எமனுக்கே சவால் விடலாம்... டொயோட்டா காரில் இதைதான் எதிர்பார்த்தோம்! ஒருவழியா அறிவிச்சுட்டாங்க!

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் (Toyota Kirloskar Motor) தனது பிரபலமான ஃபேமிலி காரான ரூமியான் (Rumion)-இல் பாதுகாப்பை மேம்படுத்தி, வாடிக்கையாளர் நலனை மையமாகக் கொண்ட தனது கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. அது என்ன என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

இந்தியாவில் பாதுகாப்பான கார்களை வழங்குவதில் பெயர் பெற்ற நிறுவனங்களுள் ஒன்று டொயோட்டா ஆகும். குறிப்பாக, தனது கார்களில் ஏர்பேக் (Airbag) எனப்படும் விபத்தின் போது விரிவடைந்து பயணிகளை காப்பாற்றும் காற்றுப்பைகளை அதிக எண்ணிக்கையில் வழங்குவதை டொயோட்டா நிறுவனம் தீவிரமாக கடைப்பிடித்து வருகிறது.

toyota rumion gets 6 airbags

இதற்கு, மத்திய அரசாங்கத்தின் தொடர் உந்துதலும் ஒரு காரணம் என்றே சொல்ல வேண்டும். அதன்படி, இனிமேல் அனைத்து ரூமியான் கார் வேரியண்ட்களிலும் ஆறு ஏர்பேக்குகள் (முன், பக்கவாட்டு மற்றும் ஜன்னல் கண்ணாடிகளில் இருந்து பாதுகாப்பு) வழங்கப்படும் என டொயோட்டா நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இரண்டு முன் ஏர்பேக்குகள், இரண்டு பக்கவாட்டு ஏர்பேக்குகள் மற்றும் ஜன்னல் கண்ணாடிகளில் இருந்து பாதுகாக்கும் வகையில் இரண்டு ஏர்பேக்குகள் என 360 டிகிரி பாதுகாப்பை இந்த ஏர்பேக் சிஸ்டம் வழங்கும். இது ஓட்டுநர் மற்றும் பயணிகளுக்கு பல்வேறு சூழல்களில் அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்யும்.

toyota rumion gets 6 airbags

மேம்படுத்தப்பட்ட பாதுகாப்புடன், ரூமியான் காரின் விலைமிக்க டாப் 'வி' வேரியண்டில் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது டயரில் காற்று அழுத்தத்தை தொடர்ந்து கண்காணித்து, பாதுகாப்பு, எரிபொருள் திறன் மற்றும் வசதியை மேம்படுத்துகிறது. டொயோட்டா ரூமியான், இளைஞர்களைக் கவரும் வடிவமைப்புடன், விசாலமான 7 இருக்கை அமைப்பைக் கொண்டுள்ளது.

பிரீமியம் குரோம் கிரில், புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில் லேம்ப்கள் மற்றும் டூயல்-டோன் அலாய் சக்கரங்கள் போன்றவை இதன் ஸ்டைலை மேம்படுத்துகின்றன. உட்புறத்தில், டூயல்-டோன் கேபின் உடன் ரூமியான் கார் 60:40 என்கிற விகிதத்தில் பிரிக்கக்கூடிய இரண்டாவது வரிசை இருக்கைகள், சாய்வான மூன்றாவது வரிசை இருக்கைகளை பெறுகிறது.

இதில், இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை இருக்கைகளில் ஏசி மற்றும் போதுமான லக்கேஜ் இடம் ஆகியவை கிடைக்கிறது. டொயோட்டா ஐ-கனெக்ட் (i-Connect) அம்சத்தின் மூலம் ஸ்மார்ட்போன் இணக்கத்தன்மை, வாய்ஸ் அசிஸ்ட், ரிமோட் லாக்/அன்லாக், கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் பாதுகாப்பு எச்சரிக்கைகள் போன்ற வசதிகளை பெற முடியும்.

17.78 சென்டிமீட்டர் ஸ்மார்ட்பிளே காஸ்ட் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, ஸ்டீயரிங் கட்டுப்பாடுகள் மற்றும் பிரீமியம் அர்காமிஸ் சரவுண்ட் சென்ஸ் ஆடியோ ஆகியவை ஓட்டுநர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் வழங்கப்படுகின்றன. 1.5 லிட்டர் கே-சீரிஸ் நியோடிரைவ் (NeoDrive) பெட்ரோல் என்ஜின் மற்றும் இ-சிஎன்ஜி (E-CNG) ஆப்ஷன்களுடன், ரூமியான் செயல்திறன் மற்றும் எரிபொருள் திறன் இரண்டிலும் சிறந்ததை வழங்குகிறது.

இந்த என்ஜின் ஆப்ஷன்களுடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் பேடில் ஷிஃப்டர்களுடன் கூடிய 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் போன்ற கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இந்த டொயோட்டா காரில் பெட்ரோலில் 20.51 கி.மீ/லிட்டர் (மேனுவல்) மற்றும் சிஎன்ஜியில் 26.11 கி.மீ/கிலோ எரிபொருள் மைலேஜ் (Mileage) கிடைக்கிறது.

டொயோட்டாவின் தரம் மற்றும் நம்பகத்தன்மையுடன், வாகன ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (VSC), ஹில் ஹோல்ட் அசிஸ்ட், இபிடி உடன் ஏபிஎஸ், பிரேக் அசிஸ்ட், ISOFIX குழந்தை இருக்கை மவுண்ட்கள் மற்றும் ஆறு ஏர்பேக்குகள் போன்ற மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் ரூமியான் உருவாக்கப்படுகிறது. இந்த வாகனம் 3 ஆண்டுகள்/ 1,00,000 கி.மீ. வாரண்டியுடன் வருகிறது. இதனை 5 ஆண்டுகள்/ 2,20,000 கி.மீ. வரை நீட்டித்துக் கொள்ளலாம்.

டொயோட்டாவின் விரைவான பராமரிப்பு மற்றும் 24x7 நேரமும் பயணத்தின் போது ஏற்படும் இடர்பாடுகளுக்கான சேவையும் கிடைக்கிறது. டொயோட்டாவின் எம்பிவி (MPV) ரக காரான ரூமியானின் ஆரம்ப விலை தற்சமயம் ரூ.10.44 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். வாடிக்கையாளர்கள் தங்கள் அருகில் உள்ள டொயோட்டா டீலர்ஷிப்களில் அல்லது www.toyotabharat.com இணையதளத்தில் ரூமியானை முன்பதிவு செய்யலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பயணத்தின் போது காரில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஏர்பேக்குகளின் பங்களிப்பு முக்கியமானதாக உள்ளது. இதனாலேயே, 2 ஏர்பேக்குகள் மட்டுமே வழங்கப்பட்டு வந்த கார்களில் 6 ஏர்பேக்குகளை வழங்குமாறு மத்திய அரசாங்கம் கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதன்படி, டொயோட்டா அதன் சமீபத்திய அறிமுகமான ரூமியானில் 6 ஏர்பேக்குகளை அனைத்து வேரியண்ட்களிலும் நிலையான அம்சமாக வழங்கியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, September 22, 2025, 17:59 [IST]
English summary
Toyota announces 6 airbags standard across all variants of rumion check all details here
மேலும்... #toyota #airbag #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+