38.1 கி.மீ மைலேஜ் தரும் கார் இந்தியாவுல இறக்கிட்டாங்க! விற்பனைக்கு வந்தா எல்லாரும் காலி!

டொயோட்டா நிறுவனம் தனது அக்வா ஹைபிரிட் கார்களை இந்தியாவில் சோதனை செய்து வருகிறது. இந்த கார் 35.8 கி.மீ மைலேஜை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் இந்திய மார்கெட்டில் மிகப்பெரிய புரட்சியையே செய்யும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் இந்தியாவில் அறிமுகமாக போகிறதா அல்லது வேறு காரணங்களுக்காக சோதனை செய்யப்படுகிறதா? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில் டாடா, மாருதி மற்றும் டொயோட்டா ஆகிய நிறுவனம் அதிக மைலேஜ் தரும் கார்களை தயாரித்து வருகின்றன. இதில் ஒரு காராக டொயோட்டா நிறுவனம் தனது அக்வா என்ற காரை இந்தியாவில் சோதனை செய்து வருகிறது. இந்த கார் ஒரு ஸ்டிராங்க் ஹைபிரிட் ரக கார் ஆகும். இந்த கார்இந்தியாவில் அறிமுகமாகுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Toyota Aqua Hybrid

இந்த கார் மீது மக்கள் எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதற்கு முக்கியமான காரணம் அதன் மைலேஜ் தான்.இந்த கார் சர்வதேச மார்கெட்டில் 35.8 கி.மீ மைலேஜை வழங்குகிறது. இந்த கார் இந்திய மக்களுக்கு அதிக தேவையான ஒரு காராக இருக்கிறது. சர்வதேச மார்கெட்டில் இந்த கார் மிகப்பெரிய அளவில் ஈர்ப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த கார் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது.

இந்த காரை டொயோட்டா நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு முதன் முதலில் அறிமுகப்படுத்தியது. இந்த கார் ஜப்பானில் பிரியஸ் சி என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டது. இந்த கார் டிஎன்ஜிஏ பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதே பிளாட்ஃபார்மில் தான் யாரீஸ் மற்றும் சியன்டா ஆகிய கார்கள் தயாரிக்கப்படுகிறது.

35 8 35 8 2021 1 5 116 90 120 80 141 4 64 52 - 35 8 4 -

இந்த காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் ஹைபிரிட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் அதிகபட்சமாக 116 பிஎச்பி பவரை வெளிப்படுத்துகிறது. இது இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதில் பெட்ரோல் இன்ஜினை மட்டும் பயன்படுத்தினால் 90 பிஎச்பி பவர் மற்றும் 120 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் உரவாக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் முன்பக்க மோட்டார் 80 பிஎச்பி பவரையும், 141 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைத்துள்ளது. 4 வீல் டிரைவில் 64 பிஎச்பி பவரில் 52 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன்கொண்டதாக இருக்கிறது. இந்த கார் இ-சிவிடி கியர் பாக்ஸ் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளுது. இந்த கார் 35.8 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.

35 8 35 8 2021 1 5 116 90 120 80 141 4 64 52 - 35 8 4 -

இந்த கார் தான் உலகின் முதல் பைபோலார் நிக்கல் ஹைட்ரஜன் பேட்டரி பயன்படுத்தப்படுகிறது. இதில் அதிகமான பவரை சேமிக்க முடியும். டொயோட்டா நிறுவனம் இது போல ரெவ்4, யாரீஸ், சி-எச்ஆர் ஆிய கார்களை கூட சோதித்திருந்தது. ஆனால் இந்த கார்கள் எல்லாம் விற்பனைக்கு வரவில்லை. இது அந்த காரின் தொழிற்நுட்பத்திற்காக நடக்கும் சோதனையாக கூட இருக்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த காரை டொயோட்டா நிறுவனம் இந்தியாவிற்கு கொண்டு வருமா என்பது தெரியவில்லை. ஆனால் நிச்சயம் இந்த ஹைபிரிட் தொழிற்நுட்பத்தை இந்தியாவிற்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

More from DriveSpark

Article Published On: Monday, June 30, 2025, 22:30 [IST]
English summary
Toyota aqua hybrid hatchback spied testing in india
மேலும்... #toyota #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X