28 கி.மீ மைலேஜ் தரும் கார்! காசை மிச்சப்படுத்த இந்த காரெல்லாம் நல்ல சாய்ஸ்!

இந்தியாவில் அதிக மைலேஜ் கொண்ட கார்கள் அதிகம் விற்பனையாகி வருகிறது. இந்திய மார்கெட்டில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இப்படியாக அதிக மைலேஜ் தரும் வாகனங்களை தயாரித்து வருகின்றனர். இந்த வகையில் இந்தியாவில் மைலேஜ் அதிகமாக தரும் பெட்ரோல், டீசல், ஹைபிரிட் ஆகிய கார்களில் டாப் 5 பட்டியலை இங்கே வழங்கியுள்ளோம். இதில் சிஎன்ஜி கார்கள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

மாருதி டிசையர் -25.71 கி.மீ

மாருதி நிறுவனத்தின் டிசையர் கார் அதிகம் விற்பனையாகி வரும் கார்களில் ஒன்றாக இருக்கிறது. இந்நிறுவனம் 1.3 லிட்டர் 3 சிலிண்டர் இசட் சிரீஸ் பெட்ரோல் இன்ஜின் இதில் பொரத்தப்பட்டுள்ளது. இது 82 எச்பி பவரையும், 112 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் உடன் வரும் வேரியன்ட் 25.71 கி.மீ மைலேஜை வழங்குகிறது.

Top 5 highest mileage cars

மாருதி ஸ்விஃப்ட் -25.75 கி.மீ

மாருதி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் காரும் அதிக மைலேஜ் தரும் கார்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த காரில் 1.2 லிட்டர் நேச்சுரலி எஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் மறஅறம் 5 ஸ்பீடு ஏஎம்டி ஆகிய கியர் ஆப்ஷன்கள் உள்ளன. இந்த கார் ஏஎம்டியில் 25.75 கி.மீ மைலேஜையும், மேனுவல் கியரில் 24.8 கி.மீ மைலேஜையும் வழங்குகிறது.

மாருதி செலிரியோ - 26 கி.மீ

மாரதி நிறுவத்தின் செலிரியோ கார் அதிக மைலேஜ் தரும் பெட்ரோல் கார்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த காரில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் எல்எக்ஸ்ஐ மேனுவல் வேரியன்டில் 25.24 கி.மீ மைலேஜையும், மிட் மற்றும் டாப் வேரியன்டில் 24.97 கி.மீ மைலேஜையும் வழங்குகிற. ஏஎம்டி வேரியன்டில் 26 கி.மீ வரை மைலேஜ் தரும் என சான்றிழிக்கப்பட்டுள்ளது.

Top 5 highest mileage cars

ஹோண்டா சிட்டி இ: எச்இவி 27.26 கி.மீ

செடான் காரில் அதிக மைலேஜ் தரும் கார் ஹோண்டா நிறுவனத்தின் சிட்டி ஹைபிரிட் கார் தான் இந்த கார் 27.26 கி.மீ மைலேஜ் தரும் என சான்றழிக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 1.5 லிட்டர் அட்கின்சன் சைக்கிள் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டள்ளது. இந்த இன்ஜின் 100 எச்பி பவரையும், 131 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தியுள்ளது. இந்த கார் இ20 பெட்ரோலை ஏற்றுக்கொள்ளும் வகையில் இன்ஜினை கொண்டுள்ளது.

டொயோட்டா ஹைரைடர்/ மாருதி கிராண்ட் விட்டாரா - 27.97 கி.மீ

மாருதி நிறுவனத்தின் கிராண்ட் விட்டாரா மற்றம் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஆகிய கார்களின் மைலேஜ் அதிகமாக இருக்கிறது. இரண்டு கார்களும் ஒரே தொழிற்நுட்பத்தை தான் பகிர்ந்து கொள்கின்றன. இந்த காரில் 1.5 லிட்டர் அட்கின்சன் சைக்கிள் பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளது. இந்த கார் 27.97 கி.மீ மைலேஜை வழங்குகிறது.

Top 5 highest mileage cars

டொயோட்டா மற்றும் சுஸூகி ஆகிய நிறுவனங்களுக்கு இடையே சர்வதேச அளவில் உள்ள ஒப்பந்தம் காரணமாக கார்கள் பகிரப்படுகிறது. இதனால் இரு நிறுவனங்களும் ஒரே தொழிற்நுட்பம் கொண்ட கார்களை பகிர்ந்து கொள்கிறது. இந்த கார்கள்மார்கெட்டில் நல்ல மதிப்பை பெற்றுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிகம் மைலேஜ் தரும் டாப் 5 கார்கள் இது தான். இது தான் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. இதில் சிஎன்ஜி ஆப்ஷன்கள் சேர்க்கப்படவில்லை. இதனால் நீங்கள் சிஎன்ஜி இல்லாமல் கார் வாங்க நினைத்தால் இது ஒரு நல்ல ஆப்ஷனாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Sunday, August 17, 2025, 16:49 [IST]
English summary
Top 5 highest mileage cars in india
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X