 25, 2025, 12:55 [IST]
English summary
Top 10 upcoming suvs launching 2026 india
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X