இதனாலதான் ஃபார்ச்சூனர் காரை அரசியல்வாதிங்க அதிகமா வாங்குறாங்களோ.. 2019ல வாங்கின கார் மாடல் மாதிரியா தெரியுது!!
இந்திய அரசியல்வாதிகள் பலரின் பிரியமான கார் மாடலாக டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) உள்ளது. இதற்கேற்ப இந்தியாவில் உள்ள பெரும்பாலான அரசியல்வாதிகளிடத்தில் இந்த கார் மாடல் பயன்பாட்டில் இருப்பதை நம்மால் காண முடிகின்றது. கடந்த நாட்களில் இன்னோவா காரில் பயணித்து வந்த அரசியல் புள்ளிகள் பலர் தற்போது இந்த காரிலேயே பயணித்துக் கொண்டிருக்கின்றனர். ஏன் நம்ம ஊரு கவுன்சிலரிடம் கூட இந்த கார் மாடல் பயன்பாட்டில் இருப்பதை நம்மால் பார்க்க முடிகின்றது.
அந்த அளவிற்கே அரசியல்வாதிகள் மத்தியில் புகழ்பெற்ற கார் மாடலாக விளங்கிக் கொண்டிருக்கின்றது, டொயட்டா ஃபார்ச்சூனர். இந்த கார் மாடலே ஆண்டுகள் பல ஆகியிருக்கின்ற போதிலும் ஷோரூமில் இருந்து புதிதாக இறக்கியதைப் போல புத்தம் புதிதாகக் காட்சியளிக்கும் படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

படத்தில் இருக்கும் அந்த ஃபார்ச்சூனர் வாங்கப்பட்ட ஆண்டு 2019 என கூறப்படுகின்றது. ஏறக்குறைய ஏழு ஆண்டுகள் பழைய கார் மாடலே இது ஆகும். இருப்பினும், புதிய தலைமுறை ஃபார்ச்சூனர் லெஜண்டர் காரை போல அது காட்சியளிக்கின்றது. இது எப்படி சாத்தியம் என்பதே பலரின் சந்தேகமாக மாறியிருக்கின்றது.
மாடிஃபிகேஷன் செயலின் வாயிலாகவே இதை சாத்தியப்படுத்தி இருக்கின்றனர். ஆமாங்க, நாம் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த ஃபார்ச்சூனர் கார், ஃபார்ச்சூனர் லெஜண்டர் (Toyota Fortuner Legender)ஆக மாறியதற்கு பின்னால் மாடிஃபிகேஷன் செயலே காரணமாக உள்ளது. இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் டைப் 3 ஃபார்ச்சூனரையே கார் மாடிஃபிகேஷன் வாயிலாக ஃபார்ச்சூனர் லெஜண்டராக மாற்றி இருக்கின்றனர்.
இந்த கார் மாடலை புதிதாக வாங்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ரூ. 60 லட்சம் வரையாவது செலவாகும். ஆனால், சில லட்சம் ரூபாய் செலவிலேயே புத்தம் புதிய கன்டிஷனுக்கு மாற்றியிருக்கின்றனர். இதன் வாயிலாக புதிய காருக்கு ஆகும் பல லட்ச ரூபாயை அவர்கள் சேமித்திருக்கின்றனர்.
பாடி பேனல், லைட் செட்-அப், காரின் உட்பக்கம் என மொத்தத்தையும் மாற்றியிருக்கின்றனர். தோராயமாக ரூ. 2 - ரூ. 3 லட்சம் வரை செலவாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயர் தரத்தில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதனாலேயே இந்த அளவிற்கு அதிக செலவு காரி மாடிஃபிகேஷனுக்கு ஆகியிருக்கின்றது.

குறிப்பாக, காரின் உட்பக்க மாற்றத்திற்கே பெருத்த செலவாகியிருப்பது தெரிய வந்திருக்கின்றது. இதற்கேற்ப வழக்கமான ஃபார்ச்சூனர் காரைக் காட்டிலும் அதிகம் பிரீமியம் லுக்கில் இந்த ஃபார்ச்சூனர் காட்சியளிக்கின்றது. குறிப்பாக, அலாய் வீல்களுக்கு மட்டுமே ரூ. 80 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை செலவாகி இருக்கின்றது.
இதுபோன்று குறைவான செலவில் பழைய ஃபார்ச்சூனர் காரை புதிதுபோல் மாற்ற முடியும் என்பதாலேயே இந்த காரை அரசியல்வாதிகள் அதிகம் வாங்கிக் கொண்டிருக்கின்றனரோ என நம்மை இந்த சம்பவம் சந்தேகிக்க வைத்திருக்கின்றது. ஆனால், இந்த காரை பலரும் விரும்பி வாங்க அதன் ஆஃப்-ரோடை சமாளிக்கும் திறன் மற்றும் ஆடம்பர அம்சங்களே முக்கிய காரணமாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இதுபோன்று வாகனங்களை மாடிஃபைச் செய்வது மோட்டார் வாகன சட்டத்தின் குற்றம் ஆகும். அதேவேளையில், ஆர்டிஓ-விடம் அனுமதி பெற்றால் இந்த மாதிரியான வாகனங்களை பயன்படுத்திக் கொள்ள முடியும். இல்லையெனில் காவல்துறையின் பறிமுதல் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும். இதேபோல், வாகன இன்சூரன்ஸை கிளைம் செய்வதிலும் மிகப் பெரிய சிக்கல் ஏற்படும் என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









