மாருதிக்கு மரண பயத்தை காட்டிய டொயோட்டா! அவன் பொருள எடுத்து அவனையே போட்டுட்டாங்க!

டொயோட்டா மற்றும் சுஸூகி ஆகிய நிறுவனஙங்களுக்கு இடையே சர்வதசே அளவில் உள்ள ஒப்பந்தபடி மாருதி சுஸூகி கிாரண்ட் விட்டாரா காரும், டொயோட்டா நிறுவனத்தின் ஹைரைடர் காரும் ஒரே தொழிற்நுட்பத்தில் தயாரிக்கப்படுகிறது. வழக்கமாக இப்படியான பகிர்வில் மாருதி நிறுவனம் தான் அதிக பலனடைந்து வந்த நிலையில் முதன் முறையாக மாருதியை பின்னுக்கு தள்ளி டொயோட்டா நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டொயோட்டா நிறுவனம் கடந்த மே மாதம் மொத்தம் 29,280 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் மொத்தம் 23,959 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 22 சதவீதம் அளவிற்கு விற்பனை வளர்ச்சிடையந்துள்ளது. இன்னோவா மற்றும் ஃபார்ச்சூனர் காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இது இந்த விற்பனை வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்துள்ளது.

Toyota Hyryder Beats Grand Vitara

கடந்த மே மாதம் டொயோட்டா நிறவனத்தின் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் சிறப்பாக விற்பனையை பெற்றது.இந்த கார் கடந்த மே மாதம் மொத்தம் 7573 கார்ளக் வறி்பனையாகியுள்ளது. இதுவே கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் 3906 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 94 சதவீதம் அளவிற்கு விற்பனை வளர்ச்சியடைந்துள்ளது. மாத விற்பனை 63 சதவீதம் அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளது.

டொயோட்டாவின் ஹைரைடர் கார் மற்றும் மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா கார் இரண்டு ஒரே பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படும் கார் தான் இந்நிலையில் டொயோட்டா ஹைரைடர் கார் மொத்தம் 5197 கார்கள் கடந்த மே மாதம் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் 9736 கார்கள் விற்பனையாகியிருந்தது. இந்த காரின் விற்பனை 47 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாத விற்பனையை பார்க்கும் போதும் 27 சதவீதம் விற்பனை குறைந்துள்ளது.

Toyota Hyryder Beats Grand Vitara

டொயோட்டா நிறுவனம் சமீபத்தில் தான் தனது ஹைரைடர் காரை பல்வேறு அம்சங்கள் மற்றும் புதிய வேரியன்டுடன் அப்டேட் செய்துள்ளது. இந்த அப்டேட்டில் அனைத்து வேரியன்ட்களுக்கும் 6 ஏர்பேக்குகளை ஸ்டாண்டர்ட் ஆக்கியள்ளது. இது போக பாதுகாப்பு அம்சங்கள் சில அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. டொயேடாட் நிறுவனம்தனது ஹைரைடர் காரின் ஆட்டோமெட்டிக் வேரியன்ட்களில் எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் உடன் புதிய 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ், ஆல் வீல் டிரைவ் வெர்ஷன் ஆகியவற்றை வழங்கியுள்ளது.

இந்த காரின் டாப் வேரியன்டில் 8 வழியிகளில் டிரைவர் சீட் பொஷிஸனை அட்ஜெஸ்ட் செய்யும் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இது போக முன்பக்க சீட் வென்டிலேட்டட் சீட்களாக வழங்கப்பட்டுள்ளன. இது போக கதவுகளில் மேனுவலி அட்ஜெஸ்ட் செய்யும் சன் ஷேடுகளும் வழங்கப்பட்டுள்ளன.

Toyota Hyryder Beats Grand Vitara

இது போக இந்த காரில் முக்கிய அம்சமாக ரிவைஸ்டு ஸ்பீடோ, ஆம்பியன்ஸ் லைட்டிங், டெடிகேட்டட் ஏர் குவாலிட்டி இன்டெக்ஸ், எல்இடி ரீடிங் மற்றும்ஸ்பாட் லைட்டுகள், டைப்சி ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது வாடிக்கையாளர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கிறது. நிச்சயம் இதன் காரணமாக இந்த கார் அதிகம் விற்பனையாகியுள்ளது என சொல்லலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா - சுஸூகி இடையே தொழிற்நுட்ப பகிர்வு ஒப்பந்தத்தில் அதிகம் மாருதி தயாரிப்பு தான் பலனடைந்ததாக மக்கள் பேசி வந்த நிலையில் முதன் முறையாக டொயோட்டா நிறுவனத்தின் பகிர்வு தயாரிப்பு ஒன்று மாருதி நிறுவன தயாரிப்பையும் தாண்டி அதிகமாக விற்பனையாகியுள்ளது. இது மிகப்பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, June 14, 2025, 17:00 [IST]
English summary
Toyota hyryder beats grand vitara may 2025 sales 94 percent growth
மேலும்... #maruti suzuki #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X