இந்த 8 விஷயம் தான் ஹைலைட்டே! டாடா சியாரா காரை வாங்க இப்பவே ரெடியாகுங்க!
டாடா நிறுவனம் தனது புதிய டாடா சியாரா காரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த காரின் அதிகாரப்பூர்வமான அறிமுகம் நவம்பர் 25ம் தேதி நடக்கிறது. அப்பொழுது தான் இந்த காரின் விலை குறித்த விபரங்கள் வெளியிடப்படும் மற்றபடி இந்த காரில் உள்ள மற்ற விஷயங்கள் எல்லாம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இந்த காரில் 8 முக்கியமான அம்சங்கள் உள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
1. 3 ஸ்கிரீன் செட்டப்
இந்த டாடா சியாரா காரின் ஹைலைட்டே 3 ஸ்கிரீன் செட்டப் கொண்ட டேஷ்போர்டு தான். இதில் டிரைவர் டிஸ்பிளே, இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பயணிகளுக்கான ஸ்கிரீன் என 3 டிஸ்பிளே ஒரே பேனலில் வழங்கப்பட்டுள்ளது. இது இந்த செக்மெண்டிலேயே முதன் முறையாக வரும் அம்சம் ஆகும். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில்இந்த செட்டப்பு உடன் வரும் முதல் கார் இது தான். இதில் கனெக்டெட் கார் தொழிற்நுட்பம் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே உடன் வருகிறது.

2. லெவல் 2 அடாஸ்
டாடா நிறுவனத்தின் ஹாரியர் மற்றும் சஃபாரி கார்களில் உள்ளதை போல இந்த காரிலும் லெவல் 2 அடாஸ் தொழிற்நுஅடபம் இடம்பெறுகிறது. இதில் லேன் கீப் அசிஸ்ட், ஆட்டோ எமர்ஜென்ஸி பிரேக்கிங், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், பிளைன்ட் ஸ்பாட் மானிட்டரிங் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3. பானரோமிக் சன்ரூஃப்
மிட்-சைஸ் செக்மெண்டில் ஏகப்பட்ட கார்கள் பானரோமிக் சன் ரூஃப் உடன் வருகிறது. இதனால்இந்த காரிலும் அந்த அம்சம் இடம்பெற வேண்டியது கட்டாயமாக இருக்கிறது. இதில் டாடா நிறுவனம் பெரிய பானரோமிக் கிளாஸ் ரூஃபை வழங்கியுள்ளது. இது காருக்குள் நல்ல வெளிச்சத்தையும், நல்ல பயண அனுபவத்தையும் வழங்கும் வகையில் இருக்கிறது.

4. 360 டிகிரி கேமரா
போட்டியாளர்களில் உள்ள கார்களை போல டாடா நிறுவனம் தனது காரில் 360 டிகிரி கேமராவை வைத்துள்ளது. இதில் பல்வேறு வசதிகள் கிடைக்கும். முக்கியமாக காரின் பாதுகாப்பு தன்மை அதிகரிக்கும். குறிப்பாக குறுகலான இடத்தில் காரை பார்க் செய்யம் போது இது உதவியாக இருக்கும். இந்த வசதி ஒட்டு மொத்த டிரைவிங் அனுபவத்தையே மேம்படுத்தும்.
5. டுயல் ஸோன் கிளைமேட் கண்ட்ரோல்
டாடா மோட்டார் நிறுவனம் புதிய சியாரா காரில் டுயல் ஸோன் கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டத்தை உருவாக்கியள்ளது. இது டிரைவர் மற்றும் மற்ற பயணிகளுக்கான குளிர் அளவை மாற்ற உதவியாக இருக்கிறது. இதே அம்சம் ஹாரியர் மற்றும் சஃபாரி காரில் இருக்கிறது.

6. எலெக்ட்ரானிக் டெயில் கேட்
டாடா நிறுவனம் சியாரா காரில் எலெக்ட்ரானிக் டெயில் கேட் அம்சம் இருக்கிறது. இது போட்டியாளர்களின் காரில் இல்லை. இதனால் சற்று வித்தியாசமான அம்சம் எதிர்பார்ப்பவர்களுக்கு இபந்த கார் ஒரு நல்ல வாய்ப்பு தான். அதே நேரம் மாருதி விக்டோரிஸ் மற்றும் டாடா கர்வ் காரில் இந்த அம்சம் இருக்கிறது. மற்ற கார்களில் இல்லை.
7. அட்ஜெஸ்டபிள் தொடை சப்போர்ட்
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் செக்மெண்டிலேயே முதன் முறையாக அட்ஜெஸ்டபிள் தொடை சப்போர்ட் சிஸ்டத்தை இந்தகாரில் கொசண்டு வந்துளு்ளது. இது மேனுவல் அட்ஜெஸ்ட்மென்ட் தான். ஆனால் மக்களுக்கு சொகுசான பயண அனுபவத்தைஇது வழங்கும். முக்கியமாக உயரமாக உள்ள பயணிகளுக்கு இது வசதியாக இருக்கும்.
8. ஜேபிஎஸல் சவுண்ட் சிஸ்டம்
டாடா சியாரா காரில் அந்நிறுவனம் 12 ஸ்பீக்கர் கொண்ட ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டத்தை டால்பி அட்மாஸ் சிஸ்டத்துடன் இணைத்து உருவாக்கியளு்ளது. இந்த சிஸ்டம் டேஷ்போர்டில் சோனிக் ஷாஃப்ட் சவுண்ட் பார் அம்சம் இருக்கிறது. இது பயணிகளுக்கு வித்தியாசமான ஆடியோ அனுபவம் மற்றும் பயணிகள் அனுபவத்தை வழங்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா நிறுவனத்தின் சியாரா கார் மிகப்பெரிய எதிர்பார்ப்பின் கீழ் களம் இறங்குகிறது.இந்த காரில் உள்ள முக்கியமான சில அம்சங்கள் போட்டியாளர்கள் காரில் இல்லாததால் மக்கள் பலர் இந்த காரை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. நிச்சயம் இந்த காரின் விற்பனை சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









