மாருதி எல்லாம் ஒரம் போ! அதிக மைலேஜ் தரும் இந்த ரக கார்களை அதிகமா வித்தது யாரு தெரியுமா?
இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான ஸ்டிராங்க் ஹைபிரிட் வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனமாக டொயோட்டா நிறுவனம் மாறியுள்ளது. இந்நிறுவனம் கடந்த நிதியாண்டில் புதிய சாதனை மைல்கல்லை எட்டி பிடித்து மிகப்பெரிய மார்கெட் ஷேரையும் பெற்றுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டொயோட்டா நிறுவனம் தனது இன்னோவா ஹைகிராஸ், அர்பன் க்ரூஸர் ஹைரைடர், கேம்ரி மற்றும் வில்ஃபயர் ஆகிய கார்களின் ஹைபிரிட் வெர்ஷனை விற்பனை செய்து வருகிறது. இந்த கார்களில் எல்லாம் அந்நிறுவனம் ஸ்டிராங்க் ஹைபிரிட் தொழிற்நுட்பத்தை உட் புகுத்தியுள்ளது. இந்நிறுவனம் கடந்த நிதியாண்டில் மட்டும் மொத்தம் 80 ஆயிரம் ஸ்டிராங்க் ஹைபிரிட் கார்களை விற்பன செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்நிறுவனத்தின் ஒட்டு மொத்த விற்பனையில் ஸ்டிராங்க் ஹைபிரிட் கார்கள் மட்டம் 26.8 சதவீதம் விற்பனையாகியுளளது. இருப்பதிலேயே அதிகமாக பெட்ரோல் இன்ஜின் கார்கள் தான் 38.6 சதவீதம் விற்பனையாகியுள்ளது. டீசல் கார்கள் 25.6 சதவீதம் விற்பனையாகியுள்ளது. சிஎன்ஜி ஆப்ஷன் கொண்ட கார்கள் 9.1 சதவீதம் விற்பனையாகியுள்ளது.
ஹைபிரிட் வாகன விற்பனையை பற்றி பார்த்தால் இன்னோவா ஹைகிராஸ் கதான் அதிகமாக விற்பனையாகியுள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும் மொத்தம்53,005 கார்கள் விற்பனையாகியள்ளது. கடந்த நிதியாண்டில் இந்தியாவிலேயே சிறப்பாக விற்பனையான ஹைபிரிட் காராக இந்த கார் தான் இருக்கிறது. இதை தொடர்ந்து அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் 26,834 கார்களும், கேம்ரி 1865 கார்களும், வில் ஃபயர் 1155 கார்களும் விற்பனையாகியுள்ளன.

பெட்ரோல் இன்ஜின் கொண்ட கார்கள் விற்பனையில் கிளான்ஸா, ஹைரைடர், டைஸர் உள்ளிட்ட கார்கள் சிறப்பாக விற்பனையாகியுள்ளன. டீசல் இன்ஜின் கொண்ட கார்களில் இன்னோவா கிரைஸ்டா, ஃபார்ச்சூனர், ஹில்லக்ஸ், எல்சி 300 ஆகிய கார்களும், சிஎன்ஜியில் கிளான்ஸா, டைஸ், ரூமியான், அர்பன் க்ரூஸர் ஹைடர் ஆகய கார்கள் விற்பனையாகி வருகிறது.
ஒட்டு மொத்தமாக கடந்த நிதியாண்டில் மொத்தம் 82,848 ஹைபிரிட் கார்களை டொயோட்டா விற்பனை செய்துள்ளது. இது தான் இந்தியாவிலேயே மற்ற தயாரிப்பாளர்களை விட அதிக எண்ணிக்கையாகும். பெட்ரோல் கார்கள் 1,19,415 கார்களும், டீசல் கார்ள் 79,156 கார்களும் விற்பனையாகியுள்ளன.

டொயோட்டா நிறுவனம் இதுவரை இவி காரை விற்பனைக்கு கொணஅடு வரவில்லை. இந்நிலையில் அர்பன் க்ரூஸர் இவி காரை விரைவில் விற்பனைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் மாருதி இ-விட்டாரா காரின் டொயோட்டா வெர்ஷனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா மட்டுமல்ல ஒட்டு மொத்த உலகமே மாசு கட்டுப்பாட்டில் கவனம் செலுத்தும் நிலையில் எதிர்காலத்தில் ஸ்டிராங்க் ஹைபிரிட் கார்கள் தேவை அதிகமாக இருக்கும். தற்போது டொயோட்டா இந்த தொழிற்நுட்பத்தில் நல்ல முன்னேற்றத்தை கண்டு வெற்றி பெற்றுள்ளது என சொல்லலாம்.


Click it and Unblock the Notifications









