லாரியே வந்து மோதுனாலும் ஒன்னும் ஆகாது! இந்தியாவிலேயே பாதுகாப்பான டாப் 5 கார்கள் இது!

இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும பாதுகாப்பாக கார்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது. சாலையில் பயணிக்கும்போது பாதுகாப்பு மிக அவசியமான ஒன்று என்பதை மக்கள் புரிந்து கொள்ள துவங்கிவிட்டனர். இந்நிலையில் இந்தியாவில் கார்களின்பாதுகாப்பை மதிப்பிடும் பாரத் என்கேப் என்ற சோதனை முறை இருக்கிறது. இதில் அதிக புள்ளிகளை பெற்ற டாப் 5 கார்கள் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ்:

டொயோட்டா நிறுவனம் தனது இன்னோவா ஹைகிராஸ் காருக்கு இந்த சோதனையில் 5 ஸ்டார்களை பெற்றுள்ளது. இந்த கார் டிஎன்ஜிஏ தளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் அதிக பாதுகாப்பு வசதிகளை வழங்குகிறது. இந்த காரில் உள்ள முக்கியமான சில அம்சங்கள் தான் இந்த காருக்கு இவ்வளவு பாதுகாப்புகளை வழங்குகிறது.

Top 5 Safest Cars in India

இந்த காரில் டைனமிக் ரேடார் க்ரூஸ் கண்ட்ரோல், பிளைன்ட் ஸ்பாட் மானிட்டரிங், 6 ஏர்பேக்குகள், வெஹிகிள் ஸ்டெபிளிட்டி கண்டரோல், டிராக்ஷன் கண்ட்ரோல், ஆண்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் பிரேக்ஃபோர்ஸ் டிஸ்ட்ரிஃப்யூஷன், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் கண்ட்ரோல், ரியர் பார்க்கிங் கேமரா, முன்பக்கமும், பின்பக்கமும் பார்க்கிங் சென்சார், அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

டாடா ஹாரியர் இவி:

டாடா ஹாரியர் இவி காரை பொருத்தவரை இந்தியாவில் பாதுகாப்பான ஆல்வீல் டிரைவ் கொண்ட எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் ஆகும். இந்த காரும் பாரத் என்கேப் சோதனையில் 5 ஸ்டார்களை பெற்றுள்ளது. பெரியவர்களுக்கான பாதுகாப்பு சோதனையில் 32க்கு 32 புள்ளிகளையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பு சோதனையில் 49க்கு 45 புள்ளிகளையும் பெற்றுள்ளது.

Top 5 Safest Cars in India

இந்த காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை எச்டி ரியர் வியூ கேமரா, 7 ஏர்பேக்குகள்,20க்கும் அதிகமான அம்சங்கள் கொண்ட அடாஸ் லெவல் 2 தொழிற்நுட்பம், 540 டிகிரி டிரான்ஸ்பரன்ட் மோடு, 360 டிகிரி மகேமரா, ஐ-விபிஏசி உடன் கூடி இஎஸ்பி, எஸ்ஓஎஸ் கால் ஃபங்சன், ஹில் டிசென்ட் கண்ட்ரோல், ஹில் ஹோல்டு அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

மாருதி டிசையர்:

இந்தியாவில் பாதுகாப்பான முதல் செடான் காராக மாருதி டிசையர் கார் தான் இருக்கிறது. இந்த கார் பாரத் என்கேப் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. இந்த காரில் 6 ஏர்பேக்குகள் அனைத்து வேரியன்ட்களிலும் வழங்கப்பட்டுள்ளன. இதில் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராமும் அனைத்து வேரியன்ட்களிலும் உள்ளன. இது 5ம் தலைமுறை ஹார்ட்டிரெக்ட் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டது.

Top 5 Safest Cars in India

டிசையர் கார் காரில் ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. முக்கியமாக ஹில் ஹோல்டு அசிஸ்ட், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், 360 வியூ கேமரா, ஸ்பீடு சென்சிடிவ் டோர் லாக்கிங், ஹைஸ்பீடு வார்னிங் அலர்ட், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

கியா சைரோஸ்:

கியா நிறுவனத்தின் சைரோஸ் கார் தான் அந்த நிறுவனத்திலேயே பாரத் என்கேப் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற முதல் எஸ்யூவி கார் ஆகும். இந்த கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 32க்கு 30.21 புள்ளிகளையும், குழந்தைகளுக்கு49க்கு 44.42 புள்ளிகளையும் பெற்றள்ளது. இந்த காரில் ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

Top 5 Safest Cars in India

இந்த காரில் 16 ஆட்டோமெட்டிக் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய லெவல் 2 அடாஸ் தொழிற்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது. இதில் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், வெஹிகிள் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட், 6 ஏர்பேக்குகள், 20க்கும் அதிகமான ஆக்டிவ் மற்றும் பாசிவ் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

ஸ்கோடா கைலாக்:

பாரத் என்கேப் சோதனையில் முதல் ஸ்கோடா காராக கைலாக் கார் தான் சோதனை செய்யப்பட்டது. இந்த கார் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றளது. இந்த கார் பெரியவர்களுக்கான சோதனையில் 32க்கு 30.88 புள்ளிகளையும் குழந்தைகளுக்க 49க்கு 45 புள்ளிகளையும் பெற்று்ளது. இந்த கார் அதன் செக்மெண்டிலேயே பாதுகாப்பான காராக மாறியுள்ளது.

இந்த காரில் 25 அட்வான்ஸ்டு அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ரோல் ஓவர் புரோடெக்ஷன், ஹில் ஹோல்டு கண்ட்ரோல், மல்டி கோலிஷன் பிரேக்கிங் மற்றும் ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பாதுகாப்பான கார்களுக்கு நல்ல மவுசு எப்பவும் இருக்கிறது. இந்நிலையில் இந்த கார்கள் டாப் 5 கார்களாக உள்ளன. இந்த கார்களின் விற்பனை அதிகமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கிறது. இதில் உங்களுக்கு பிடித்த காரை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Monday, July 28, 2025, 13:20 [IST]
English summary
Top 5 safest cars in india with 5 star rating in bncap
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X