எந்த கார் விலை ரொம்ப விலை குறையுது தெரியுமா? இதான் டாப் 5 லிஸ்ட்!

இந்தியாவில் வரும் 22ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றம் வருகிறது. வாகனங்கள் எல்லாம் ஜிஎஸ்டி வரி குறைகிறது. இதனால் வாகனங்களுக்கான விலையும் குறைகிறது. இந்தியாவில் அதிகமாக காம்பேக்ட் எஸ்யூவி ரக வாகன்ஙகள் விற்பனையாகும் நிலையில் எந்தெந்த வாகனங்கள் எவ்வளவு விலை குறைந்துள்ளது என்பதை வைத்து அதிக விலை குறையும் டாப் 5 வாகனங்களின் பட்டியலை தான் இங்கே காணப்போகிறேம்.

மாருதி பிரெஸ்ஸா

மாருதி பிரெஸ்ஸா கார் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட வாகனமாக இருந்தாலும் இது 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்உடன் வருகிறது. இதனால் இந்த வாகனத்திற்கு தற்போது 40 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இந்த வாகனத்திற்கு தற்போது 28 சதவீத ஜிஎஸ்டி மற்றும் 17 சதவீத செஸ் வரியுடன் சேர்த்து 45 சதவீத வரி விதிக்கப்படுகிறது இதனால் 5 சதவீத வரி குறையும்.

Top 5 Compact SUVs With GST 2 0 Benefits

பிரெஸ்ஸா கார் தற்போது ரூ8.69 லட்சம் முதல் ரூ13.98 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இது 45 சதவீத வரிக்கான விலை இந்த கார் செப் 22க்கு பிறகு ரூ30,000- ரூ48,000 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இதனால் இந்த வாகனத்தின் விலை இனி ரூ8.39 லட்சம் முதல் ரூ13.50 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வருகிறது.

ஹூண்டாய் வென்யூ

ஹூண்டாய் வென்யூ காரை பொருத்தவரை 1.0 லி மற்றும் 1.2லி மற்றும் 1.5 லி டீசல் ஆகிய 3 விதமான இன்ஜின் ஆப்ஷன்களில் வருகிறது. இதில் தற்போது உள்ள நிலவரப்படி பெட்ரோல் காருக்கு 28 சதவீத ஜிஎஸ்டி மற்றம் 1 சதவீத செஸ் வரி சேர்த்து 29 சதவீத வரியும், டீசல் காருக்க 28 சதவீத ஜிஎஸ்டி மற்றும் 1 சதவீத செஸ் வரி சேர்த்து 31 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இனி இந்த இரண்டு கார்களுக்கும் 18 சதவீத செஸ் வரி தான் விதிக்கப்படும்.

Top 5 Compact SUVs With GST 2 0 Benefits

வென்யூ காரை பொருத்தவரை தற்போது ரூ7.94 லட்சம் முதல் ரூ13.38 லட்சம் வரை விற்பனவையாகி வருகிறது. இந்த காருக்கு இனி ரூ68 ஆயிரம் முதல் ரூ1.32 லட்சம் வரை விலை குறைய வாய்ப்புள்ளது. அதன்படி பார்த்தால் இனி இந்த கார் ரூ7.26 லட்சம் முதல் ரூ12.05 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

கியா சோனட்

கியா நிறுவனத்தின் சோனட் காருக்கு ரூ1.65 லட்சம் வரை விலை குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இந்த காரும் வென்யூ கார்போலவே இன்ஜின் ஆப்ஷன் கொண்டது. இதனால் இதற்கு பெட்ரோல் காருக்கு 29 சதவீதமும், டீசல் காருக்கு 31 சதவீதமும் வரி இருக்கிறது. இனி இது 18 சதவீதமாக குறையும் என்பதால் அதிக விலை குறைப்பு இந்த காரிலும் நிகழப்போகிறது.

Top 5 Compact SUVs With GST 2 0 Benefits

தற்போது கியா சோனட் கார் ரூ8 லட்சம் முதல் ரூ15.74 லட்சம் வரை விற்பனையாகி வருகிறது. ஜிஎஸ்டி வரி குறைப்பில் இந்த கார் ரூ70 ஆயிரம் முதல் ரூ1.64 லட்சம் வரை விலை குறைப்போகிறது. இதனால் இந்த கார் இனி ரூ7.03 லட்சம் முதல் ரூ14.10 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

டாடா நெக்ஸான்

டாடா நிறுவனம் நெக்ஸான் காரை விற்பனை செய்து வரும் நிலையில் இந்த கார் ஹூண்டாய் வென்யூ, கியா சோனட் கார் போலவே விலை குறைப்பை சந்திக்கவுள்ளது. இந்த காரும் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. பெட்ரோல் இன்ஜின் காருக்கு தற்போது 29 சதவீதமும், டீசல் இன்ஜின் காருக்கு ரூ31 சதவீதமும் வரி விதிக்கப்படுகிறது. இனி இது 18 சதவீதமாக குறைகிறது.

இதனால் டாடா நெக்ஸான் கார் ரூ8 லட்சம் முதல் ரூ15.40 லட்சம் வரை விற்பனையாகி வருகிறது. இனி ரூ68 ஆயிரம் முதல் ரூ1.55 லட்சம் வரை விலை குறைகிறது. இதனால் இந்த கார் ரூ7.32 லட்சம் முதல் ரூ13.88 லட்சம் வரை விற்பனையாகிறது. நெக்ஸானில் இவி காரும் இருக்கிறது. அதன் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ

மஹிநதரிா நிறுவனம் தனது எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரை சிறப்பாக விற்பனை செய்து வரும் நிலையில் கடந்த 6ம் தேதி முதல ஜிஎஸ்டிக்கு பிறகான விலை குறைப்பை தள்ளுபடியாக வழங்க துவங்கிவிட்டது. இந்த கார் இந்த காரிலும் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் கார்கள் உள்ளன. இதில் பெட்ரோல் இன்ஜின் காருக்கு 29 சதவீத வரியும், டீசல் காருக்கு 31 சதவீத வரியும் விதிக்கப்படுகிறது.

இந்த மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார் ரூ7.99 லட்சம் முதல் ரூ15.80 லட்சம் வரையிலான விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் இனி ரூ71,000 முதல் ரூ1.56 லட்சம் வரை விலை குறைய வாய்ப்புள்ளது. இந்த கார் இனி ரூ7.28 லட்சம் முதல் ரூ14.40 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த பண்டிகை காலத்தில் வாகனம் வாங்க நினைத்தவர்களுக்கு ஜாக்பாட்டாக ஜிஎஸ்டி வரி குறைப்பு வருகிறது. இதனால் கார் வாங்க நினைத்த பலர் குறைந்த விலையில் கார் வாங்கலாம். அல்லது அவர்களது பட்ஜெட்டிற்கு ஏற்றவாறு அதிக வேரியன்ட் அல்லது வேறு காரை கூட தேர்வு செய்யலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, September 13, 2025, 19:30 [IST]
English summary
Top 5 compact suvs with gst 2 0 benefits save up to rs 1 64 lakh
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X