36 கிமீ மைலேஜ்! இந்த காரை இத்தன நாளா எங்கயா வெச்சிருந்தீங்க! அடி மாட்டு விலையில் களமிறக்கும் டொயோட்டா!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார் நிறுவனங்களில் ஒன்று டொயோட்டா (Toyota). அதிக நம்பகத்தன்மை கொண்ட கார்களை விற்பனை செய்து வருவதால், டொயோட்டா நிறுவனத்திற்கு இந்திய சந்தையில் மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் வட்டம் இருக்கிறது. டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் 12 கார்களை விற்பனை செய்து வருகிறது.

இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என டொயோட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக ஜப்பான் போன்ற நாடுகளில் பிரபலமாக உள்ள டொயோட்டா அக்வா (Toyota Aqua) காரை, டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Toyota Aqua Car

புது டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை அருகே, டொயோட்டா அக்வா சாலை சோதனையில் ஈடுபடுத்தப்பட்டபோது, கேமரா கண்களில் சிக்கியுள்ளது. இதன் காரணமாகவே டொயோட்டா அக்வா கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. ஆனால் இந்த விஷயத்தில் 2 வாய்ப்புகள் உள்ளன.

ஒன்று டொயோட்டா அக்வா இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம். அல்லது அதன் ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜின் (Strong Hybrid Engine), இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படலாம். இந்திய சந்தையில் தற்போது ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜின் பொருத்தப்பட்ட கார்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

Toyota Aqua

எனவே டொயோட்டா நிறுவனம் அக்வா காரின் ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜினை, இந்தியாவில் அதன் கார்களில் வழங்குவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இந்த இரண்டில் ஏதேனும் ஒரு காரணத்திற்காகவே டொயோட்டா அக்வா காரின் சோதனை ஓட்டம் இந்திய சாலைகளில் தற்போது நடைபெற்று வருவதாக கருதப்படுகிறது.

இதுகுறித்து ரஸ்லேன் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜப்பான் சந்தையில் டொயோட்டா அக்வா காரின் விலை (Price) இந்திய மதிப்பில் சுமார் 12.50 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இதன் மூலம் உலகின் மிகவும் விலை குறைவான ஸ்ட்ராங் ஹைப்ரிட் கார்களில் ஒன்றாக டொயோட்டா அக்வா திகழ்கிறது.

இது விலை குறைவானது என்பதுடன், அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடியதாகவும் உள்ளது. டொயோட்டா அக்வா காரின் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 35.80 கிலோ மீட்டர்கள் ஆகும். இந்திய வாடிக்கையாளர்கள் பொதுவாகவே விலை குறைவான மற்றும் அதிக மைலேஜ் வழங்க கூடிய கார்களை வாங்குவதற்கு அதிக முன்னுரிமை வழங்குவார்கள்.

எனவே டொயோட்டா அக்வா இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், நல்ல வரவேற்பு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக அதன் மைலேஜ், கவனம் ஈர்க்க கூடிய ஒன்றாக உள்ளது. 35.80 கிலோ மீட்டர்கள் என்பது இந்தியாவில் விற்பனை செய்யப்படக்கூடிய பல்வேறு சிஎன்ஜி கார்களின் மைலேஜை விட அதிகம் ஆகும்.

அத்துடன் டொயோட்டா அக்வா காரில், 10.5 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே மற்றும் அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) போன்ற வசதிகள் எல்லாம் வழங்கப்படுகின்றன. எனவே இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், நல்ல வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் இது நடக்குமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டொயோட்டா அக்வா இந்தியாவில் விற்பனைக்கு வரலாம். அல்லது அதன் ஸ்ட்ராங் ஹைப்ரிட் சிஸ்டம், இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் ஏதேனும் ஒரு டொயோட்டா காரில் வழங்கப்படலாம். இந்த இரண்டில் எது நடக்க போகிறது? என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 16, 2025, 17:50 [IST]
English summary
Toyota aqua spotted in new delhi will it come to india full details
மேலும்... #toyota #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+