31 கிமீ மைலேஜ் தரும் டொயோட்டா காரின் விலை இப்ப இவ்ளோதானா! மாருதி காரை வாங்கறதுக்கு பதில் இதை வாங்கலாம்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பிரீமியம் ஹேட்ச்பேக் ரக கார்களில் ஒன்று டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza). இது மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். அதாவது மாருதி சுஸுகி பலேனோ கார்தான், டொயோட்டா க்ளான்சா என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.
சுஸுகி நிறுவனத்துடனான கூட்டணியின் மூலம் டொயோட்டா நிறுவனம் இதை சாத்தியமாக்கியுள்ளது. இந்திய சந்தையில் மாருதி சுஸுகி பலேனோ காரை போலவே, டொயோட்டா க்ளான்சா காரின் விற்பனை எண்ணிக்கையும் மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. இதற்கு தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) ஒரு உதாரணம்.

டொயோட்டா க்ளான்சா காரின் நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட்டை காடிவாடி தளம் தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி பார்த்தால் டொயோட்டா நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5,102 க்ளான்சா கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4,624 ஆக மட்டுமே இருந்தது.
அதாவது கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், 478 டொயோட்டா க்ளான்சா கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் டொயோட்டா க்ளான்சா கார் விற்பனையில் 10 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

அத்துடன் நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 ஹேட்ச்பேக் கார்களின் பட்டியலில் (Top 10 Hatchbacks August 2025), டொயோட்டா க்ளான்சா 6வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் முதல் 5 இடங்களில் முறையே மாருதி சுஸுகி வேகன் ஆர், மாருதி சுஸுகி பலேனோ, மாருதி சுஸுகி ஸ்விஃப்ட், மாருதி சுஸுகி ஆல்டோ மற்றும் டாடா டியாகோ ஆகிய கார்கள் உள்ளன.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டொயோட்டா க்ளான்சா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 6.39 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 9.15 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை டொயோட்டா இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
டொயோட்டா க்ளான்சா காரின் பெட்ரோல்-மேனுவல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 22.35 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்க கூடியவையாக இருக்கின்றன. அதே நேரத்தில் பெட்ரோல்-ஏஎம்டி வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 22.94 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன. நீங்கள் இதை விட அதிக மைலேஜ் கிடைக்க வேண்டும் என நினைத்தால், சிஎன்ஜி ஆப்ஷனை தேர்ந்தெடுக்கலாம்.
ஏனெனில் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 30.61 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன. எனவே ஓரளவிற்கு குறைவான விலையில் அதிக மைலேஜ் வழங்க கூடிய அதே நேரத்தில் பிரீமியமான ஒரு ஹேட்ச்பேக் ரக காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, டொயோட்டா க்ளான்சா நல்ல ஆப்ஷனாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) மற்றும் ஹூண்டாய் ஐ20 (Hyundai i20) போன்ற கார்களுடன், டொயோட்டா க்ளான்சா போட்டியிட்டு வருகிறது. அத்துடன் மாருதி சுஸுகி பலேனோவிற்கும் கூட, டொயோட்டா க்ளான்சா ஒரு மாற்று ஆப்ஷன்தான்.


Click it and Unblock the Notifications








