அரசியல்வாதிகள் அடுத்து இந்த காரை தான் வரிசை கட்டி வாங்க போறாங்க! ரேட்டை கேட்டா மயக்கமே வந்துடும்!
டொயோட்டா கிரிலோஸ்கார் மோட்டார் இந்தியாவில் 4X4 மேனுவல் கியர்பாக்ஸுடன் கூடிய புதிய வகை ஃபார்ச்சூனர் லெஜெண்டர் காரை அறிமுகப்படுத்தியுள்ளது, அதன் விலை ரூ. 46,36,000 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். இந்த புதிய வேரியன்ட் பர்ல் வெள்ளை மற்றும் கருப்பு ரூஃப் என டுயல் கலரில் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் 2.8L 4 சிலிண்டர் ஜிடி சிரீஸ் டீசல் இன்ஜினால் இயக்கப்படுகிறது. இது அதன் நம்பகத்தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றிற்காக மார்கெட்டில் நன்கு அறியப்பட்டதாகும்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஃபார்ச்சூனர் லெஜெண்டர் வேரியன்ட் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது, இது 4WD செட்டப் உடன் இணைந்து செயல்பட்டு, அனைத்து 4 வீல்களுக்கும் பவரை விநியோகிக்கப்படுகிறது. இந்த செட்டப் எஸ்யூவி 204 PS பவர் மற்றும் 420 Nm டார்க் திறனை உருவாக்க அனுமதிக்கிறது. இது அதன் பிரிவில் சக்திவாய்ந்த போட்டியாளராக மாறுகிறது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டரின் வடிவமைப்பு கடுமையான முன் மற்றும் பின் பம்பர்கள் பியானோ-கருப்பு முன் கிரில் மற்றும் அதன் போல்டான அழகியலைக் குறிக்கும் ஷார்ப்பான வடிவமைப்பு அம்சங்களைக் கொண்டதாக இருக்கிறது. அதன் பிரீமியம் தோற்றத்திற்கு கூடுதலாக, பிரத்தியேக வாட்டர் ஃபால் எல்இடி வரி மேப் சிக்னேச்சர், சீக்கோன்ஸியல் இன்டிகேட்டர்கள் மற்றும் 18-இன்ச் மிஷின் கட் அலாய் வீல்கள் ஆகியவற்றைக் கொண்ட குவாட்-எல்இடி ஹெட் லைட்டுகள் உள்ளன.
உள்ளே, ஃபார்ச்சூனர் லெஜெண்டரின் கேபின் டுயல் டோன் கருப்பு மற்றும் மெரூன் உட்புறத்துடன் லக்ஸரி லுக்கை பெறுகிறது, இது வேறு கலர் தையலால் முழுமைப்படுத்தப்படுகிறது. இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், கதவு டிரிம் மற்றும் அடிப்பகுதிகளில் உள்ள சுற்றுப்புற லைட்டுகளில் எஸ்யூவியின் மொத்த பிரீமியம் உணர்வை மேம்படுத்துகிறது. வாகனம் ஒரு சப்வூஃபர் உட்பட 11-ஸ்பீக்கர் ஜேபிஎல் ஆடியோ சிஸ்டத்தால் பொருத்தப்பட்டுள்ளது. இது ஓட்டுநர் மற்றும் முன் பயணியருக்கானகாற்றோட்ட அமைப்புடன் வாகனத்தின் உட்புளம் உள்ள வசதி மற்றும் பொழுதுபோக்கு அனுபவத்தை மேம்படுத்துகிறது.
டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டர் 4X4 மேனுவல் கியர்பாக்ஸ் வேரியன்ட் காருக்கு ஏற்கனவே முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. இன்னும் முன்பதிவு செய்யாத வாடிக்கையாளர்கள் தங்கள் அருகிலுள்ள டொயோட்டா டீலர்ஷிப்பைப் தொடர்பு கொள்வதன் மூலம் அல்லது டொயோட்டா பாரத் வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்
"வாடிக்கையாளர் கருத்துகளைப் பயன்படுத்தி, மாறிவரும் மார்கெட் தேவைகளைப் புரிந்துகொண்டு, டொயோட்டா லெஜெண்டரின் மேனுவல் கியர்பாக்ஸ் வகையை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த புதிய வேரியன்ட் எஸ்யூவியின் ஈர்ப்பை அதிகரிப்பது மட்டுமல்லாமல்.
எங்கள் வாடிக்கையாளர்களின் நவீன தேவைகளைப் பூர்த்தி செய்யும் பன்முக மற்றும் புதிய வாகன தீர்வுகளை வழங்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்பையும் வலியுறுத்துகிறது," என்று அந்நிறவனத்தின் விற்பனை-சேவை- வணிகத்தின் துணைத் தலைவர் வரீந்தர் வத்வா கூறினார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா சமீபத்தில் 2025 லேண்ட் க்ரூஸர் 300 ஐ ஜெட் மற்றும் ஜிஆர்-எஸ் வேரியின்ட்களில் அறிமுகப்படுத்தியது, இது 304 PS பவர் மற்றும் 700 Nm டார்க் திறனை வழங்கும் வலுவான இரட்டை டர்போ வி6 இன்ஜினால் இயக்கப்படுகிறது. கூடுதலாக, சமீபத்திய கேம்ரி ஹைப்ரிட் டிசம்பர் 2024 இல் தொடங்கப்பட்டது, டொயோட்டாவின் புதுமையான மற்றும் சக்தி-திறமையான வாகனங்களின் பணியை மேலும் விரிவுபடுத்துகிறது.


Click it and Unblock the Notifications








