இமயமலைக்கு கூட கொண்டு போய்ட்டு வரலாம்! டொயோட்டாவை உலகமே போற்றுவது இதனால்தான்!
டொயோட்டா (Toyota) நிறுவனம் ஹிலக்ஸ் (Hilux) என்கிற அதன் பிக்-அப் டிரக் (Pick-up Truck) வாகனத்தில் புதியதாக 'கருப்பு பதிப்பு' (Black Edition)-ஐ அறிமுகம் செய்துள்ளது. ரூ.37.90 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஹிலக்ஸ் பிளாக் எடிசன் பெயருக்கேற்ப முழுவதும் கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2025 (Auto Expo 2025) கண்காட்சியில் காட்சிக்கு நிறுத்தப்பட்டு இருந்த இந்த புதிய ஹிலக்ஸ் பிளாக் எடிசனை பற்றிய கூடுதல் விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம், வாங்க.
முழுவதும் கருப்பு நிறத்திலான வாகனங்களுக்கு நம் இந்திய மக்களிடையே எப்போதும் ஒரு தனி ஈர்ப்பு உள்ளது. இதனாலேயே, டாடா மோட்டார்ஸ் (Tata Motors), மஹிந்திரா (Mahindra) போன்ற முன்னணி நிறுவனங்கள் அவ்வப்போது தங்களது கார்களில் பிளாக் எடிசன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, பண்டிகை காலங்களில் இவ்வாறான பிளாக் எடிசன்களின் அறிமுகங்களை அதிகமாக காண முடியும்.

ஆனால், தற்போது டொயோட்டா நிறுவனம் பெரியதாக எந்தவொரு பண்டிகையும் இல்லாத சமயத்தில் ஹிலக்ஸின் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியாக அதில் பிளாக் எடிசனை அறிமுகம் செய்துள்ளது. ஹிலக்ஸ் ஆனது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மிகவும் சில பிக்-அப் டிரக் வாகனங்களுள் ஒன்றாகும். இந்தியாவில் பிக்-அப் டிரக் வாகனங்களுக்கு பெரியதாக மார்க்கெட் இல்லை. இருப்பினும், தொடர்ந்து ஹிலக்ஸை டொயோட்டா விற்பனை செய்து வருகிறது.
வழக்கமான ஹிலக்ஸ் வாகனத்துடன் ஒப்பிடுகையில், புதிய பிளாக் எடிசன் ஆனது தோற்றத்தில் வித்தியாசப்படுகிறது. புதிய ஸ்பெஷல் எடிசனுக்கு ஏற்ப வாகனத்தில் நிறைய காஸ்மெட்டிக் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆனால், வாகனத்தின் மெக்கானிக்கல் பாகங்களில் கை வைக்கப்படவில்லை. இருப்பினும், முழுவதும் கருப்பு நிறத்திலான தோற்றம் நிச்சயமாக மற்ற ஹிலக்ஸ் வாகனங்களில் இருந்து இந்த பிளாக் எடிசனை வேறுப்படுத்தி காட்டும்.
புதிய ஹிலக்ஸ் பிளாக் எடிசனில் முன்பக்க ரேடியேட்டர் கிரில், 18-இன்ச் அலாய் சக்கரங்கள் மற்றும் கதவு கைப்பிடிகள், வாகனத்தின் பின்பக்கத்தை காட்டும் வெளிப்புற கண்ணாடிகள் மற்றும் ஃபெண்டர் கார்னிஷ் என எல்லாமே கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. ஹிலக்ஸ் பிக்-அப் டிரக்கில் உட்புற கேபினில் நன்கு லக்சரியான அம்சங்கள் மற்றும் அதிநவீன தொழிற்நுட்ப வசதிகள் வழங்கப்படுவது வழக்கம். அவையாவும் புதிய பிளாக் எடிசனிலும் தொடரப்பட்டுள்ளன.
அந்த வகையில், பிரீமியம் தரத்திலான லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி மற்றும் ட்யூயல்-ஸோன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்டவை புதிய பிளாக் எடிசனில் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன், டேஸ்போர்டில் 8-இன்ச்சில் பொழுதுப்போக்கிற்கு டச்ஸ்க்ரீன் வழங்கப்பட்டுள்ளது. இது, ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே இணைப்பு வசதியை கொண்டதாக உள்ளது. டிரைவருக்கான இருக்கையை 8 விதமாக மடக்கக்கூடிய வசதி உள்ளது.
பின்புறத்தை பார்க்க வாகனத்திற்குள் வழங்கப்படும் ரியர்-வியூ மிரர் ஆனது பின்னால் வரும் வாகனத்தின் வெளிச்சத்தை தாமாக டிம் செய்து பார்க்க உதவும். 7 ஏர்பேக்குகள், வைகல் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் எலக்ட்ரானிக் டிஃப்ரென்ஷியல் லாக், ஆட்டோமேட்டிக் ஹில் அசிஸ்ட் கண்ட்ரோல், டவுன்ஹில் அசிஸ்ட் கண்ட்ரோல் மற்றும் ஆட்டோமேட்டிக் லிமிடெட் ஸ்லிப் டிஃப்ரென்ஷியல் போன்ற ஹிலக்ஸில் வழங்கப்படும் அனைத்தும் புதிய பிளாக் எடிசனிலும் வழங்கப்பட்டுள்ளன.
அதேபோல், மற்ற ஹிலக்ஸ் வேரியண்ட்களில் பொருத்தப்படும் அதே 2.8 லிட்டர், 4-சிலிண்டர் டர்போ-டீசல் என்ஜின் தான் புதிய பிளாக் எடிசனிலும் கொடுக்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 201.15 பிஎச்பி மற்றும் 500 என்.எம் டார்க் திறனை வழங்கக்கூடிய இந்த டர்போ-டீசல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இது என்ஜினின் ஆற்றலை வாகனத்தின் 4 சக்கரங்களுக்கும் ஒரே நேரத்தில் அனுப்புகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அதிக சுமைகள் உடன் ஏற்ற, இறக்கங்களை கொண்ட மலைப்பாதைகளில் ஓட்டுவதற்கு உண்மையில் டொயோட்டா ஹிலக்ஸ் போன்ற பிக்-அப் டிரக் வாகனங்கள் தான் ஏற்றவை. இத்தகைய வாகனங்களில் சுமைகளை எடுத்து செல்வதுடன், 5 பேர் வரையில் தாராளமாக பயணிக்கலாம். ஹிலக்ஸின் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியாகவே தற்போது அதன் புதிய பிளாக் எடிசனை டொயோட்டா அறிமுகம் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








