மத்திய அரசுக்குதான் எல்லா நன்றியும்! டொயோட்டாவின் விலை குறைப்பை பார்த்தால் எல்லாருக்கும் கார் வாங்க தோணும்
டொயோட்டா (Toyota), ஜப்பான் நாட்டை சேர்ந்த முன்னணி கார் உற்பத்தி நிறுவனம். இந்தியாவில் சுஸுகி (Suzuki) நிறுவனத்துடன் இணைந்து மாதந்தோறும் 15 ஆயிரத்திற்கும் அதிகமான கார்களை இந்தியாவில் டொயோட்டா விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் அதன் கார்களின் விலைகளை சுமார் ரூ.3.49 லட்சம் வரையில் குறைத்துக் கொள்வதாக அறிவித்து உள்ளது.
மத்திய அரசாங்கம் சமீபத்தில் சைலண்ட்டாக பெரிய வேலை ஒன்றை பார்த்துள்ளது. அதுதான் ஜிஎஸ்டி 2.0 (GST 2.0) ஆகும். இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பல பொருட்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி-இல் மாற்றங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதன்படி, சில ஆடம்பர பொருட்களுக்கான ஜிஎஸ்டி உயர்ந்துள்ள நிலையில், மக்கள் வாங்கும் பல அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைத்துக் கொள்ளப்பட்டு உள்ளது.

இந்த அத்தியாவசிய பொருட்களில் விலை குறைவான கார்களும், பைக்குகளும் அடங்குகின்றன. இதனால் இந்தியாவில் விரைவில் கார்கள் & பைக்குகளின் விலைகள் அதிரடியாக பெரிய அளவில் குறைந்து, விற்பனை எங்கேயோ போக போவதாக ஏற்கனவே கூறியிருந்தோம். அதன்படி, ஒவ்வொரு கார் நிறுவனமாக தங்களது கார்களின் விலைகளை குறைத்து அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.
அந்த வகையில், டொயோட்டா நிறுவனம் அதன் கார்களின் விலைகளை சுமார் ரூ.3.49 லட்சம் வரையில் குறைத்துக் கொண்டுள்ளது. குறைத்துக் கொள்ளப்பட்டு உள்ளன என சொல்வதை விட, குறைக்கப்பட உள்ளன என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், டொயோட்டாவின் இந்த விலை குறைப்புகள் வருகிற செப்டம்பர் 22ஆம் தேதியில் இருந்துதான் அமலுக்குவர உள்ளன.

கிளான்சா (Glanza), டைசர் (Taisor), ரூமியன் (Rumion), ஹைரைடர் (Hyryder), இன்னோவா கிரிஸ்ட்டா (Innova Crysta), இன்னோவா ஹைகிராஸ் (Innova Hycross), ஃபார்ச்சூனர் (Fortuner), ஃபார்ச்சூனர் லெஜெண்டர் (Fortuner Legender), ஹிலுக்ஸ் (Hilux), காம்ரி (Camry), வெல்ஃபையர் (Vellfire) என இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து டொயோட்டா கார்களின் விலைகளும் குறைத்துக் கொள்ளப்பட்டு உள்ளன.
இதில், அதிகப்பட்சமாக ரூ.3.49 லட்சம் வரையிலான விலை குறைப்பை பெற்றிருக்கும் டொயோட்டா கார் ஃபார்ச்சூனர் ஆகும். ஃபார்ச்சூனரை காட்டிலும் விலைமிக்க டொயோட்டா கார்கள் கூட இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன என்றாலும், அதிகப்பட்ச விலை குறைப்பை ஃபார்ச்சூனர் பெற்றுள்ளது. ஃபார்ச்சூனர் லெஜெண்டர் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) ரூ.3.34 லட்சம் வரையில் குறைக்கப்பட்டு உள்ளன.

டொயோட்டாவில் இருந்து இந்தியாவில் அதிக விலையில் விற்பனை செய்யப்படும் காரான வெல்ஃபையரின் விலைகள் ரூ.2.78 லட்சம் வரையில் குறைத்துக் கொள்ளப்பட உள்ளன. குறைந்தப்பட்ச விலை குறைப்பை பெற்றிருக்கும் டொயோட்டா கார் என்றால், அது ரூமியன் ஆகும். டொயோடடவின் எம்பிவி (MPV) ரக காரான ரூமியனின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.48,700 வரையில் குறைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக டொயோட்டா வெளியிட்டுள்ள முழு அட்டவணையை கீழே காணலாம்.
| Model | Reduction in Price |
|---|---|
| Glanza | Up to INR 85,300 |
| Taisor | Up to INR 1,11,100 |
| Rumion | Up to INR 48,700 |
| Hyryder | Up to INR 65,400 |
| Crysta | Up to INR 1,80,600 |
| Hycross | Up to INR 1,15,800 |
| Fortuner | Up to INR 3,49,000 |
| Legender | Up to INR 3,34,000 |
| Hilux | Up to INR 2,52,700 |
| Camry | Up to INR 1,01,800 |
| Vellfire | Up to INR 2,78,000 |
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விலை குறைப்புகள் யாவும் காருக்கு டொயோட்டா விதிக்கும் எக்ஸ்-ஷோரூம் விலைகளில் கொண்டுவரப்பட உள்ளன. இதனால்தான், வாங்க விரும்பும் காரின் ஆன்-ரோடு விலை (On-road Price) குறித்த விபரங்களை அறிய அருகில் உள்ள டொயோட்டா ஷோரூமை அணுகுமாறு டொயோட்டா தெரிவித்து உள்ளது.

பண்டிகை காலம் (Festive Season) நெருங்கிக் கொண்டிருப்பதால், விருப்பப்படும் காரை உடனடியாக டெலிவிரி (Delivery) எடுக்க, உடனடியாக புக் (Book) செய்யுமாறு டொயோட்டா தெரிவித்துள்ளது. இருப்பினும், செப்.26ஆம் தேதிக்கு பிறகே விலை குறைப்பு அமலுக்கு வருவதால், நம்ம ஆட்கள் அதன் பிறகே காரை புக் செய்ய முயற்சிப்பார்கள். அவ்வாறு ஒரே நேரத்தில் கஸ்டமர்கள் குவிவதால் வரும் மாதங்களில் டொயோட்டாவின் விற்பனை எங்கேயோ உச்சத்திற்கு சென்றுவிடும்.


Click it and Unblock the Notifications









