எத்தன வருஷம் ஆனாலும் இந்த பேருக்காகவே மக்கள் காரை வாங்குவாங்க! 8 பேர் ஜம்முனு போகலாம்!

இந்திய சந்தையில் ஒரு சமயத்தில் மிகவும் பிரபலமாக இருந்த கார்களில் ஒன்று டொயோட்டா குவாலிஸ் (Toyota Qualis). இதற்கு மாற்றாக, கடந்த 2005ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட கார்தான், டொயோட்டா இன்னோவா (Toyota Innova). அதாவது டொயோட்டா இன்னோவா என்ற 'நேம் பிளேட்' இந்தியாவில் 2 தசாப்தங்களை (20 வருடங்கள்) நிறைவு செய்திருக்கிறது.

இந்த 20 வருடங்களில், இந்திய சந்தையில் ஒட்டுமொத்தமாக 12 லட்சத்திற்கும் மேற்பட்ட டொயோட்டா இன்னோவா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது டொயோட்டா இன்னோவா மற்றும் தற்போது விற்பனையில் இருக்கும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) மற்றும் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) ஆகிய கார்களின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Toyota Innova Crysta

டொயோட்டா இன்னோவா ஒவ்வொரு மாதமும் மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருவதால்தான், இது போன்ற மிகவும் பிரம்மாண்டமான விற்பனை மைல்கற்களை (Sales Milestone) எல்லாம், அதனால் கடக்க முடிகிறது. இந்த வரிசையில் மற்ற மாதங்களை போலவே, நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதமும் டொயோட்டா இன்னோவா காரின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்துள்ளது.

காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட்படி (Sales Report) பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒட்டுமொத்தமாக (டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா + டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ்), 11,089 டொயோட்டா இன்னோவா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 8,838 ஆக மட்டுமே இருந்தது.

Toyota Innova Hycross

அதாவது கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், 2,251 டொயோட்டா இன்னோவா கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் டொயோட்டா இன்னோவா கார் விற்பனையில் 25 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் ஆரம்ப விலை 18.66 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 25.36 லட்ச ரூபாயாக இருக்கிறது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார், 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் ஆரம்ப விலை 18.06 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 31.90 லட்ச ரூபாயாக இருக்கிறது. டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரும் 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் ஆப்ஷன்களில்தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த செய்தியில் நாங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டொயோட்டா இன்னோவா கார், வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாகவும், நம்பகத்தன்மை வாய்ந்த ஒன்றாகவும் கருதப்படுகிறது. இதன் காரணமாகவே இந்திய சந்தையில் மிகவும் பிரம்மாண்டமான வெற்றியை டொயோட்டா இன்னோவா சந்தித்து வருகிறது என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Sunday, November 16, 2025, 19:02 [IST]
English summary
Toyota innova crysta hycross sales report october 2025 25 per cent growth
மேலும்... #toyota #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+