கெஞ்சி கேட்டாலும் ஒரு ரூபாய் கூட குறைக்க மாட்டாங்க! ஆனா இப்ப ரூ1.80 லட்சம் கம்மி விலையில் இந்த காரை வாங்கலாம்!
டொயோட்டா நிறுவனம் தனது இன்னோவா கிரைஸ்டா காரை சிறப்பாக விற்பனை செய்து வருகிறது. இந்த காருக்கு அதிக டிமாண்ட் இருப்பதால் இந்த காருக்கு பொதுவாக தள்ளுபடிகள் வருவது கடினம் ஆனால் ஜிஎஸ்டி குறைப்பால் லட்சகணக்கில் இந்த காரின் விலை குறையப்போகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
வரும் செப் 22ம் தேதி முதல் இந்தியா முழுவதும் புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமலுக்கு வருகிறது. இதனால் வாகனங்களின் விலை கணிசமாக குறைகிறது. இதில் டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா காரின் விலையும் குறைகிறது. பண்டிகை காலம் நெருங்கும் நிலையில் இந்த காரின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டொயோட்டா இன்னோவா காரின் விலை வித்தியாசம் குறித்த விபரங்களை இங்கே விரிவாக காணலாம் வாருங்கள். இந்த கரின் பேஸ் வேரியன்டான ஜிஎக்ஸ் வேரியன்டில் 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் ஆப்ஷன்கள் உள்ளன. இரண்டும் ஒரே விலை தான். இது மட்டுமல்லாமல் இதில் ஃபீட் வேரியன்டும் இருக்கிறது. இதுவும் அதே விலை தான். தற்போது இந்த கார்கள் ரூ19,99,000 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த வேரியன்ட் கார்கள் ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு பிறகு ரூ18,66,000 என்ற விலையில் விற்பனையாகும் அதாவது ரூ1.33 லட்சம் குறைவான விலையில் விற்பனைக்கு வருகிறது.
அடுத்தாக ஜிஎக்ஸ் பிளஸ் வேரியன்ட்டை பொருத்தவரை 7 மற்றும் 8 சீட்டர் ஆப்ஷன் இருக்கிறது. இதில் 7 சீட்டர் வேரியன்ட் ரூ21,71,000 என்ற விலையிலும், 8 சீட்டர் ரூ21,76,000 என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது. இந்த கார்கள் ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு பிறகு 7 சீட்டர் வெர்ஷன் ரூ20,26,500 என்ற விலையிலும், 8 சீட்டர் கார் ரூ20,31,000 என்ற விலையிலும் விற்பனைக்கு வருகிறது. 7 சீட்டர் கார் ரூ1,44,500 மற்றும் ரூ1,45,000 விலை குறைகிறது.

விஎக்ஸ் வேரியன்டில் 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் வெர்ஷன்கள் உள்ளன. தற்போது ரூ25,40,000 என்ற விலையிலும், 8 சீட்டர் கார் ரூ25,45,000 என்ற விலையிலும் விற்பனையாகி வருகுிறது. இனி 7சீட்டர் கார் ரூ23,71,000 என்ற விலையிலும், 8 சீட்டர் கார் ரூ1,69,000 என்ற விலையில் விற்பனையாகும். இந்த இரண்டு கார்களும் ரூ1,69,000 விலை குறைகிறது.
இசட்எக்ஸ் வேரியன்ட் தான் டாப் வேரியன்ட் கார் ஆகும். இந்த கார் இசட் எக்ஸ் 7 எஸ் வேரியன்டை பொருத்தவரை ரூ27,08,000 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இனி இந்த கார் ரூ25,27,400 என்ற விலையில் விற்பனையாகிறது. இந்த கார் ரூ1,80,600 குறைவான விலையில் விற்பனையாகிறது. வழக்கமாக இன்னோவா கிரைஸ்டா காருக்கு அதிக டிமாண்ட் இருப்பதால் தள்ளுபடிகள் கிடைப்பது கடினம்என்னதான் கேட்டாலும் ஒரு ரூபாய் கூட குறைக்க மாட்டார்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கேட்ட விலையை குடுத்து வாங்கிட்டு போக வாடிக்கையாளர்கள் அதிகமாக இருக்கும் போது இந்நிறுவனத்திற்கு இந்த காருக்கு தள்ளுபடி வழங்க தேவையில்லைதான். ஆனால் தற்போது ஜிஎஸ்டி குறைப்பால் அதிகபட்சமாக ரூ1.80 லட்சம் வரை விலை குறைகிறது. இதனால் இந்த காரை வாங்க இது நல்ல வாய்ப்பாக இருக்கிறது. இந்த காரை வாங்க நினைப்பவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு தான்.


Click it and Unblock the Notifications









