8 பேர் போற இந்த காரை எல்லாரும் கண்ண மூடிட்டு வாங்கறாங்க! மொத்த குடும்பமும் ஒரே நடைல போயிட்டு வந்தர்லாம்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று டொயோட்டா இன்னோவா (Toyota Innova). தற்போதைய நிலையில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) மற்றும் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) என்ற பெயர்களில் 2 வெர்ஷன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவற்றின் கடந்த டிசம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9,700 டொயோட்டா இன்னோவா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம், வெறும் 7,832 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் டொயோட்டா இன்னோவா கார் விற்பனையில் 24 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. நாங்கள் இங்கே குறிப்பிட்டுள்ள அனைத்தும், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் ஆகிய 2 கார்களின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை ஆகும்.

Toyota Innova Hycross Front View

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 19.99 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 26.55 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இந்த கார் 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் வெர்ஷன்களில் விற்பனைக்கு கிடைத்து கொண்டுள்ளது.

செயல்திறனை பொறுத்தவரையில் 2.4 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. வசதிகளை பொறுத்தவரையில், 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 7 ஏர்பேக்குகள் போன்றவை எல்லாம் முக்கியமான அம்சங்களாக உள்ளன.

Toyota Innova Hycross

மறுபக்கம் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 19.94 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 31.34 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இந்த செய்தியில் நாங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை போலவே, டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரும், 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் மாடல்களில்தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. செயல்திறனை பொறுத்தவரையில், 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

இதில் பெட்ரோல் இன்ஜின் உடன் சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷனும், ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜின் உடன் இ-சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளன. வசதிகளை பொறுத்தவரையில், அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), 10 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்றவை எல்லாம் மிகவும் முக்கியமானவையாக உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: விலை அதிகமாக இருந்தாலும், அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையில் நம்பகத்தன்மை வாய்ந்த மற்றும் செயல்திறன், சௌகரியம் ஆகிய அம்சங்கள் எல்லாம் ஒருங்கிணைந்த ஒரு காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு டொயோட்டா இன்னோவா நல்ல ஆப்ஷன்.

More from DriveSpark

Article Published On: Saturday, January 25, 2025, 16:45 [IST]
English summary
Toyota innova crysta hycross sales report december 2024 24 per cent growth
மேலும்... #toyota #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+