அளவில் எல்லாமே ஒரே மாதிரி தான் இருக்கும்... 10 லட்ச ரூபாயில் கார் வாங்குவதாக இருந்தால் இதை செக் பண்ணுங்க!
மலிவு விலை கார்களில் பொதுவாக 7 அல்லது 8 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்கள் வழங்கப்படும் நிலையில், மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் சில கார்களில் 9 இன்ச் ஸ்மார்ட்பிளே புரோ+ டச் ஸ்கிரீன் (SmartPlay Pro+ touchscreen) வசதி வழங்கப்படுகிறது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) ரூ.10 லட்சத்திற்கும் குறைவாகவே உள்ளது. இந்த வகையில், மாருதி சுஸுகி பலேனோ (Baleno) மற்றும் ஃபிரான்க்ஸ் (Fronx) போன்ற கார்களில் இந்த வசதி கிடைக்கிறது.

மாருதி சுஸுகி ஃபிரான்க்ஸ் ஜெட்டா டர்போ (பெட்ரோல்) காரில், இந்த 9 இன்ச் ஸ்மார்ட்பிளே புரோ+ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்படுகிறது. இதன் விலை ரூ.10 லட்சத்திற்கும் குறைவாகவே உள்ளது. வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகளுடன், ஆர்காமிஸ் வழங்கும் 'சரவுண்ட் சென்ஸ்' தொழில்நுட்பமும் இதில் உள்ளது.

மாருதி சுஸுகி பலேனோ மற்றும் டொயோட்டா கிளான்ஸா ஆகிய இரு ஹேட்ச்பேக் கார்களும், அவற்றின் டாப்-எண்ட் வேரியண்ட்களில் 9 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை வழங்குகின்றன. மாருதி சுஸுகி பலேனோ ஆல்ஃபா (பெட்ரோல்) மற்றும் டொயோட்டா கிளான்ஸா வி (பெட்ரோல்) ஆகியவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலையும் ரூ.10 லட்சத்திற்குக் குறைவாகவே உள்ளன.

இந்த இரண்டு கார்களிலும் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே (HUD) மற்றும் 360-டிகிரி கேமரா போன்ற வசதிகள் டாப் வேரியண்ட்களில் கிடைக்கின்றன. இந்த இரு ஹேட்ச்பேக் கார்களையும் ஒன்றாக பார்ப்பதற்கு காரணம், பலேனோவின் அடிப்படையில்தான் கிளான்சா உருவாக்கப்படுகிறது. அதாவது, சுஸுகி-டொயோட்டா கூட்டணியில்தான் இந்த இரு கார்களும் உருவாக்கப்படுகின்றன.

இவற்றை போன்று, மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் சமீபத்திய அப்டேட் வெர்சனில், அதன் உயர் ரக வேரியண்ட்களில் 9-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. ஸ்விஃப்ட் காரின் இசட்.எக்ஸ்.ஐ பிளஸ் (பெட்ரோல்) வேரியண்ட், ரூ.10 லட்சம் பட்ஜெட்டிற்குள் வருகிறது. வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ/ ஆப்பிள் கார்பிளே, வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் பின்புற ஏசி வென்ட்கள் போன்ற தொழில்நுட்ப அம்சங்கள் இந்த காரில் இடம்பெறுகின்றன.

பிரபலமான காம்பாக்ட் செடான் மாடலான மாருதி சுஸுகி டிசையர், அதன் உயர் ரக வேரியண்ட்களில் 9-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை வழங்குகிறது. டிசையர் இசட்.எக்ஸ்.ஐ பிளஸ் (பெட்ரோல்) வேரியண்ட் ரூ.10 லட்சம் விலைப் பிரிவில் வருகிறது. இந்த செடான் காரில் வயர்லெஸ் ஸ்மார்ட்போன் இணைப்பு மற்றும் 360-டிகிரி கேமரா போன்ற தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன.

இந்த லிஸ்ட்டில் மாருதி சுஸுகி அல்லாத காராக, மஹிந்திரா பொலேரோ நியோவின் மிட்-ரேஞ்ச் வேரியண்ட்கள் புதிய 9-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் திரையுடன் வருகின்றன. வழக்கமான பொலேரோ காருடன் சேர்த்து, பொலேரோ நியோ காரையும் அப்டேட் செய்து கடந்த அக்.7ஆம் தேதியில் மஹிந்திரா அறிமுகம் செய்திருந்தது. இந்த உறுதியான மஹிந்திரா எஸ்யூவி காரில் வயர்டு ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதிகள் கிடைக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்ஃபோடெயின்மெண்ட் திரை ஆனது அதன் பெயருக்கேற்ப பயணிகளுக்கு பொழுதுப்போக்கு அம்சங்களை வழங்குவதுடன், டிரைவருக்கு தேவையான விபரங்களையும் வழங்கக்கூடியதாக உள்ளது. இதனாலேயே இந்த திரையை கொஞ்சம் பெரியதாக வாங்குவது நல்லது. 9-இன்ச்சை காட்டிலும் பெரிய அளவிலான 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் திரையும் இவ்வாறான பட்ஜெட் விலையிலான கார்களில் வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









