டொயோட்டா காரில் எஞ்சின் இருக்க வேண்டிய இடத்தில் இருந்த பெரிய ஓட்டை.. ஆக்சலரேட்டரை அழுத்தியதும் ஓடிய அதிசயம்!

இந்தியாவில் வேண்டுமென்றால் டொயோட்டா (Toyota) நிறுவனம் பின்னணியில் இருக்கலாம். ஆனால், உலக அளவில் முன்னணி கார் உற்பத்தியாளராக டொயோட்டா நிறுவனம் வலம் வந்துக் கொண்டிருக்கின்றது. நீடித்து உழைப்பதற்கு பெயர்போனவையாக இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் இருக்கின்றன. குறிப்பாக, இதன் எஞ்சின் தலைமுறைக்கும் நீடித்து உழைக்கக் கூடியதாக காட்சியளிக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே டொயோட்டா கார் காதலர்களைக் கவரும் வகையில் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிக் கொண்டிருக்கின்றது. டொயோட்டா கார் ஒன்று எஞ்சினே இல்லாமல் இயங்கக் கூடிய வீடியோவே அது ஆகும்.

இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. எஞ்சின்-தான் ஒரு காருக்கு இதயமே. அதுவே இல்லாமல் இந்த கார் எப்படி இயங்கியது என்பது பலரின் சந்தேகமாக மாறி இருக்கின்றது. அந்த கார் இயங்கியதற்கு பின்னால் இருக்கும் மர்மத்தை உடைக்கும் பதிவே இதுவாகும்.

Toyota car runs without engine

டொயோட்டா நிறுவனம் தன்னுடைய பெரும்பாலான தயாரிப்புகளில் ஹைபிரிட் (Hybrid Tech) அம்சத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த வகை கார்கள் மின்சாரம் மற்றும் எரிபொருள் இரண்டிலும் இயங்கும். இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் எரிபொருளை பயன்படுத்தி இயங்கிக் கொண்டிருக்கும்போதே தேவையான மின்சாரத்தை இயக்கத்தில் இருந்து அந்த கார்கள் சேகரித்துக் கொள்ளும்.

பின்னர் சேமித்த அந்த மின்சாரத்தின் வாயிலாக அந்த வாகனம் இயங்கும். இதுவே ஹைபிரிட் அம்சம் கொண்ட வாகனங்களின் தனி சிறப்பாகும். இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் ஹைபிரிட் கார்களில் எரிபொருளில் இயங்கும் எஞ்சின் உடன் சேர்த்து ஓர் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கும்.

இதற்கு தேவையான மின்சாரத்தை வழங்க சிறிய பேட்டரி பேக்கும் (Battery Pack) வழங்கப்பட்டு இருக்கும். இந்த பேட்டரி பேக்கிற்கு தேவையான மின்சாரம், கார் எரிபொருளில் இயங்கும்போதே கிடைத்துவிடும். இதற்கான வசதிகளையே ஹைபிரிட் எனும் பெயரின் கீழ் வாகன உற்பத்தியாளர்கள் வழங்கிக் கொண்டு இருக்கின்றனர்.

மேலும், இந்த ஹைபிரிட் அம்சத்தை டொயோட்டா உள்ளிட்ட கார் உற்பத்தியாளர்கள் மைல்டு ஹைபிரிட் (Mild Hybrid), ஸ்ட்ராங் ஹைபிரிட் (Strong Hybrid) மற்றும் பிளக்-இன் ஹைபிரிட் (Plug-in Hybrid) என பல வகைகளில் வழங்கிக் கொண்டிருக்கின்றனர். இதில், பிளக்-இன் ஹைபிரிட் என்பது மின்சார காரை போல தனியாக சார்ஜ் செய்துக் கொள்ளும் வசதிக் கொண்ட வாகனம் ஆகும்.

மைல்டு ஹைபிரிட் மற்றும் ஸ்ட்ராங் ஹைபிரிட்டைக் காட்டிலும் அதிகம் ரேஞ்சை இது வழங்கும். இதுமட்டும் அல்ல, எரிபொருளில் இயங்கும் எஞ்சின் முழுமையாக அகற்றப்பட்டு இருந்தாலும், கொடுக்கப்பட்ட பேட்டரி பேக்கில் உள்ள மின்சாரத்தை பயன்படுத்தி, இதன் மின்சார மோட்டார்கள் காரை இயக்கச் செய்யும்.

இவ்வாறு இயங்கிய டொயோட்டா காரின் வீடியோவே தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிக் கொண்டிருக்கின்றது. வீடியோவில் இடம் பெற்றிருக்கும் காட்சிகளை வைத்து பார்க்கையில் அந்த கார் மாடல் டொயோட்டா பிரியூஸ் (Toyota Prius) என தெரிகின்றது. இந்த கார் மாடல் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கவில்லை.

அதேவேளையில், ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் இன்னோவா ஹைகிராஸ் (Innova HyCross), வெல்ஃபையர் (Vellfire), அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Urban Cruiser Hyryder) மற்றும் லேண்ட் க்ரூஸர் 300 (LC300) உள்ளிட்ட கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. நிறுவனத்தின் ஹைபிரிட் அம்சம் கொண்ட கார்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இதற்கு மிக சிறந்த உதாரணமாக அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மற்றும் இன்னோவா ஹைகிராஸ் ஆகிய கார் மாடல்களைக் கூறலாம். இவற்றைவிட அட்வான்ஸ்டு ஹைபிரிட் தொழில்நுட்பத்துடனேயே உலக சந்தையில் இப்போது டொயோட்டா பிரியூஸ் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆனால், நாம் வீடியோவில் பார்த்தது சற்றே பழைய வெர்ஷன் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹைபிரிட் வசதிக் கொண்ட கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அவை ஹைபிரிட் அல்லாத வாகனங்களைக் காட்டிலும் அதிக மைலேஜை வழங்கும். அதேபோல் காற்று மாசுபாட்டையும் சற்றே குறைவாக வெளியேற்றும். இதனாலேயே பலர் தங்களின் பேராதரவை ஹைபிரிட் கார்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Thursday, April 17, 2025, 20:43 [IST]
English summary
Toyota car runs without engine here is how
மேலும்... #auto news
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+