தகர டப்பா எல்லாம் பழைய கதை, மாருதி கிட்ட இவ்வளவு 5 ஸ்டார் ரேட்டிங் கார் எல்லாம் இருக்குதா?
மாருதி நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனம். இந்நிலையில் இந்நிறுவனத்தில் தயாரிப்புகள் அதிக தரமாக இல்லை என்ற விமர்சனம் நீண்ட ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆனால் அந்நிறுவனம் விற்பனவை செய்யும் கார்கள் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளன. இந்த பதிவில் டாப் ரேட்டிங் பெற்ற மாருதி கார்கள் பற்றி விபரங்களை தான் காணப்போகிறோம்.
மாருதி நிறுவனம் என்றாலே குறைந்த விலையில் கார் கிடைக்கும், குறைவான பராமரிப்பு செலவு கொண்ட வாகனம் என பல பெயர்களை கொண்டதாக இருக்கிறது. இந்நிலையில் அதே மாருதி நிறுவனம் பாதுகாப்பு விஷயத்தில் மிக மோசமான வாகனங்களை தயாரிப்பதாக நீண்ட நாட்களாக மக்கள் மத்தியில் குற்றச்சாட்டு இருக்கிறது. ஆனால் மாருதி நிறுவனத்திடமும் நல்ல பாதுகாப்ப ரேட்டடிங் கொண்ட வாகனங்கள் உள்ளன. உதாரணமாக பாரத் என்கேப் சோதனையில் அதிக ரேட்டிங் பெற்ற வாகனங்களை பற்றி காணலாம்.

மாருத விக்டோரிஸ்
மாருதியின் விக்டோரிஸ் காரின் பாதுகாப்பான கார்களில் ஒன்றாக இருகு்கிறது. இந்த கார் அரேனா டீலர்ஷிப் வழியாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த காரில் பாரத் என்கேப் சோதனையில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு மற்றும் பெரியவர்களுக்கான பாதுகாப்பு ஆகிய விஷயத்தில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற காராக இருக்கிறது.
இதில் பெரியவர்களுக்கான சோதனையில் இந்த கார் 32க்கு 31.66 புள்ளிகளை பெற்றுள்ளது. அதே நேரம் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 49க்கு 43 புள்ளிகளை பெற்றுள்ளது. இதில் 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், ஐஎஸ்ஓ சைல்டு சீட்டு மவுண்ட்கள் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

மாருதி இன்விக்டோ
மாருதி இனவிக்டோ என்ற பிரிமியம் எஸ்யூவி காரை விற்பனை செய்து வருகிறது. இந்த காரும் பாரத் என்கேப் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. இந்த கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 32க்கு 30.43 புள்ளிகளை பெற்றுள்ளது. குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 49க்கு 45 புள்ளிகளை பெற்றுள்ளது.
இந்த கார் டொயோட்டா நிறுவனத்தின் டிஎன்ஜிஏ-சி தளத்தில் கட்டமைக்கப்பட்டது. இதில் 6 ஏர்பேக்குகள், அடாஸ் தொழிற்நுட்பம், இந்த கார் சொகுசு, இடவசதி, மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த காராக இருக்கிறது.

மாருதி டிசையர்
மாருதி நிறுவனத்தின் புதிய தலைமுறை டிசையர் கார் பாரத் என்கேப் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. இந்த கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 32க்கு 29.46 புள்ளிகளை பெற்றுள்ளது. குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 49க்கு 41.57 புள்ளிகளை பெற்றுள்ளது. இந்த காரில் 2 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், பின்பக்க பார்க்கிங் சென்சார் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
மாருதி பலேனோ
மாரதி நிறுவனத்தின் பிரிமியம் ஹேட்ச்பேக் காரான பலேனோ கார் பாதுகாப்பு சோதனையில் 4 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. இந்த கார் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 3 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. இந்த காரின் டாப் வேரியன்ட் சோதனை செய்யப்பட்டது. இந்த காரில் 6 ஏர்பேக்குகள் உள்ளன. பெரியவர்களுக்கான சோதனையில் 32க்கு 26.52 புள்ளிகளை இந்நிறவனம் பெற்றுள்ளது. குழந்தைகளுக்கான சோதனைக்க 49க்கு 34.81 புள்ளிகளை பெற்றுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனம் தற்போதுவாகனங்களில் பாதுகாப்பு அம்சங்களை அதிகரித்து வருகிறது. அரசும் நவீன கார்களில் சில பாதுகாப்பு அம்சங்களை கட்டாயப்படுத்தியுள்ளதான். ஸ்டார் ரேட்டிங்கில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications









