பைக் மாதிரி மைலேஜை வாரி வழங்கும் டொயோட்டா கார்! மாருதி பொருளை எடுத்து மாருதியையே போட்டுட்டாங்க!

டொயோட்டா (Toyota) மற்றும் சுஸுகி (Suzuki) ஆகிய 2 நிறுவனங்களும் கூட்டணி அமைத்து இயங்கி வருகின்றன. இந்த கூட்டணியின் மூலம், இந்திய சந்தையில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் ஒரு சில கார்களை, டொயோட்டா நிறுவனம் தனது பிராண்டின் கீழும் ரீ-பேட்ஜ் செய்து விற்பனை செய்து கொண்டுள்ளது. மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) கார், டொயோட்டா ரூமியான் (Toyota Rumion) என்கிற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருவதை இதற்கு ஒரு உதாரணமாக சொல்லலாம்.

இந்த கூட்டணியின் மூலம், இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மற்றொரு கார் டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza) ஆகும். பிரீமியம் ஹேட்ச்பேக் (Premium Hatchback) ரகத்தை சேர்ந்த இது, மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது.

Toyota Glanza

சொல்லப்போனால் இதுதான் இந்திய சந்தையில் டொயோட்டா நிறுவனத்தால் ரீ-பேட்ஜ் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் கார் ஆகும். டொயோட்டா க்ளான்சாவிற்கு பிறகுதான், டொயோட்டா ரூமியான் போன்ற ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட கார்கள் எல்லாம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன.

டொயோட்டா க்ளான்சா இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதில் இருந்தே டொயோட்டா நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கையை உயர்த்துவதில், க்ளான்சா குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி கொண்டுள்ளது. டொயோட்டா க்ளான்சா விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு சுமார் 6 வருடங்கள் கடந்து விட்டன.

Toyota Glanza Interior

இருப்பினும் ஒவ்வொரு மாதமும் கணிசமான விற்பனை எண்ணிக்கையை டொயோட்டா க்ளான்சா பதிவு செய்து வருகிறது. ஆனால் கடந்த 2024-25ம் நிதியாண்டு இந்திய சந்தையில் டொயோட்டா க்ளான்சா காருக்கு சரியாக அமையவில்லை. ஆம், டொயோட்டா க்ளான்சா கார் விற்பனையில் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

2024-25ம் நிதியாண்டில் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 ஹேட்ச்பேக் கார்களின் (Top 10 Hatchbacks) பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் டொயோட்டா க்ளான்சா கார் 8வது இடத்தை மட்டுமே பிடித்துள்ளது. அத்துடன் 7 சதவீத சரிவையும் டொயோட்டா க்ளான்சா பதிவு செய்துள்ளது.

டொயோட்டா நிறுவனம் கடந்த 2024-25ம் நிதியாண்டில் 48,839 க்ளான்சா கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, அதற்கு முந்தைய 2023-24ம் நிதியாண்டில் 52,262 ஆக இருந்தது. அதாவது டொயோட்டா க்ளான்சா காரின் விற்பனை 7 சதவீதம் குறைந்து போயுள்ளது.

டொயோட்டா க்ளான்சா கார் மொத்தம் 5 கலர் ஆப்ஷன்களில் (Colour Options) கிடைத்து கொண்டுள்ளது. அவை இன்ஸ்டா ப்ளூ, கேமிங் க்ரே, என்டைசிங் சில்வர், ஸ்போர்ட்டின் ரெட் மற்றும் கஃபே ஒயிட் ஆகியவை ஆகும். செயல்திறனை பொறுத்தவரையில் டொயோட்டா க்ளான்சா காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் (Engine Option) வழங்கப்படுகிறது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 6,000 ஆர்பிஎம்மில் 66 kw பவரையும், 4,400 ஆர்பிஎம்மில் 113 Nm டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் (Gear Box Options) வழங்கப்படுகின்றன.

