8 பேர் போகலாம் 23 கிமீ மைலேஜ் தரும் இந்த காரை 12 லட்சம் பேர் வாங்கிட்டாங்க! அப்படி இதுல என்னதாங்க இருக்குது?

டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா கார் 20 ஆண்டுகளாக தொடர்ந்து விற்பனையில் இருந்து 12 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த கார் இந்தியாவில் அதிகம் பிரபலமான காராக இருக்கிறது. மக்கள் இந்த காரை விரும்பி வாங்க என்ன காரணம்? தற்போது விற்பனவையாகி வரும் இன்னோவா காரில் என்னென்ன விஷயங்கள் இருக்கிறது? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் நீண்ட ஆண்டுகளாக வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.இந்நிறுவனம் இன்னோவா என்ற பெயரில் ஒரு எம்பிவி காரை கடந்த 2005ம் ஆண்டு அறிமுகப்படுத்தியத. இந்த கார், ரக்கட் லுக், சொகுசு மற்றமு் நம்பகதன்மைக்காக பெயர் பெற்றதாக இருக்கிறது. இந்நிலையில் இன்னோவா காரின் அடுத்த வெர்ஷனாக இன்னோவா கிரைஸ்டா கார் 2016ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 2022ம் ஆண்டு இன்னோவா ஹைகிராஸ் கார் அறிமுகப்படுத்தப்பட்டது.

Toyota Innova Sales

இந்த இன்னோவா ஹைகிராஸ் காரை அந்நிறுவனம் ஹைபிரிட் இன்ஜின் உடன் உரவாக்கியது. இந்த காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் உடன் உருவாக்கியுள்ளது. இதில் ஹைபிரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் 173 பிஎச்பி பவரையும் 209 என்எம் டார்க்திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இன்னோவா ஹைகிராஸ் கார் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 1 லட்சம் என்ற இலக்கை கடந்தது. டொயோட்டா நிறுவனம் இந்த இன்னோவா காரை ஸ்டிராங்கான காராக உருவாக்கியுள்ளது. இதில் நம்பகதன்மையுடன் சொகுசு வசதி, செகண்ட் ஹேண்ட் மார்கெட்டில் விற்பனை செய்யும் போது அதிக விலை இருப்பது பலரை இந்த காரை விரும்பி வாங்க வைத்துள்ளது. இது போக இந்த காருக்கான சர்வீஸ் சிறப்பாக உள்ளது.

Toyota Innova Sales

சுமார் 20 ஆண்டுகுளாக இந்த கார் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்ப்பை பெற்ற காராக இருக்கிறது. இதுவரை 12 லட்சத்திற்கும் அதிகமான கார்கள் விற்பனையாகியுள்ளது. இந்த கார் அதிக விலை கொண்ட காரா இருந்தாலும் மக்கள் மதிப்பில் நன்மதிப்பை பெற்றதால் இந்த கார் சிறப்பான விற்பனையை பெற்றுள்ளது.

இது மட்டுமல்ல இந்த காருக்கான டி போர்டு வெர்ஷனையும் அந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதனால் டிராவல் வைத்திருப்பவர்கள் பலர் இந்த காரை வாங்க துவங்கிவிட்டனர். இந்த காரில் குடும்பத்துடன் பலர் ஒரே நேரத்தில் பயணிக்க முடியும் என்பதால் இந்த கார் டிராவல்ஸ் துறையிலும் நல்ல வளர்ச்சியை பெற்றது.

Toyota Innova Sales

தற்போது விற்பனையாகி வரும் இன்னோவா ஹைகிராஸ் கார் ரூ19.94 லட்சம் முதல் ரூ32.58 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரின் ஹைலைட் அதன் மைலேஜ் தான். இந்த கார் 8 பேர்வரை பயணம் செய்யும் வகையில் இருந்தாலும் ஸ்டிராங்க் ஹைபிரிட் வேரியன்டில் இது 23 கி.மீ வரை மைலேஜ் தரும். அதற்காகவே இந்த காரை பலர் விரும்பி வாங்கி வருகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிகம் நபர்கள் பயணம் செய்யும் வாகனங்கள் குடும்பத்துடன் பயணம்செய்வதற்காக அதிகம் வாங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த இன்னோவா கார் நிச்சயம் மக்கள் மத்தியில் நற்பெயரை பெற்றள்ளது என்றே சொல்லாம். அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்த கார் சிறப்பான விற்பனையில் இருக்கும் என்றாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 6, 2025, 7:00 [IST]
English summary
Toyota innova sales cross 12 lakh in 20 years
மேலும்... #toyota #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X