இந்த காஸ்ட்லியான காரை 3 லட்சம் பேர் வாங்கிட்டாங்களா? அப்படி இதுல என்னதான் இருக்குது?

டொயோட்டா நிறுவனம் தனது ஃபார்ச்சூனர் காரை 3 லட்சம் கார்களை விற்பனை செய்து புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. இந்நிறுவனம் கடந்த 2009ம் ஆண்டு அறிமுகம் செய்த ஃபார்ச்சூனர் மற்றும் கடந்த 2021ம் ஆண்டு அறிமுகம் செய்த ஃபார்ச்சூனர் லெஜென்டர் என்ற இரண்டு கார்களும் சேர்ந்து இந்த சாதனை மைல் கல்லை எட்டியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டொயோட்டோ நிறுவனம் நீண்ட ஆண்டுகளாக மக்களின் நன்மதிப்பை பெற்ற நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் இந்திய மக்கள் விரும்பும் வகையிலான வாகனங்களை தயாித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் கடந்த 2009ம் ஆண்டு அறிமுகம் செய்த ஃபார்ச்சூனர் கார் இந்திய மார்கெட்டில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அரசியல்வாதிகள் முதல் பல பிரபலங்கள் இந்த காரை சொந்தமாக வாங்கியுள்ளனர்.

Toyota Fortuner Milestone

இந்நிலயில் டொயோட்டா நிறுவனம் இந்த விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டி பிடித்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டு அறிமுகமான ஃபார்ச்சூனர் மற்றும் அதை அப்டேட் செய்து கடந்த 2021ம் ஆண்டு வெளியான லெஜென்டர் ஆகிய இரண்டு கார்களும் சேர்ந்து இவரை 3 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் தற்போது 2வது தலைமுறை கார் விற்பனையாகி வருகிறது. இந்த கார் சுமார் 5 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கிறது. இந்த காரில் 18 இன்ச் அலாய் வீல்கள் இருக்கிறது. இந்த காரில் அதிகமான கிரவுண்ட் கிளியரன்ஸ், லேடர் ஃபிரேம் சேஸிஸ், 4x4 ஆஃப் ரோடு அம்சம் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சம் சிறப்பாக இருக்கிறது. இந்த காரின் பிரிமியம் வெர்ஷன் கடந்த 2021ம் ஆண்டு ஃபார்ச்சூனர் லெஜென்டர் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது.

Toyota Fortuner Milestone

இந்த ஃபார்ச்சூனர் காருக்குள்ளே லெதர் சீட்டுகள், வென்டிலேட் செய்யப்பட்ட பவர்டு சீட்டுகள், டுயல் ஸோன் கிளைமேட் கண்ட்ரோல், பின்பக்க ஏசி வென்ட்கள், ஆம்பியன்ஸ் லைட்டிங், க்ரூஸ் கண்ட்ரோல், 8 இன்ச் டச் ஸ்கிரீன் சிஸ்டம், ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம்,11 ஸ்பீக்கர் கொண்ட ஜேபிஎல் ஆடியோ சிஸ்டம், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், கெஸ்டர் கண்ட்ரோல்டு பவர்டு டெயில் கேட், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் மல்டி இன்ஃபர்மேஷன் டிஸ்பிளே உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது.

இந்த காரில் உள்ள இன்ஜின் ஆப்ஷனை பொருத்தவரை 204 பிஎஸ் பவர் மற்றும் 420 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்ம் 2.8 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் பின்பக்க வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் ஆகிய ஆப்ஷன்கள் உள்ளன. இந்த இன்ஜின் ஃபார்ச்சூனர் மற்றும் லெஜெண்டர் ஆகிய 2 கார்களிலும் பொருத்தப்படுகிறது.

Toyota Fortuner Milestone

இது போக ஃபார்ச்சூனர் காரில் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் இருக்கிறது. இந்த காரில் 166 பிஎஸ் பவர், 245 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் 2.7 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் இருக்கிறது. இது 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்படுகிறது. இந்த கார் ரியர் வீல் டிரைவ் ஆப்ஷனுடன் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. இது ஃபார்ச்சூனர் காரில் மட்டுமே இருக்கும் இன்ஜின் ஆப்ஷன், லெஜென்டர் காரில் இது கிடையாது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை பொருத்தவரை ரூ35.37 லட்சம் முதல் ரூ51.94 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இதுவே டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜென்டர் காரை பொருத்தவரை ரூ44.11 லட்சம் முதல் ரூ48.09 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் மார்கெட்டில் உள்ள எம்ஜி குலோஸ்டர், ஜீப் மெரிடியன், ஸ்கோடா கோடியாக் உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக விற்பனையாகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் மார்கெட்டில் சுமார் 40 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்பனையாகி வரும் நிலையில் 3 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளது. இது நிச்சயம் மிகப்பெரிய சாதனை தான். இந்த கார் சிறப்பாக தொடர்ந்து விற்பனையாகும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 27, 2025, 11:50 [IST]
English summary
Toyota fortuner milestone 3 lakh sales since 2009
மேலும்... #toyota #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X