டொயோட்டால 31 கிமீ மைலேஜ் குடுக்கற காரா! அதுவும் இவ்ளோ கம்மி விலையில்! மாருதி பொழப்புல மண்ண அள்ளி போட்டுட்டாங்க
இந்திய சந்தையில் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பிரீமியம் ஹேட்ச்பேக் (Premium Hatchback) ரக கார்களில் ஒன்று டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza). நடப்பு 2025ம் ஆண்டு மே மாதம் டொயோட்டா க்ளான்சா காரின் விற்பனை எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு மே மாதம், 4,753 டொயோட்டா க்ளான்சா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் இந்த எண்ணிக்கை, 4,517 ஆக மட்டுமே இருந்தது. இது 5 சதவீத வளர்ச்சி ஆகும்.

வருடாந்திர ரீதியிலான ஒப்பீட்டில் மட்டுமல்லாது, மாதாந்திர ரீதியிலான ஒப்பீட்டிலும் கூட, டொயோட்டா க்ளான்சா கார் விற்பனையில் மிகவும் சிறப்பான வளர்ச்சியையே பதிவு செய்துள்ளது. அதாவது நடப்பு 2025ம் ஆண்டு மே மாதம், 4,132 டொயோட்டா க்ளான்சா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.
ஆனால் இந்த எண்ணிக்கையானது, நடப்பு 2025ம் ஆண்டு மே மாதம், நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, 4,753 ஆக உயர்ந்துள்ளது. இந்த வகையில் பார்த்தால், டொயோட்டா க்ளான்சா கார் 13.07 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்த வளர்ச்சி டொயோட்டா நிறுவனத்திற்கு கண்டிப்பாக மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

இது மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். அதாவது மாருதி சுஸுகி பலேனோ கார்தான், ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டு, டொயோட்டா பிராண்டில், க்ளான்சா என்ற பெயரில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
டொயோட்டா க்ளான்சா கார் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்திருக்கும் நிலையில், மாருதி சுஸுகி பலேனோ காரோ, விற்பனையில் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதாவது கடந்த 2024ம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிட்டால், மாருதி சுஸுகி பலேனோ காரின் விற்பனை, 10 சதவீதம் குறைந்துள்ளது.
அதே நேரத்தில் நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிட்டால், மாருதி சுஸுகி பலேனோ காரின் விற்பனை, 11.85 சதவீதம் குறைந்துள்ளது. மாருதி சுஸுகி உடனான கூட்டணி டொயோட்டா நிறுவனத்திற்கு பலன் அளித்து கொண்டிருப்பதை இந்த எண்கள் மிகவும் தெளிவாக உணர்த்துகின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டொயோட்டா க்ளான்சா காரின் ஆரம்ப விலை வெறும் 6.90 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். அதே நேரத்தில் இதன் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 30.61 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகின்றன.
இந்த சரியான விலை நிர்ணயம் மற்றும் அதிக மைலேஜ் போன்ற காரணங்களால்தான், டொயோட்டா க்ளான்சா காரின் விற்பனை எண்ணிக்கை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. டொயோட்டா பிராண்டில் ஒரு மாருதி சுஸுகி காரை வாங்க வேண்டும் என நீங்கள் நினைத்தால், அதற்கு க்ளான்சா நல்ல ஆப்ஷன். மாருதி சுஸுகி பலேனோ மட்டுமல்லாது, ஹூண்டாய் ஐ20 மற்றும் டாடா அல்ட்ராஸ் போன்ற கார்கள் உடனும், டொயோட்டா க்ளான்சா போட்டியிட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








