டொயோட்டா காரை வாங்குவதற்கு இதைவிட பெரிய காரணம் என்ன வேண்டும்? ஃபார்ச்சூனரில் இப்படியொரு வசதியா!!

டொயோட்டா (Toyota) நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் கார்களுள் ஒன்று ஃபார்ச்சூனர் (Fortuner) ஆகும். சற்று விலைமிக்க காராக இருப்பினும், ஃபார்ச்சூனரை வாங்குவதற்கும் நம் நாட்டில் நிறைய பேர் தயாராக உள்ளனர். இதனாலேயே அவ்வப்போது ஃபார்ச்சூனரை மறக்காமல் அப்டேட் செய்துவிடும் டொயோட்டா நிறுவனம், அந்த வரிசையில் தற்போது ஃபார்ச்சூனரின் மைல்ட் ஹைப்ரீட் (Mild Hybrid) வெர்சனை மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் ஏற்கனவே சில டொயோட்டா மைல்ட் ஹைப்ரீட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுவரும் நிலையில், அந்த வரிசையில் தற்போது ஃபார்ச்சூனர் மைல்ட் ஹைப்ரீட் கார் இணைந்துள்ளது.

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் என இரு விதமான ஆற்றல்களிலும் இயங்கக்கூடிய ஹைப்ரீட் கார்களுக்கு மெல்ல மெல்ல வரவேற்பு அதிகரித்து வருகிறது. அதாவது, ஹைப்ரீட் கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. ஹைப்ரீட் கார்கள் பொதுவாக இரு விதமான ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகின்றன.

toyota fortuner mild hybrid launched

அவற்றுள் ஒன்று, பிளக்-இன் (Plug-in) ஹைப்ரீட் ஆகும். டொயோட்டா நிறுவனம் அதன் பிரபலமான இன்னோவா (Innova) காரை பிளக்-இன் ஹைப்ரீட் வெர்சனில் இன்னோவா ஹைகிராஸ் என்கிற பெயரில் விற்பனை செய்து வருகிறது. இது இல்லாமல், மற்ற கார் நிறுவனங்களும் சில பிளக்-இன் ஹைப்ரீட் கார்களை விற்பனை செய்கின்றன. ஹைப்ரீட் கார்களில் உள்ள மற்றொரு ஆப்ஷன் தான், மைல்ட் ஹைப்ரீட் ஆகும்.

பிளக்-இன் ஹைப்ரீட் காரை காட்டிலும் சற்று ஆற்றல் குறைவான ஹைப்ரீட் தொழிற்நுட்பத்துடன், அதற்கேற்ப சற்று குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுபவை மைல்ட்-ஹைப்ரீட் கார்கள் ஆகும். பிளக்-இன் ஹைப்ரீட் கார்களில் அளவில் பெரியதான பேட்டரிகள் வழங்கப்படுகின்றன. எலக்ட்ரிக் காரின் பேட்டரியை போன்று பிளக்-இன் ஹைப்ரீட் காரின் பேட்டரியை நாமாக சார்ஜ் செய்யலாம்.

toyota fortuner mild hybrid launched

பேட்டரியின் அளவு பெரியதாக கொடுக்கப்படுவதால், அதற்கேற்ப ரேஞ்சும் அதிகமாக கிடைக்கும். அதாவது, என்ஜினின் உதவியில்லாமல் பேட்டரியின் உதவியுடனே காரை குறிப்பிட்ட தொலைவிற்கு ஓட்ட முடியும். மறுப்பக்கம், மைல்ட்-ஹைப்ரீட் காரில் பெரிய அளவிலான பேட்டரிகள் வழங்கப்படுவது இல்லை. அவ்வாறு வழங்கப்படும் சிறிய அளவிலான பேட்டரிகளையும் வெளியில் இருந்து சார்ஜ் செய்ய முடியாது, பெட்ரோல் என்ஜினின் உதவியுடன் தான் அவை தானாக சார்ஜ் ஏற்றிக் கொள்ளும்.

இவ்வாறு பேட்டரியை சார்ஜ் செய்வதற்காக என்ஜின் கூடுதலாக எரிபொருளை குடிக்கும். சரி... இவ்வாறு சார்ஜ் செய்யப்படும் பேட்டரியின் பவரில் காரை இயங்க வைக்கலாமா என்று பார்த்தால், அதுவும் முடியாது. மைல்ட்-ஹைப்ரீட் கார்கள் என்ஜினின் உதவியை தான் பெரிதும் சார்ந்திருக்கின்றன. இத்தகைய மைல்ட்-ஹைப்ரீட் கார்களுள் ஒன்றாகவே தற்போது புதியதாக டொயோட்டா ஃபார்ச்சூனர் மைல்ட்-ஹைப்ரீட் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

toyota fortuner mild hybrid launched

ரூ.44.72 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் புதிய ஃபார்ச்சூனர் மைல்ட் ஹைப்ரீட் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஃபார்ச்சூனர் லெஜெண்டர் காரிலும் மைல்ட்-ஹைப்ரீட் தொழிற்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. ஃபார்ச்சூனர் லெஜெண்டர் மைல்ட்-ஹைப்ரீட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.50.09 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய ஃபார்ச்சூனர் மைல்ட்-ஹைப்ரீட் கார்களுக்கான புக்கிங்குகளை இன்று (ஜூன் 3) முதல் டொயோட்டா துவங்கியுள்ளது.

புக் செய்தவர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகளை இந்த ஜூன் மாதத்தின் 3ஆம் வாரத்தில் இருந்து துவங்க டொயோட்டா திட்டமிட்டுள்ளது. ஹைப்ரீட் கார்களில் பெரும்பாலும் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுவதுதான் வழக்கம். ஆனால், ஃபார்ச்சூனர் மைல்ட்-ஹைப்ரீட் காரில் டீசல் என்ஜினை டொயோட்டா வழங்கியுள்ளது. இன்னும் சொல்லப்போனால், ஃபார்ச்சூனர் கார் ஆனது டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் தான் அதிகமாக கிடைக்கிறது. பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா நிறுவனம் அதன் ஹைரைடர் (Hyryder) மற்றும் கிளான்ஸா (Glanza) கார்களில் ஏற்கனவே மைல்ட்-ஹைப்ரீட் ஆப்ஷனை 'நியோ டிரைவ்' (Neo Drive) என்கிற தொகுப்பின் கீழ் விற்பனை செய்து வருகிறது. தற்போது அந்த தொகுப்பில் ஃபார்ச்சூனர் காரும் இணைந்துள்ளது. ஹைப்ரீட் கார்களுக்கு இந்தியாவில் மக்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பு அதிகரித்து வருவதால், ஃபார்ச்சூனர் மைல்ட்-ஹைப்ரீட் காரையும் மக்கள் நிறைய பேர் வாங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 3, 2025, 11:24 [IST]
English summary
Toyota fortuner mild hybrid car launched in india check price features all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X