25 கி.மீ மைலேஜ் வெறும் ரூ10 லட்சம் பட்ஜெட்டில் இவ்வளவு சூப்பரான காரெல்லாம் விக்குதா?
இந்தியாவில் உள்ள மக்கள் கார் வாங்கும் போது விலை குறித்து அதிகம் யோசிப்பார்கள். குறைவான விலையில் அதிக அம்சங்கள் மற்றும் கொடுக்கும் காசுக்கு சரியான தேர்வு செய்ய நினைப்பார்கள். இந்நிலையில் பெரும்பாலான மக்கள் ரூ10 லட்சத்திற்கு குறைவான விலையில் காரை வாங்க நினைக்கிறார்கள். அதன்படி இந்த ஆகஸ்ட் மாதம் ரூ10 லட்சத்திற்கும் குறைவான பட்ஜெட்டில் விற்பனையாகும் டாப் 5 கார்களை பற்றி காணலாம்.
மாருதி பலேனோ
கடந்த 10 ஆண்டுகளாக இந்த கார் இந்திய மார்கெட்டில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் குடுக்கும் காசுக்கு செம ஒர்த் என்ற பெயரை பெற்றுள்ளது. இந்த காரில் உள்ள வசதிகள், அம்சங்கள் எல்லாம் சிறப்பாக இருப்பதாக மக்கள் கருதுகின்றனர். இதனால் இந்த கார் நீண்ட நாட்களாக இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகி வருகிறது.

டாடா பஞ்ச்
இந்த கார் கடந்த 2021ம் ஆண்டு தான் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கார் இந்திய மார்கெட்டில் மிக வேகமாக பிரபலமாகி விட்டது. இந்த கார் மொத்தம் 31 விதமான வேரியன்ட்களி்ல கிடைக்கிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் ஏஎம்டி கியர் ஆப்ஷன்கள் உள்ளது. இந்த கார் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜியில் இயங்கம் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் வேரியன்ட்களை பொருத்தவரை ப்யூர், ப்யூர் (ஓ), அட்வெஞ்சர், அட்வெஞ்சர் பிளஸ், அட்வெஞ்சர் சன்ரூஃப், அட்வெஞ்சர் + சன்ரூஃப், அக்கம்பிளீஸ்டு, அக்கம்பிளீஸ்டு + சன் ரூஃப், கிரியேட்டிவ், கிரியேட்டிவ் + சன் ரூஃப் உள்ளிட்ட ஆப்ஷன்கள் இந்த காரில் உள்ளது. இந்த கார் இந்தியாவிலேயே அதிகமாக விற்பனையாகி வரும் கார்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த கார் ரூ6.20 லட்சம் முதல் ரூ10.17 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
மாருதி ஸ்விஃப்ட்
இந்திய மக்கள் மத்தியில் நீண்ட ஆண்டுகளாக நம்பிக்கையை பெற்ற கராக இருக்கிறது. சிறிய ரக காரை விரும்பும் மக்கள் பலர் இந்த காரை தான் விரும்பி வருகிறனர். இந்த கார் பெட்ரோல் இன்ஜின் உடன் எல்எக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ (ஓ), இசட்எக்ஸ்ஐ, இசட் எக்ஸ்(பிளஸ்) ஆகிய வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது.

இந்த கார் ரூ6.49 லட்சம் முதல் ரூ9.50 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரில் சிறப்பம்சமே இதன் மைலேஜ் தான் தான். இந்த கார் 25.75 கி.மீ மைலேஜை வழங்குகிறது. இந்த கார் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த காரின் அனைத்து வேரியன்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.
ஹூண்டாய் வென்யூ
இந்த பட்டியலில் உள்ள ஒரு எஸ்யூவி கார் இது தான் இந்த காரின் டாப் வேரியன்ட் ரூ10 லட்சம் என்ற பட்ஜெட்டை விட சற்று அதிகமாக இருந்தாலும் பேஸ் வேரியன்ட் ரூ10 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது. இந்த கார் ரூ7.94 லட்சம் முதல் ரூ13.53 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
இந்த கார் பெட்ரோல், டீசல், உடன் மொத்தம் 3 விதமான இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 1.0 லிட்டர் கப்பா பெட்ரோல் (5 ஸ்பீடு மேனுவல்), 1.0லி டர்போ சார்ஜ்டு பெட்ரோல் (6ஸ்பீடு மேனுவல், 7 ஸ்பீடு டிசிடி ஆட்டோ), 1.5 லி சிஆர்டிஐ டீசல் (6 ஸ்பீடு மேனுவல்) ஆகிய இன்ஜின் ஆப்ஷன்களுடன் இந்த கார் விற்பனையாகி வருகிறது.
மாருதி ஃபிராங்க்ஸ்
இந்த காரை பெஆரத்தவரை ஏகப்பட்ட பிரிமியம் அம்சங்கள் இருக்கிறது. இந்த காரில் க்ரூஸ் கண்ட்ரோல், ஹெட்ஸ்அப் டிஸ்பிளே, வயர்லெஸ் சார்ஜிங், 360 டிகிரி வியூ கேமரா, பின்பக்க ஏசி வென்ட்கள் இந்த காரில் உள்ளன. இந்த கார் மொத்தம் 2 விதமான இன்ஜின் ஆப்ஷன் உடன் கிடைக்கிறது. 1.0லி டர்போ சார்ஜ்டு பூஸ்டர் ஜெட், 1.2லி கே-சிரீஸ் டுயல் ஜெட் ஆகிய ஆப்ஷன்கள் உள்ளன. இது 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் உடனும் இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த ஆகஸ்ட் மாதம் நீங்கள் சொந்தமாக கார் வாங்க ஆசைப்பட்டு ரூ10 லட்சத்திற்குள் உங்கள் பட்ஜெட்டை வைத்திருந்தால் நிச்சம் மேலே உள்ள பட்டியலில் ஒரு காரை தேர்வு செய்யலாம். இது நிச்சயம் உங்களுக்கு உதவியாக இருக்கும். சிறப்பாகவும் இருக்கும். இந்த பட்டியலில் உங்களுக்கு பிடித்த கார் எது? கமெண்ட் செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications









