2025 முடியுறதுக்குள்ள இத்தனை கார்கள் வந்துடுச்சா! லிஸ்ட் பெருசா இருக்குதே?
2025ம் ஆண்டு தற்போது நிறைவடையப்போகிறது. விரைவில் 2026ம் ஆண்டு புத்தாண்டு பிறக்கப்போகும் நிலையில் இந்தாண்டு எஸ்யூவி கார்கள் அதிகம் அறிமுகமாகியுள்ளது.இப்படியாக இந்தாண்டு அறிமுகமான முக்கியமான எஸ்யூவி கார்கள் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
கியா சைரோஸ்
கியா நிறுவமன் சைரோஸ் என்ற காரை கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி அறிமுகப்படுத்தியது. அ ந்த காருக்கான புக்கிங் எல்லாம் துவங்கிய பிப்ரவரி மாத மத்தியில் டெலிவரிகள் துவங்கியது.இந்த கார் சோனட் மற்றும் செல்டோஸ் ஆகிய கார்களுக்கு நடுவே பொசிஷன் செய்யப்பட்டது. இந்த காரில் முக்கியமாக வென்டிலேட்டட் சீட்டுகள், லெவல் 2 அடாஸ் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

டாடா ஹாரியர் இவி
டாடா நிறுவனம் தனது ஹாரியர் இவிகாரை கடந்த ஜூன் மாதம் 3ம் தேதி அறிமுகப்படுத்தியது. இந்த காரில் ரியர் வீல் டிரைவ், டுயல் மோட்டார் உடன் கூடிய ஆல் வீல் ஆகிய ஆப்ஷன்கள் உள்ளன. இந்த காரின் டெலிவரி கடந்த ஜூலை மாதம் துவங்கியது. இந்த கார் ரூ21.49 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வந்தது. இதன் டாப் வேரியன்ட் ரூ30.23 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
ஹூண்டாய் வென்யூ
ஹூண்டாய் நிறுவனம் கடந்த நவம்பர் 4ம் தேதி தான் தனது வென்யூ காரை அப்டேட் செய்து வெளியிட்டது. இந்த காரில் முக்கியமான முன்பக்க வடிவமைப்பு முதல் பல்வேறு அம்சங்கள் மாற்றியமைக்கப்பட்டன. இந்த காரில் இன்ஜின் விஷயங்களில் மாற்றங்கள் எதுவும், ஆனால் டீசல்இன்ஜினில் ஆட்டோமெட்டிக் வேரியன்ட் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கார் ரூ7.90 லட்சம் முதல் ரூ15.69 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

வின்ஃபாஸ்ட் விஎஃப் 6 மற்றும் விஎஃப் 7
வின்ஃபாஸ்ட் நிறுவனம் தனது விஎஃப் 6 மற்றும் விஎஃப் 7 ஆகிய கார்களை கடந்த செப்டம்பர் மாதம் 6ம் தேதி அறிமுகப்படுத்தியது. இந்த கார் தமிழகத்தில் தூத்துக்குடி ஆலையில் வைத்து அசெம்பிள் செய்யப்படுகிறது. இந்த கார்களில் விஎஃப் 6 கார் கம்பேக்ட் எஸ்யூவி காராகவும், விஎஃப் 7 கார் மிட் சைஸ் எஸ்யூவி காராகவும் வடிமவைக்கப்பட்டுள்ளது. இந்த காருக்கு முன்பே புக்கிங் எல்லாம் துவங்கிவிட்டது.
மஹிந்திரா தார் ஃபேஸ்லிஃப்ட்
மஹிந்திரா நிறுவனம் தனது தார் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை கடந்த அக்டோபர் 3ம் தேதி அறிமுகப்படுத்தியது. இந்த கார் ரூ9.99 லட்சம் முதல் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த கார் புதிய ஸ்டியரிங் வீல், பெரிய டச் ஸ்கிரீன், சில அம்சங்கள் அப்டேட், வெளிப்புறத்தி்ல சில மாற்றங்கள் எல்லாம் கொண்டு வரப்பட்டுள்ளன.

டாடா சியாரா
டாடா நிறுவமன் தனது சியாரா என்ற காரை மீண்டும் உயிப்பித்து கடந்த 25ம் தேதி விற்பனைக்காக அறிமுகப்படுத்தியது.இந்த கார் ரூ11.49 லட்சம் முதல் விற்பனையாகி வருகிறது. இதன் முழு வேரியன்ட்களுக்கான விலை படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கார் பெட்ரோல், டீசல் வேரியன்ட்களில் கிடைக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா, மஹிந்திரா, ஹூண்டாய் என பல நிறுவனங்கள் தங்கள் முக்கியமான எஸ்யூவி கார்களை இந்த 2025ம் ஆண்டில் களம் இறக்கியுள்ளனர். இந்தகார்கள் தொடர்ந்து நல்ல விற்பனையை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்டியலில் உங்களுக்கு பிடித்த காரை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









