இனி வெயில் காலத்துல இந்த கார்ல போனாலே வியர்த்து கொட்டப்போகுது! ஏன் தெரியுமா?
டொயோட்டா நிறுவனம் தனது ஃபார்ச்சூனர் மற்றும் லெஜன்டர் காரின் 4X4 வேரியன்டில் வென்டிலேட்டட் சீட்களை நீக்கியுள்ளது. வெயில் காலங்களில் காரில் ஏசி போட்டு பயணிக்கும் போது சீட்டில் அமரும் பகுதியில் வியர்வை வருவதை தடுக்க இந்த வகை சீட் உதவும் நிலையில் இதை நீக்கியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஃபார்ச்சூனர் கார் சுமார் 3 லட்சம் கார்களை விற்பனை செய்து புதிய மைல் கல்லை எட்டி பிடித்துள்ளது. இந்நிலையில் முழு சைஸ் எஸ்யூவி எம்எச்இவி வேரியன்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் தனது 4X2 வேரியன்ட் காரின் விலையை சுமார் ரூ68 ஆயிரம் வரை உயர்த்தியது.

இது மட்டுமல்ல டீசல் லைன்அப்களிலும் விலை உயர்வை அந்நிறுவனம் அறவித்துள்ளது. 4X2 டீசல் மேனுவல், 4X2 டீசல் ஆட்டோமெட்டிக், 4X4 டீசல் மேனுவல் வேரியன்ட்களுக்கு ரூ40 ஆயிரம் விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபார்ச்சூனர் ஜிஆர்-எஸ், 4X4 லெஜண்டர் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் ஆகிய வேரியன்ட்களில் ரூ40 ஆயிரம் விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக கார் சாதாரண கார்களில் வெயில் காலத்தில் பயணிக்கும் போது என்னதான் ஏசி போட்டு பயணித்தாலும் காரில் லெதர் சீட்களில் அமரும் போது நமது முதுகு பகதி, தொடை பகுதிகளில் வியர்வை வரும். கார் சீட்டிலிருந்து எழுந்திருக்கும் போது இந்த வியர்வை சீட்டில் படிந்திருப்பதை பார்த்திருப்போம். இப்படியான பிரச்சனையை தவிர்க்க தற்போது வென்டிலேட்டட் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் லெஜெண்டர் காரின் 4X4 வேரியன்டில் வென்டிலேட்டட் சீட் ஆப்ஷனை அந்நிறுவனம் நீக்கியுள்ளது. இனி இந்த ஆப்ஷ 4X2 வேரியன்ட்களில் மட்டுமே இடம் பெறும் என தெரிவித்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த காரில் மிக முக்கிய அம்சமாக பார்க்கப்பட்டது.
டொயோட்டா நிறுவனம் தனது ஃபார்ச்சூனர் மற்றும் லெஜண்டர் 4X4 ஆட்டோமெட்டிக் வேரியன்ட் காரில் 48 வோல்ட் மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இ்நத காரில் 2.8 லிட்டர் டீசல் இன்ஜின் பொசுருத்தப்ப்டடுள்ளது. இத்துடன் எலெக்ட்ரிக் மோட்டாரை இயக்க லித்தியம் அயான் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரில் ஆட்டோமெட்டிக் ஸ்டார்ட் ஸ்டாப் அம்சங்கள் இரகு்கிறது. இந்த தொழிற்நுட்பம் மூலம் இந்த கார் அதிக மைலேஜ் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் ரெகுலர் டீசல் வேரியன்டில் 14.01 கி.மீ மைலேஜையும் மைல்டு ஹைபிரிட் வேரியன்டில் 14.55 கி.மீ மைலேஜையும் வழங்குகிறது. அதிக மைலேஜ் தரும் பெரிய காராக இந்த கார் தான் இருக்கிறது. இதனால் மக்கள் பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டொயோடாடா ஃபார்ச்சூனர் மற்றும் லெஜெண்டர் காரில் இந்த அம்சம் நீக்கப்பட்டது நிச்சயம் மிக அதிர்ச்சியான விஷயம் தான். இந்த காரின் விலை அதிகரிப்பைதடுக்க இந்த யுக்தியை அந்நிறுவனம் செய்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தான் இந்த காரை வாங்கும் வாடிக்கையாளர்கள் பணத்தை விட வசதியை தேடுபவர்களாக தான் இருப்பார்கள். இதனால் இந்த முடிவு எடுக்கப்பட்ட காரணம் பணமாக இருந்தால் இது தவறான முடிவாக கூட இருக்கலாம்.


Click it and Unblock the Notifications









