7 பேர் போற கார் 26 கி.மீ மைலேஜ் தருனுன்னா யாரு விடுவாங்க! இவ்வளவு பேர் இந்த காரெல்லாம் வாங்கிட்டாங்களா?
இந்தியாவில் எம்பிவி ரக கார்களின் விற்பனை கணிசமாக இருந்து வருகிறது. அதிக இடவசதி மற்றும் பிரக்டிக்கல் அம்சங்கள் காரணமாக இந்த கார்கள் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் இந்த நிதியாண்டில் முதல் அரையாண்டிற்கான எம்பிவி கார்கள் விற்பனை பட்டியலில் வெளியாகியுள்ளது. இதில் அதிகம் விற்பனையான கார்கள் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மாருதி எர்டிகா
இந்த பட்டியலில் வழக்கம்போல மாருதி நிறுவனத்தின் எர்டிகா கார் தான் இருக்கிறது. கடந்த 6 மாதத்தில் 93,235 பேர் இந்த காரை வாங்கியள்ளனர். இது கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டு விற்பனை ஒப்பிடும் போது 2 சதவீதம் விற்பனை சரிவடைந்துள்ளது. அந்த காலத்தில் 95,061 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது.

இந்த கார் 7 சீட்டர் ஆப்ஷனில் கிடைக்கிறத. இந்த கார் அதிகமாக விற்பனையாக இடவசதி ஒரு காரணமாக இருந்தாலும் அதிக மைலேஜ் மற்றும் குறைந்தவிலை மற்றொரு முக்கியமான காரணம் ஆகும். இந்த காரில் 20.51 கி.மீ மைலேஜ் பெட்ரோல் வேரியன்டிலும், 26.11 கி.மீ மைலேஜ் சிஎன்ஜியிலும் கிடைக்கிறது. இந்த கார் ரூ8.80 லட்சம் முதல் விற்பவனையாகி வருகிறது.
டொயோட்டா இன்னோவா
டொயோட்டா நிறுவனம் இன்னோவா பெயரில் ஹைகிராஸ் மற்றம் கிரைஸ்டா ஆகிய இரண்டுவிதமான கார்களை விற்பவனை செய்து வருகிறது. இந்த கார் இந்தபட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறது. கடந்த 6 மாதத்தில் 50,707 கார்கள் விற்பனையாகியுள்ளது. இந்த காரில் ஹைபிரிட் ஆப்ஷன் இருப்பது வாடிக்கையாளர்களை அதிகம் ஈர்க்கிறது.இந்த கார் விலை அதிகமாக இருந்தாலும் சமூகத்தில் ஒரு அந்தஸ்தை தரும் கார் என்பதால் மக்கள் விரும்பி வாங்கி வருகின்றனர்.

இந்த விற்பனையில் 61 சதவீதம் ஹைகிராஸ் கார் தான் பெற்றுள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரை நடந்த விற்பனையில் 15483 ஹைகிராஸ் காரும் 9900 கிரைஸ்டா காரும் விற்பனையாகியுள்ளது. இதில் ஹைகிராஸ் கார் 20-23 கி.மீ வரை மைலேஜை வழங்குகிறது. கிரைஸ்டா காரை பொருத்தவரை டீசல் இன்ஜின் பிரியர்களின் தேர்வாக உள்ளது. இந்த கார் மறு விற்பனை மதிப்பு சிறப்பாக இருப்பதால் அதிகம் விற்பனையாகிறது.
கியா கேரன்ஸ்
கியா நிறுவனத்தின் கேரன்ஸ் கார் வளர்ச்சியில் சிறப்பான விற்பனையை பெற்று வருகிறது. இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்த காரின் விற்பனையில் 25 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மொத்தம் 37,360 கார்கள் விற்பனையாகியுள்ளது. இது அந்நிறுவனத்திற்கு சிறப்பான வளர்ச்சியை தருகிறது.

இந்த கியா கேரன்ஸ் கார் 6 மற்றும் 7 சீட்டர் செட்டப்பிகல் கிடைக்கிறது. மொத்தம் நடந்த விற்பனையில் 95 சதவீதம் 7 சீட்டர் காரின் விற்பனை தான். இதன் பெட்ரோல் வேரியன்ட் 58 சதவீத விற்பனையை பெற்றுள்ளது. மேலும் 32 சதவீத வாடிக்கையார்கள் ஆட்டோமெட்டிக் அல்லது இன்டலிஜென்ட் மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷனை தேர்வு செய்துள்ளனர். மேலும் இந்த காரின் பிரிமியம் வெர்ஷனாக கேரன்ஸ் கிளாவிஸ் காரையும், அதன் இவி வெர்ஷனையும் அந்நிறுவன்ம் வெளியிட்டுள்ளது.
மாருதி எக்ஸ்எல்6
மாருதி நிறுவனம் எக்ஸ்எல் 6 என்ற பெயரில் எர்டிகாவிற்கு துணையாக ஒரு காரை விற்பனை செய்து வருகிறது. இது பிரிமியம் செக்மெண்ட் கார் என்பதால் நெக்ஸா டீலர்ஹிப்களில் மட்டுமே இது கிடைக்கிறது. இந்நிலையில் இந்த நிதியாண்டின் முதல் அரையாண்டு விற்பவனையில் இந்த காரின் விற்பனை 2 சதவீதம் குறைந்துள்ளது. மொத்தமே 19631 கார்கள் தான் தற்போது விற்பனையாகியுள்ளது.
எர்டிகா மற்றும் எக்ஸ்எல்6 காரில் ஒரே மாதிரியான இன்ஜின் தான் இருக்கிறது. இரண்டு காரிலும் 1.5 லிட்டர் மைல்டு ஹைபிரிட் சிஸ்டம் பொருத்தப்பட்ட இன்ஜின் தான் இருக்கிறது. இதில் எக்ஸ்எல் 6 கார் பிரிமியமான உட்புற வசதிகளை கொண்டுள்ளது.
டொயோட்டா ரூமியான்
டொயோட்டா நிறுவனத்தின் ரூமியான் காரை பொருத்தவரை கடந்த 6 மாதத்தில் மொத்தம் 11,588 கார்கள் விற்பனையாகியுள்ளன. இது கடந்தாண்டு நடந்த விற்பனையை ஒப்பிடும் போது 24 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. இது எர்டிகா காரின் டொயோட்டா வெர்ஷன் ஆகும். இந்தகார் குடும்பத்துடன் பயணிக்க ஏற்ற காராக இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் குடும்பத்துடன் பயணிக்க ஏற்ற கார்கள் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. இந்த கார்களை மக்கள் அதிகம் விரும்பி வாங்கி வருகின்றனர். இந்நிலையில் இந்த கார்களை மக்கள் விரும்ப மற்றொரு காரணம் மைலேஜ். இந்தபட்டியலில் உங்களுக்கு பிடித்த காரை கமெண்ட் செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications









