10 லட்சம் கிலோ மீட்டர் பிரச்னையே இல்லாம ஓடும்! அந்த நிறுவனத்தின் தயாரிப்பா! அப்ப கண்ண மூடிட்டு நம்பலாம்!
இந்தியாவில் டொயோட்டா இன்னோவா (Toyota Innova) காருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. தற்போதைய நிலையில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) மற்றும் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) என டொயோட்டா இன்னோவா காரில் மொத்தம் 2 வெர்ஷன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இதில், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை தற்போதைய நிலையில் 18.66 லட்ச ரூபாயாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் அனைத்து வசதிகளும் நிரம்பிய டாப் வேரியண்ட்டின் விலை 25.36 லட்ச ரூபாயாக உள்ளது.

மறுபக்கம் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 18.06 லட்ச ரூபாயாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் அனைத்து வசதிகளும் நிரம்பிய டாப் வேரியண்ட்டின் விலை 31.90 லட்ச ரூபாயாக இருக்கிறது.
இவை அனைத்தும் டொயோட்டா இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-Showroom Price) ஆகும். இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுவதால், ஒவ்வொரு மாதமும், டொயோட்டா இன்னோவா கார் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது.

இதற்கு நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதமும் விதிவிலக்கு அல்ல. டொயோட்டா இன்னோவா காரின் நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதம், 9,295 டொயோட்டா இன்னோவா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஆனால் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம், 7,867 டொயோட்டா இன்னோவா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், 1,428 டொயோட்டா இன்னோவா கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் டொயோட்டா இன்னோவா கார் விற்பனையில் 18 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. அத்துடன் நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டொயோட்டா நிறுவனத்தின் கார் என்ற பெருமையையும், டொயோட்டா இன்னோவா தன்வசப்படுத்தியுள்ளது.
இங்கே நாங்கள் ஒரு விஷயத்தை கண்டிப்பாக குறிப்பிட்டாக வேண்டும். இந்த செய்தியில் நாங்கள் கூறியுள்ள அனைத்துமே இந்திய சந்தையில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் ஆகிய 2 கார்களின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை என்பதுதான் அந்த விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் டொயோட்டா இன்னோவா என்ற பெயருக்கு தனி பாரம்பரியம் உள்ளது. கடந்த காலங்களில் டொயோட்டா இன்னோவா கார்கள் எவ்விதமான பிரச்னையும் இல்லாமல், 10 லட்சம் கிலோ மீட்டர்கள் ஓடிய செய்திகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்திலேயே நீங்கள் வாசித்திருக்கலாம். இந்த நம்பகத்தன்மைதான், இந்திய சந்தையில் டொயோட்டா இன்னோவாவின் மிகப்பெரிய பலமாக இருந்து வருகிறது.


Click it and Unblock the Notifications








