27.5 கி.மீ மைலேஜ் தந்தாலும் மாருதியை விட இந்த காரை தான் மக்கள் வாங்குறாங்க ஏன் தெரியுமா?
டொயோட்டா நிறுவனத்தின் ஹைரைடர் கார் சமீபகாலமாக மக்கள் மத்தியில் ஈர்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக இந்த காரின் விறபனை கணிசமான அளவு அதிகரித்துள்ளது. இதன் மாருதி வெர்னினான கிராண்ட் விட்டாரா காரை விட இந்த ஹைரைடர் கார் சிறப்பாக விற்பனையாகியுள்ளது. இப்படியாக இந்த காரின் கடந்த ஜூன் மாதம் விற்பனை விபரங்களை காணலாம் வாருங்கள்.
சர்வதேச அளவில் சுஸூகி மற்றும் டொயோட்டா ஆகிய இரு நிறுவனங்கள் இடையே ஒப்பந்தம் இருக்கிறது. அதன்படி இரு நிறவனங்களும் தங்கள் தயாரிப்பை பகிர்ந்து கொள்கின்றனர். அதன்படி மாருதி நிறுவனத்தில் கிராண்ட் விட்டாரா என்ற பெயரில் விற்பனையாகி வரும் கார் டொயோட்டா பிராண்டில் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் என்ற பெயரில் விற்பனையாகி வருகிறது.

கடந்த ஜூன் மாத விற்பனை விபரங்களை பார்க்கும் போது மக்கள் மத்தியில் இந்த ஹைரைடர் காருக்கு மவுசு அதிகரித்துள்ளது நமக்கு தெளிவாக தெரிகிறது. கடந்த ஜூன் மாதம் இந்த காரை மொத்தம் 7462 பேர் வாங்கியிருந்தார்கள். இதுவே கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் 4275 பேர் வாங்கியிருந்தனர். கிட்டத்தட்ட ஒரே ஆண்டில் 75 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க மாருதி நிறுவனத்தில் இதே கார் கிராண்ட் விட்டாரா என்ற பெயரில் விற்பனையாகி வரும் நிலையில் இந்த காரை வெறும் 6,828 பேர் தான் வாங்கியிருந்தனர் கடந்தாண்டு ஜூன் மாதம் 9679 பேர் வாங்கியிருந்த நிலையில் தற்போது விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளது. மாறாக டொயோட்டாவில் விற்பனை வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம் என விரிவாக காணலாம்.

மாருதி நிறுவனத்தின் கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா நிறுவனத்தின் ஹைரைடர் இந்த இரண்டு கார்களுமே கர்நாடக மாநிலம் பிடதி பகுதியில் டொயோட்டா நிறுவனத்திற்கு சொந்தமான ஆலையில் தான் தயாராகிறது. இருந்தாலும் இந்த இரண்டு கார்களுக்கும் இருக்கும் முக்கியமான வித்தியாசம் இதன் வடிவமைப்பு தான். கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வடிவமைப்பில் இருந்தாலும் அம்சங்கள் வேறுபடுகின்றன.
மேலும் இரண்டு கார்களும் கிட்டத்தட்ட ஒரே விலையில் விற்பனையானாலும், ஒரு சில அம்சங்களில் மாற்றம் இருக்கிறது. சொல்லப்போனால் மாருதி பிராண்டில் விற்பனையாகும் கிராண்ட் விட்டாரா காரில் தான் சில அம்சங்கள் ஹைரைடரை விட கூடுதலாக இருக்கலாம். ஆனால் இது வேரியன்டை பொருத்து மாறுபடும். ஆனால் இது விற்பனையை இவ்வளவு பெரிய அளவில் பாதிக்கும் காரணியாகவும் இருக்க முடியாது.

மைலேஜ் விஷயத்திலும் இரண்டு கார்களும் ஒரே மாதிரியாக அதிகபட்சமாக 27.97 கி.மீ மைலேஜை ஸ்டிராங்க் ஹைபிரிட் வேரியன்டில் வழங்குகின்றன. இந்த இரண்டிற்கும் இருக்கும் பெரிய வித்தியாசம் பிராண்ட் பெயர் தான். மாருதிக்கு நல்ல பெயர் இருந்தாலும் டொயோட்டா பிராண்டிற்கு மக்கள் மத்தியில் தனி மதிப்பு இருக்கிறது. இதனால் மக்கள் கிராண்ட் விட்டாராவை விட ஹைரைடர் காரை விரும்புகின்றனர். மேலும் இந்த கார்களை டொயோட்டா நிறுவனமே தயாரிப்பதால் மக்களுக்கு ஹைரைடர் காரை வாங்கும்போது ஒரிஜினல் காரை வாங்கிய திரும்பதி கிடைக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த இரண்டு வாகனமும் கிட்டதட்ட ஒரே மாதிரியாக அம்சங்களை பெற்றிருந்தாலும், இரண்டு கார்களையும் ஒப்பிடும் போது டொயோட்டா பிராண்டை மக்கள் விரும்ப துவங்கிவிட்டனர். இந்த கார்கள் அறிமுகமானபோது இருந்த நிலைமை தற்போது மாறி வருவதை நம்மால் தெளிவாக காண முடிகிறது.


Click it and Unblock the Notifications









