இது ஒன்னும் முதல் வருஷம் கிடையாது.. 5வது முறையாக முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்ட கார் உற்பத்தி நிறுவனம்..

இந்தியாவில் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமாக மாருதி சுஸுகி (Maruti Suzki) இருப்பதை போல, உலக அளவில் நம்பர் 1 நிறுவனமாக டொயோட்டா (Toyota) உள்ளது. இந்த இடத்தை அது அலங்கரிப்பது இது முதல் முறையல்ல. இது சங்கிலி தொடர் போல ஐந்தாவது முறையாக முதல் இடத்தை அது அலங்கரித்திருக்கின்றது. ஆமாங்க, தொடர்ந்தே இந்த இடத்தை டொயோட்டா ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது. ஃபோக்ஸ்வேகன் மற்றும் டெஸ்லா போன்ற மாபெரும் ஜாம்பவான் நிறுவனங்களை பின்னுக்கு தள்ளியே இந்த முதல் இடத்தை டொயோட்டா பிடித்திருக்கின்றது.

மொத்தமாக உலக அளவில் 10,159,336 யூனிட் வாகனங்களை டொயோட்டா குரூப் விற்பனைச் செய்திருக்கின்றது. டொயோட்டாவின் சொகுசு கார் உற்பத்தி பிரிவான லெக்சஸ், மினி வாகன உற்பத்தி பிரிவான டாய்ஹட்சு மோட்டார் (Daihatsu) மற்றும் டிரக் உற்பத்தி பிரிவான ஹைனோ மோட்டார்ஸ் (Hino) இவை அனைத்தும் கூட்டு சேர்ந்தே இந்த அளவு மாபெரும் எண்ணிக்கையில் புதிய வாகனங்களை சென்ற 2024 ஆம் ஆண்டில் விற்பனைச் செய்திருக்கின்றன.

Toyota stays number one car manufacturer in 2024

இந்த மிகப் பெரிய எண்களில் புதிய வாகனங்கள் விற்பனையாகி இருக்கின்ற காரணத்தினாலேயே அது நம்பர் 1 கார் உற்பத்தியாளராக தற்போது மாறி இருக்கின்றது. அதேவேளையில், இந்த விற்பனை எண்ணிக்கையானது கடந்த 2023 ஆம் ஆண்டைக் காட்டிலும் சற்றே குறைவு என்பது கவனிக்கத்தகுந்தது.

1.4 சதவீதம் விற்பனைச் சரிவையே அது 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சந்தித்து இருக்கின்றது. டொயோட்டாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் ஃபோக்ஸ்வேகன் குழுமம் இருக்கின்றது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் உலக அளவில் கடந்த 2024 ஆம் ஆண்டில் 9.03 மில்லியன் யூனிட்டுகள் வரை விற்பனையாகி இருக்கின்றது.

இது 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2.3 சதவீதம் குறைவான விற்பனை ஆகும். இதை வைத்து பார்க்கையில் சென்ற ஆண்டில் முன்னணி நிறுவனங்கள் பல விற்பனையில் சரிவையேச் சந்தித்து இருக்கின்றன என்பது தெரிய வந்திருக்கின்றது. அந்தவகையில், ஜப்பான் மற்றும் சீனா போன்ற உலகின் முன்னணி சந்தைகளிலேயே அது சரிவைச் சந்தித்து இருக்கின்றது.

இருப்பினும், டொயோட்டா முதல் இடத்தையும், ஃபோக்ஸ்வேகன் இரண்டாவது இடத்தையும் தொடர்ச்சியாக அலங்கரித்திருப்பது பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. டொயோட்டா நிறுவனத்தின் ஹைபிரிட் கார்களுக்கு உலக அளவில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்தியாவில் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் ஹைபிரிட்-க்கு எப்படி நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றதோ, அதைப் போலவே உலக சந்தையில் அதன் ஹைபிரிட் கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இந்தியாவில் மட்டுமே டொயோட்டா நிறுவனத்தின் தயாரிப்புகள் சென்ற ஆண்டில் 3.26 யூனிட்டுகள் வரை விற்பனையாகி இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இது 2023 ஆம் ஆண்டைக் காட்டிலும் 40 சதவீதம் அதிகம் விற்பனையாகும். உலக சந்தைகள் சிலவற்றில் இந்த பிராண்டின் தயாரிப்புகளுக்கு இப்போதும் நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது என்பதற்கு சான்றாகவே இந்த தகவல் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நிறுவனத்தின் இந்திய வளர்ச்சிக்கு பின்னால் மாருதி சுஸுகியின் தயாரிப்புகளே காரணமாக இருக்கின்றது. நிறுவனம் மாருதியின் கார்கள் சிலவற்றை ரீ-பேட்ஜ் செய்து விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. அதற்கும் இந்தியர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. உதாரணமாக கிளான்ஸாவை கூறலாம். இது மாருதியின் பலினோ கார் மாடல் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Saturday, February 1, 2025, 5:00 [IST]
English summary
Toyota continues to be world s largest carmaker for 5th straight year
மேலும்... #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+