17 பேர் ஒன்னா போகலாம், தியேட்டர் மாதிரி பெரிய ஸ்கிரீன் வேற இருக்குது! விலையும் கம்மியா இருக்குமா?
டொயோட்டா நிறுவனம் இ-பேலட் என்ற வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது சாதாரண வாகனம் அல்ல, எதிர்கால தேவையை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை ஒரே நேரத்தில் பல்வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்த முடியும். உதாரணமாக காலையில் பயணிகளைஏற்றி செல்லும் வாகனமாகவும், மதியம் சினிமா பார்க்கும் வாகனமாகவும், இரவு உணவு தயார் செய்யும் வாகனமாக கூட பயன்படுத்த முடியும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
உலகம் முழுவதும் எலெக்ட்ரிக் மற்றும் ஆட்டோமெட்டிக் வாகனங்களை நோக்கி நகர்ந்து வருகிறது.மிக வேகமாக இந்த நகர்வு நடக்கிறது.இந்நிலையில் தான் டொயோட்டா நிறுவனம் இ-பேலட் என்ற பேட்டரியில் இயங்கும் எலெக்ட்ரிக் வாகனத்தை ஜப்பானில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜப்பான் யென் மதிப்பில் 29 மில்லியன் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் ரூ1.74 கோடி இதன் விலையாகும்.

இந்த வாகனம் ஏற்கனவே கடந்த 2018ம் ஆண்டு நடந்த சிஇஎஸ் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. தற்போது பொதுமக்கள் பயன்படுத்த அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த டொயோட்டா இ-பேலட் வாகனத்தில் 72.82 kWh லித்தியம் அயான் பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இது ஒர முறை சார்ஜ் போட்டால் 250 கி.மீ தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனத்தில் 150KW அதாவது 204 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் ஏசி சிக்கேரனைஸ் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இது 266 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது. இந்த வாகனம் அதிகபட்சம் 80 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. இதை 90KW ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தி சார்ஜ் ஏற்றினால் 40 நிமிடத்தில் 80 சதவீத சார் ஏறிவிடும். வழக்கமா 6KW சார்ஜரைபயன்படுத்தினால் முழுமையாக சார்ஜ் ஏற 12 மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.

இதன் அளவுகளை பொருத்தவரை 4950 மிமீ நீளம், 2080 மிமீ அகலம், 2650 மிமீ உயரம் கொண்டதாக இருக்கிறது. இநத வாகனம் மொத்தம் 2950 கிலோ எடை கொண்டது. இதில் லோ ஃப்ளோர் அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் பெரிய ஸ்லைடி் டோர்கள் உள்ளது. இதன் மூலம் சுலபமாக ஏறி இறங்க முடியும். இந்த வாகனத்தில் மொத்தம் 17 பேர் பயணம் செய்ய முடியும் (டிரைவர் உட்பட).
இந்த வாகனத்தை பல்வேறு பயன்பாட்டிற்காக கஸ்டமைஸ் செய்ய முடியும். இது காம்பேக்ட் சைஸ்ல் இரக்கிறது. இது சிட்டி பஸ் போன்ற பயன்பாட்டிற்கும் பயன்படுத்தலாம். இது போக உணவு டிரக், மொபைல் ரெஸ்டாரென்ட், ஏன் சிறிய தியேட்டர் போலவும் இதை பயன்படுத்த முடியும். இன் உள்ள பெரிய ஸ்கிரீன் மற்றும் சிறந்த சவுண்ட் சிறா்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நண்பர்களுடன் சேர்ந்து சினிமா பார்ப்பது, விளையாட்டு போட்டிகளை லைவாக பார்ப்பது உள்ளிட்ட பயன்பாட்டிற்காகவும், அதே நேரம் டூரிஸ்ட்களை சைட் ஸீயிங்கிற்கு அழைத்து செல்வதற்கான வாகனமாகவும் பயன்படுத்த முடியும். இந்த வாகனத்தில் லெவல் 2 அடாஸ் தொழிற்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் டிரைவ் இரு்நதால் தான் இதை இயக்க முடியம். ஆனால் 2027ம் ஆண்டிற்குள் இந்த வாகனத்தை லெவல் 4 அடாஸ் தொழிற்நுட்பம் பொருத்தப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளுது. இதில் LiDAR, கேமராக்கள் அட்டோமேட்டட் டிரைவிங் கிட் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வாகனத்தில் ஸ்டீர் பை ஒயர் டெக்னாலஜி இருக்கிறது. இதனால் ஸ்டியரிங்கை குறைந்த அளவிலேயே பயன்படுத்தினால் போதும் சுலபமாக வாகனத்தை இயக்க முடியும். மேலும் இதில் வெஹிகிள் டூ லோடு அம்சம் இருக்கிறது. இதன் மூலம் வாகனத்தில் உள்ள பேட்டரி பவரை மற்ற பயன்பாட்டிற்குள் எடுத்துக்கொள்ள முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டெயோட்டா நிறுவனம் தற்போது ஜப்பானில் மட்டுமே இதை அறிமுகப்படுத்தியுள்ளது. இதை விரைவில் மற்ற நாடுகளுக்கும் இந்நிறுவனம் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கலாம். இந்தியாவில் இந்த ரக வாகனத்திற்கான தேவை அதிகமாக உள்ளது. இதன் பேட்டரி யை மாற்றி அதிக தூரம் சிங்கிள் சார்ஜில் பயணிக்கும் வகையில் உருவாக்க வேண்டும். இந்தியாவிற்கு வந்தால் குறைந்த விலையில் இது விற்பனைக்கு வரும் பட்சத்தில் அதிகமாக விற்பனவையாகும்.


Click it and Unblock the Notifications









