தன்னுடைய இந்த காரை யாரும் வாங்க வேண்டாம்னு நினைக்குதா டொயோட்டா! சொந்த செலவில் சூன்யம் வச்சிகிட்ட கதையா இருக்கு

டொயோட்டா (Toyota) நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் தரமான கார் மாடல்களில் ஒன்றாக கேம்ரி (Camry) உள்ளது. இது ஓர் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த செடான் ரக கார் மாடல் ஆகும். பிரீமியம் அம்சங்களை மட்டுமல்ல அதிக அட்வான்ஸ்டு தொழில்நுட்ப வசதிகளையும் தன்னுள் நிறைவாகக் கொண்டிருக்கும் கார் மாடலாக இது இருக்கின்றது. இத்தகைய காரின் விற்பனைக்கே சூன்யம் வை(பாதி)க்கின்ற மாதிரியான ஓர் செயலைச் டொயோட்டா நிறுவனம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனம் அதன் விலையையே உயர்த்தி இருக்கின்றது.

ரூ. 50 ஆயிரம் வரை கேம்ரியின் விலையில் உயர்வை செய்திருக்கின்றது, டொயோட்டா. கார் உற்பத்தி நிறுவனங்கள் சமீப காலமாக தங்களின் வாகனங்களின் விலையை உயர்த்திக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, டாடா மோட்டார்ஸ் (Tata Motors), மாருதி சுஸுகி (Maruti Suzuki), ஹூண்டாய் (Hyundai) மற்றும் மஹிந்திரா (Mahindra) போன்ற நிறுவனங்கள் இந்த மாதத்தின் தொடக்கத்திலேயே விலையை உயர்வைச் செய்துவிட்டன.

Toyota camry prices in india rise by rs 50 000

இந்த நிறுவனங்கள் ரெனால்ட் (Renault), ஹோண்டா (Honda), கியா (Kia) மற்றும் பிஎம்டபிள்யூ (BMW) உள்ளிட்ட நிறுவனங்களும் இந்த மாதத்தின் தொடக்கத்தில் விலை உயர்வை அறிவித்தன. இவர்களின் வரிசையிலேயே தற்போது டொயோட்டாவும் இணைந்திருக்கின்றது. டொயோட்டா நிறுவனம் புதிய கேம்ரியை சென்ற ஆண்டின் இறுதி மாதமான டிசம்பரிலேயே அறிமுகப்படுத்தியது.

விற்பனைக்கு முழுமையாக அரையாண்டுகூட ஆகாத நிலையில் இதன் விலையில் ரூ. 50 ஆயிரத்தை டொயோட்டா உயர்த்தி இருக்கின்றது. அறிமுகத்தின்போது ரூ. 48 லட்சத்திற்கு இது அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது விலை உயர்வால் அதன் விலை ரூ. 48.50 லட்சமாக மாறியிருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்தியாவில் இந்த கார் ஒரே ஒரு வேரியண்டில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Toyota camry interior

அந்த வேரியண்டில் 2.4 லிட்டர் பெட்ரோல் மோட்டாரே வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன் ஹைபிரிட் தொழில்நுட்பத்தையும் டொயோட்டா நிறுவனம் வழங்கி இருக்கின்றது. இவை இரண்டும் சேர்ந்து 230 எச்பி வரை ஆற்றலை உருவாக்கும். இ-சிவிடி (e-CVT) கியர்பாக்ஸே இந்த மோட்டாருடன் இணைக்கப்பட்டு இருக்கின்றது.

இந்த மோட்டார் அதிக ஆற்றலை உருவாக்குவதில் மட்டுமல்ல மைலேஜை தருவதிலும் சிறந்த ஒன்றாக விளங்குகின்றது. லிட்டர் ஒன்றிற்கே இந்த கார் மாடல் 25.49 கிமீ வரையில் மைலேஜை வழங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. மைலேஜை தருவதைப் போலவே சிறப்பம்சங்களையும் மிக மிக தாராளமாக இந்த கார் கொண்டிருக்கின்றது.

Toyota camry front profile

அந்தவகையில், 7 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 12.3 அங்குல டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவற்றை இந்த காரில் டொயோட்டா வழங்கியிருக்கின்றது. வயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு ஆகிய வசதிகளைக் கொண்டதே இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகும்.

இதுதவிர, ஜேபிஎல் சவுண்டு சிஸ்டம், 10 அங்குல ஹெட்ஸ்-அப் திரை, டிஜிட்டல் சாவி, ரெக்லைனிங் செய்துக் கொள்ளும் மற்றும் வெண்டிலேஷன் வசதிக் கொண்ட இருக்கை, 3 ஜோன்கள் கொண்ட ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப் போன்ற வசதிகளையும் இந்த கார் தன்னுள் தாங்கியிருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்ததுபோன்ற பன்முக அம்சங்களைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்த காருக்கு இந்திய பணக்காரர்கள் மத்தியில் கணிசமான அளவு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இத்தகைய காரின் விலையையே தற்போது டொயோட்டா உயர்த்தி இருக்கின்றது. இது ஓர் பணக்காரர்களுக்கான வாகனம் என்பதால் இந்த விலை உயர்வு கேம்ரியின் விற்பனையை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என நாங்கள் நம்புகின்றோம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 22, 2025, 5:00 [IST]
English summary
Toyota camry prices in india increased by rs 50000 here is more details
மேலும்... #toyota #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X