இந்த கார்களில் எந்த பக்கம் பாத்தாலும் காற்று பலூன்கள் இருக்கும்.. உசுருக்கு உத்தரவாதம் தரும் அம்சம்!!
கார்களில் பயணத்தின்போது பயணிகளுக்கு பாதுகாப்பான பயணத்தை வழங்குவதில் ஏர் பேக் (Airbag)-குகள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. இதனாலேயே இந்த அம்சத்தை சில நிறுவனங்கள் கார்களில் வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றன. விலை அதிகமான கார்களில் மட்டுமல்ல கம்மி விலை கார்களிலும் இந்த அம்சம் தற்போது வாரி வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், அதிகம் ஏர் பேக்குகளுடன் கம்மி விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் கார்களின் பட்டியலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio): இருப்பதிலேயே கம்மியான விலையில் அதிக இருக்கைகளைக் கொண்டிருக்கும் கார் மாடலாக இது இருக்கின்றது. இந்த கார் இந்தியாவில் ரூ. 5.64 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் அதிகபட்ச விலையே ரூ. 7.37 லட்சம் மட்டுமே ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

இதன் அனைத்து வேரியண்டுகளிலும் ஆறு ஏர் பேக்குகள் வழங்கப்பட்டு இருக்கும். இந்த காற்று பலூன்கள் விபத்தின்போது அனைத்து பக்கத்தில் இருந்தும் விரிந்து பயணிகளுக்கு பாதுகாப்பு தரும். முன் பக்கம் மற்றும் பக்கவாட்டு பக்கம் என எந்த பக்கத்தில் நம் உடல் மோதினாலும் அதற்கு பாதுகாப்பு தரும் வகையிலேயே முன் மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் ஏர் பேக்குகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
ஹூண்டாய் கிராண்டு ஐ10 நியாஸ் (Hyundai Grand i10 Nios): மாருதி சுஸுகி செலிரியோவை போலவே இந்த காரிலும் அனைத்து பக்கங்களிலும் ஏர் பேக்குகள் இடம் பெற்றிருக்கும். மேலும், இந்தியாவிலேயே இந்த செக்மெண்டில் இந்த அளவிற்கு அதிக காற்று பலூன்களைக் கொண்டிருக்கும் கார் மாடலாகவும் இதுவே காட்சியளிக்கின்றது.

இதனாலேயே என்னமோ இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் ஹேட்ச்பேக் ரக கார் மாடல்களில் ஒன்றாக இது இருக்கின்றது. இந்த கார் மாடல் ரூ. 5.98 லட்சம் தொடங்கி ரூ. 8.38 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். இந்த கார் இந்தியாவில் சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் என இரண்டு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
நிஸான் மேக்னைட் (Nissan Magnite): இந்தியாவில் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் எஸ்யூவி ரக கார் மாடல் இதுவாகும். இந்த கார் இந்தியாவில் ரூ. 6.12 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் அதிகபட்ச விலையே ரூ. 11.72 லட்சம் ஆகும். அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
இந்த காரில் ஆறு ஏர் பேக்குகள் மட்டுமல்ல மும்முனை சீட் பெல்ட் அம்சமும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இதுமட்டுமல்ல 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டிராக்சன் கன்ட்ரோல், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter): ஹூண்டாய் அதிக பாதுாப்பான அம்சங்களுடன், குறைவான விலையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். வெயிக்கிள் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஐசோஃபிக்ஸ் இருக்கை, ரியர் பார்க்கிங் கேமிரா, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்களை வழங்கி இருக்கின்றது. இதன் விலை ரூ. 6 லட்சம் தொடங்கி ரூ. 9.48 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift): இந்தியாவின் விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்றாக ஸ்விஃப்ட் இருக்கின்றது. இந்த கார் மாடல் இந்தியாவில் ரூ. 6.49 லட்சம் தொடங்கி ரூ. 9.50 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
ஆறு ஏர் பேக்குகள் மட்டுமல்ல ஹில் ஹோல்டு அசிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா, இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் மற்றும் ஐசோஃபிக்ஸ் இருக்கை மவுண்டுகள் உள்ளிட்டவையும் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டு இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார்களில் பாதுகாப்பை வழங்குவதில் ஏர் பேக்குகள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. ஆகையால், இந்த அம்சம் அதிகம் கொண்ட காரை வாங்க வேண்டும் என்பவர்கள் மேலே உள்ள கார் மாடல்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம். அனைத்தும் விலை குறைவானவை என்பதால் நடுத்தர மக்களாலும் இதை வாங்கிக் கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications








