31 கிமீ மைலேஜை வாரி வழங்க கூடிய டொயோட்டா காரை இந்த ரேட்ல விக்கறாங்களா! மாருதி மாதிரிலாம் இல்ல மாருதியேதான்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza). இது மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) காரின் ரீ-பேட்ஜ் வெர்ஷன் ஆகும். அதாவது மாருதி சுஸுகி பலேனோ கார்தான், டொயோட்டா க்ளான்சா என்ற பெயரில் ரீ-பேட்ஜ் செய்யப்பட்டு விற்பனையாகி கொண்டுள்ளது. சுஸுகி நிறுவனத்துடன் டொயோட்டா நிறுவனம் கூட்டணி வைத்துள்ளது. இந்த கூட்டணியின் மூலமாக இந்தியாவில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் பல்வேறு கார்களை டொயோட்டா நிறுவனம் தனது பிராண்டில் ரீ-பேட்ஜ் செய்து விற்பனை செய்து வருகிறது.
மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) கார் டொயோட்டா பிராண்டில் ரூமியான் (Toyota Rumion) என்ற பெயரில் விற்பனை செய்யப்படுவதை இதற்கு ஒரு உதாரணமாக கூற முடியும். இதன்படிதான் மாருதி சுஸுகி பலேனோ கார் டொயோட்டா பிராண்டில் க்ளான்சா என்ற பெயரில் விற்பனையாகி கொண்டுள்ளது.

இந்த காரின் நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) வெளியாகியுள்ளது. இதன்படி டொயோட்டா நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4,596 க்ளான்சா கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4,581 ஆக இருந்தது.
அதாவது கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 15 டொயோட்டா க்ளான்சா கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. டொயோட்டா க்ளான்சா கார் விற்பனையில் பெரிய அளவிலான வளர்ச்சியையோ அல்லது வீழ்ச்சியையோ பதிவு செய்யவில்லை என்பது இந்த சேல்ஸ் ரிப்போர்ட் மூலம் தெரிய வருகிறது.

நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10 ஹேட்ச்பேக் கார்களின் (Top 10 Hatchbacks) பட்டியலில், டொயோட்டா க்ளான்சா காருக்கு 7வது இடம் கிடைத்துள்ளது. நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான கார்களில் ஒன்றாக டொயோட்டா க்ளான்சா திகழ்கிறது.
ஹூண்டாய் ஐ20 (Hyundai i20) மற்றும் டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) ஆகிய கார்களுக்கு எல்லாம் டொயோட்டா க்ளான்சா நேரடி போட்டியாக திகழ்கிறது. அத்துடன் மாருதி சுஸுகி பலேனோ காருக்கும் கூட டொயோட்டா க்ளான்சா நல்ல மாற்று ஆப்ஷன்தான். இது அதிகம் மைலேஜ் வழங்க கூடிய கார்களில் ஒன்றாகும்.
அதாவது டொயோட்டா க்ளான்சா காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 30.61 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டொயோட்டா க்ளான்சா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 6.90 லட்ச ரூபாயாகவும், டாப் வேரியண்ட்டின் விலை 10 லட்ச ரூபாயாகவும் உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி பலேனோ, ஹூண்டாய் ஐ20 மற்றும் டாடா அல்ட்ராஸ் ஆகிய கார்களுக்கு மாற்றாக ஒரு பிரீமியம் ஹேட்ச்பேக் ரக காரை வாங்க வேண்டும் என்று நினைக்க கூடிய இந்திய வாடிக்கையாளர்களுக்கு டொயோட்டா க்ளான்சா நல்ல ஆப்ஷன் என்பது எங்களுடைய கருத்து.


Click it and Unblock the Notifications








