டொயோட்டா காரை வாங்கிய கையோடு மொத்தமா கழற்றி மாட்டிட்டாங்க! காலை நீட்டி படுத்துட்டு போகலாம்!
டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் (Toyota Innova Hycross), இந்தியாவில் ஹைப்ரீட் (Hybrid) என்ஜின் ஆப்ஷனில் விற்பனை செய்யப்படும் கார்களுள் ஒன்று. இந்தியாவில் இன்னோவா கார்களுக்கு என்றாலே தனி வரவேற்பு மக்கள் மத்தியில் உள்ளது. இதனை மேலும் பயன்படுத்தி கொள்ளும் முயற்சியாக, இன்னோவா காரில் புதியதாக ஹைப்ரீட் ஆப்ஷனை டொயோட்டா நிறுவனம் சில வருடங்களுக்கு முன் அறிமுகம் செய்தது.
மேலும், இன்னோவா காரின் அடுத்த கட்ட ஜென்ரேஷனாகவும் இன்னோவா ஹைகிராஸ் அறிமுகம் செய்யப்பட்டதால், இந்தியர்கள் பலரும் மிகவும் விரும்பி இன்னோவா ஹைகிராஸ் ஹைப்ரீட் கார்களை வாங்கி வருகின்றனர். குறிப்பாக, பின் வரிசை இருக்கையில் சவுகரியமாக பயணம் செய்ய விரும்புபவர்களின் முதன்மையான தேர்வு இன்னோவா ஹைகிராஸ் ஆகவே உள்ளது.

அந்த அளவிற்கு சவுகரியமான இருக்கை வசதிகள் இந்த டொயோட்டா காரில் வழங்கப்பட்டாலும், இங்கு ஒருவர் தனது இன்னோவா ஹைகிராஸ் காரின் இருக்கைகள் உள்பட கேபின் முழுவதையும் மாற்றிக் கொண்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்று, 'ஆட்டோரவுண்டர்ஸ்' (Autorounders) என்கிற யூடியூப் (Youtube) சேனலில் வெளியிடப்பட்டு உள்ளது.
இன்னோவாவை காட்டிலும் டொயோட்டாவின் சொகுசு காரான வெல்ஃபையர் (Vellfire) காரை போன்று, முழுவதுமாக சாய்ந்து படுக்கக்கூடிய அளவிற்கான இருக்கைகளை இந்த இன்னோவா ஹைகிராஸ் காரில் 2வது வரிசையில் வழங்கி உள்ளனர். சாய்க்ககூடிய வசதி மட்டுமின்றி, இந்த 2-வது வரிசை இருக்கை செட்-அப்பில் கூடுதல் குஷின்கள் மற்றும் கால்களுக்கும் தேவையான குஷின்களும் வழங்கப்பட்டு உள்ளன.

காரில் டொயோட்டா நிறுவனம் வழங்கிய இருக்கைகளை நீக்கி, அவற்றிற்கு பதிலாக இந்த லக்சரியான இருக்கைகளை அதே இடத்தில் பொருத்தி உள்ளனர். அத்துடன், அதற்கேற்ப காரின் கேபின் முழுவதும் மாற்றப்பட்டு உள்ளது. எவ்வாறு இந்த இருக்கைகள் பொருத்தப்பட்டன? அதற்காக காரில் என்னென்ன வேலைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன? என்பன விரிவாக வீடியோவில் காட்டப்பட்டு உள்ளது.
புதியதாக பொருத்தப்பட்டு உள்ள லக்சரியான இருக்கைகள் சவுகரியத்தில் மட்டுமில்லை, அளவிலும் பெரியவை ஆகும். குறிப்பாக, 2வது வரிசையில் பொருத்தப்பட்டுள்ள இருக்கைகள் 'கேப்டன் இருக்கைகள்' போன்று அளவில் பெரியதாக உள்ளன. இதனாலேயே 2வது இருக்கை வரிசை மட்டுமின்றி, அதற்கு பின்னால் டொயோட்டா தொழிற்சாலையில் பொருத்தப்பட்ட கடைசி இருக்கை வரிசையையும் நீக்கி உள்ளனர்.

மேலும், இதற்காக காருக்குள் கேபினுக்கான தரைப்பாய்களையும் நீக்கி, புதிய இருக்கைகள் பொருத்தப்பட்ட பின் அதற்கேற்ற புதிய தரைப்பாய்களை பொருத்தி உள்ளனர். புதியதாக பொருத்தப்பட்டுள்ள இருக்கைகளை எந்த அளவிற்கு சாய்த்துக் கொள்ள முடியும் என்றால், கிட்டத்தட்ட 30 டிகிரி வரையில் சாய்த்துக் கொள்ள முடியுமாம். அத்துடன், இந்த புதிய இருக்கை செட்-அப்பில் மசாஜ் (Massage) வசதியையும் சேர்த்துள்ளனர். இதன்படி, இந்த காரின் 2வது இருக்கை வரிசையில் அமர்பவர்கள் 3 விதங்களில் மசாஜை பெறலாம்.
மேலும், இந்த பிரத்யேகமான இருக்கைகளில் வெண்டிலேஷன் மற்றும் ஹீட்டிங் வசதிகளும் உள்ளன. இதனால், எல்லா விதமான காலச்சூழல்களிலும் இந்த இருக்கைகளை பயன்படுத்தலாம். இத்தகைய இருக்கைகள் மற்றும் தரைப்பாய்களை புதியதாக வழங்கியது மட்டுமின்றி, இந்த இன்னோவா ஹைகிராஸ் காரின் கேபினுள் மேலும் சில மாற்றங்களையும் கொண்டுவந்துள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: காரை தனது விருப்பத்திற்கு ஏற்ப மாடிஃபிகேஷன் செய்வது என்றால், இப்படி செய்ய வேண்டும். இன்னோவா போன்ற பெரிய அளவிலான காரில் இவ்வாறான இருக்கைகள் மிகவும் ஏற்றவையாக இருக்கும். இவ்வாறான கார் கஸ்டமைசேஷன்களுக்கு (Customisations) சட்டப்பூர்வமாக கூட எந்த தடையும் கிடையாது.


Click it and Unblock the Notifications









