வெறும் ரூ99 தான் இஎம்ஐ, விலையை குறைச்சது போதாதுன்னு இஎம்ஐ விடுமுறை வேற அறிவிச்சிட்டாங்க!
டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் ஜிஎஸ்டி வரி குறைப்பை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு பலனாக வழங்கும் நிலையில் தற்போது கூடுதலாக ஒரு ஆஃபரையும் அறிவித்துள்ளது. அதன்படி இந்த மாதம் வாகனம் வாங்குபவர்கள் அடுத்த 3 மாதத்திற்கு வெறும் ரூ99 மட்டுமே இஎம்ஐயாக செலுத்தினால் போதும் 2026ம் ஆண்டு முதல் முழு இஎம்ஐ செலுத்த துவங்கினால் போதும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் வாகனங்களை தயாரிக்கும் முக்கியமான நிறுவனமாக மாறியுள்ளது. ஜிஎஸ்டி வரி குறைப்பில் பலன்களை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இந்த மாதம் 22ம் தேதி வரை விற்பனை குறைவாக இருக்கும். 22ம் தேதிக்கு பிறகு தான் பலர் வாகனங்களை வாங்க முடிவு செய்துள்ள நிலையில் இந்த மாத விற்பனையை அதிகரிக்க அந்நிறுவனம் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

அதன்படி இந்நிறுவனம் Buy Now and Pay in 2026 என்ற திட்ததை் அறிவித்துள்ளது. இந்த ஆஃபர் அர்பன் க்ரூஸர் ஹைரைடர், கிளான்ஸா அல்லது அர்பன் க்ரூஸர் டைசர் ஆகிய கார்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின்படி வரும் செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்கும் வாகனம் வாங்கும் வாடிக்கையாளர்கள் முதல் 3 மாதத்திற்கு வெறும் ரூ99 மட்டுமே இஎம்ஐயாக செலுத்தினால் போதும். அதன்பிறகு 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் முழு இஎம்ஐ செலுத்தினால் போதும் என அறிவித்துள்ளது.
இது மட்டுமல்ல இவர்களுக்கு 5 இலவச சர்வீஸ், 5 ஆண்டு நீட்டிக்கப்பட்ட வாரண்டி, கார்பரேட் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் , ராணுவத்தில் பணியாற்றும் நபர்களுக்கு சிறப்பு பலன்கள் உள்ளிட்ட தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. இதனால் தற்போது கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் உடனடியாக காரை வாங்க முடிவு செய்ய வைப்பதற்காகவும், அவர்களுக்கு அதிக பலன்களை வழங்கும் வகையிலும் இந்த ஆஃபரை அறிவித்துள்ளது.

இது நவராத்திரிக்காக வழங்கப்படும் ஆஃபர். இந்த ஆஃபர் மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து இந்த வாகனத்தை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த ஆஃபர் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் இருந்து இந்த காரை வாங்குபவர்களுக்கு இ்நத தள்ளுபடி கிடைக்காது.
டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் கிரிஸ்லோஸ்கர் நிறுவனத்துடன் இணைந்து தான் வாகனங்களை தயாரித்து வருகிறது. இதன்படி ஜப்பானைசேர்ந்த டொயோட்டா நிறுவனத்திற்கு 89 சதவீத பங்கும்,கிரில்லோஸ்கர் நிறுவனத்திற்கு 11 சதவீத பங்கும் இருக்கிறது. இந்நிறுவனம் கர்நாடக மாநிலம் பிடதி பகுதியில் ஆலை அமைத்து வாகனங்களை தயாரித்து வருகிறது. கடந்த 1999ம் ஆண்டு முதல் இந்த ஆலை செயல்பட்டு வருகிறது.

கடந்த 2010ம் ஆண்டு இந்த ஆலை விரிவுபடுத்தப்படுட்டு வருகிறது. இது போக இந்நிறுவனம் டொயோட்டா வில்ஃபயர் மற்றும் எல்சி 300 ஆகிய வாகனங்களை நேரடியாக இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஆண்டிற்கு 3.42 லட்சம் வாகனங்களை தயாரிக்கும் அளவிற்கு தனது ஆலையை விரிவுபடுத்தி வைத்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஜிஎஸ்டி பலன்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதால் வாகனங்களின் விலை கணிசமாக குறைகிறது. இதில் டொயோட்டா நிறுவனம் ஒரு படி மேலேபோய் வாடிக்கையாளர்களுக்க 3 மாத இஎம்ஐ விடுமுறை போன்ற பலன்களை வழங்குவது அதன் விற்பனையை அதிகரிக்கும். ஆனால் இதை இந்தியா முழுவதும் இந்த ஆஃபர் வழங்கினால் விற்பனை மேலும் அதிகமாகும்.


Click it and Unblock the Notifications