இதில், மேனுவல் கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 22.35 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் ஏஎம்டி மாடல் ஒரு லிட்டருக்கு 22.94 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டொயோட்டா க்ளான்சா காரின் எரிபொருள் டேங்க் கொள்ளளவு (Fuel Tank Capacity) 37 லிட்டர்கள் ஆகும்.

இதுதவிர டொயோட்டா க்ளான்சா காரில் சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷனும் கொடுக்கப்படுகிறது. அதுவும் 1.2 லிட்டர் இன்ஜின்தான். இதன் பவர் அவுட்புட் 6,000 ஆர்பிஎம்மில் 57 kw பவர் மற்றும் 4,300 ஆர்பிஎம்மில் 98.5 Nm டார்க் ஆக உள்ளது. டொயோட்டா க்ளான்சா காரின் சிஎன்ஜி வேரியண்ட்களின் மைலேஜ் ஒரு கிலோவிற்கு 30.61 கிலோ மீட்டராக உள்ளது.

இதன் சிஎன்ஜி டேங்க் கொள்ளளவு 55 லிட்டர்கள் ஆகும். நாங்கள் இங்கே குறிப்பிட்டுள்ள அனைத்தும், டொயோட்டா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள மைலேஜ் என்பது கவனிக்கத்தக்கது. எனவே நடைமுறை பயன்பாட்டில் டொயோட்டா க்ளான்சா காரின் மைலேஜ் சற்று குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டொயோட்டா க்ளான்சா காரின் ஆரம்ப விலை 6.90 லட்ச ரூபாயாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையோ 10 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

மறுபக்கம் மாருதி சுஸுகி பலேனோ காரானது, 6.70-9.92 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவையும் எக்ஸ்-ஷோரூம் விலைதான். இதன்படி பார்த்தால், மாருதி சுஸுகி பலேனோ காரை விட, டொயோட்டா க்ளான்சா சற்று விலை உயர்ந்த கார்தான். ஆனால் டொயோட்டா பேட்ஜ் உடன் கிடைக்க கூடிய க்ளான்சா காரின் விலை ஒரு சில ஆயிரங்கள் மட்டுமே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

டொயோட்டா க்ளான்சா காரின் வசதிகளை (Features) பொறுத்தவரையில், 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, டில்ட் மற்றும் டெலஸ்கோபிக் வசதியுடன் கூடிய ஸ்டியரிங் வீல், ரியர் ஏசி வெண்ட்கள் போன்றவை எல்லாம் மிகவும் முக்கியமான அம்சங்களாக இருக்கின்றன.

அதே நேரத்தில் பாதுகாப்பு வசதிகளை (Safety Features) பொறுத்தவரையில், 6 ஏர்பேக்குகள், வெய்கில் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், இபிடி உடன் ஏபிஎஸ் மற்றும் ஹில் ஹோல்டு கண்ட்ரோல் போன்றவை எல்லாம் டொயோட்டா க்ளான்சா பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் மிகவும் முக்கியமான அம்சங்களாக உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹூண்டாய் ஐ20 (Hyundai i20), டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) போன்ற பிரீமியம் ஹேட்ச்பேக் கார்கள் எல்லாம், டொயோட்டா க்ளான்சாவின் நேரடி போட்டி மாடல்களாக இருக்கின்றன. அத்துடன் மாருதி சுஸுகி பலேனோவும் கூட டொயோட்டா க்ளான்சா காரின் நேரடி போட்டி மாடல்தான். அதிநவீன வசதிகள், சிறப்பான மைலேஜ் ஆகிய அம்சங்களுடன் கூடிய ஒரு பிரீமியம் ஹேட்ச்பேக் காரை எதிர்பார்க்கும் மிடில்-க்ளாஸ் மக்களுக்கு டொயோட்டா க்ளான்சா ஏற்றது.

More from DriveSpark

Article Published On: Sunday, April 20, 2025, 23:48 [IST]
English summary
Toyota glanza sales report financial year 2024 25 7 per cent down
மேலும்... #toyota #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+