தீபாவளிக்காக ஹைரைடர் காரில் ஏரோ எடிசனை அறிமுகப்படுத்திய டொயோட்டா! விலை எவ்வளவு தெரியுமா?

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (Toyota Kirloskar Motor - TKM) நிறுவனம், அதன் பிரபலமான அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Urban Cruiser Hyryder) எஸ்யூவி காரில் புதியதாக 'ஏரோ எடிசன்' (Aero Edition) என்கிற பெயரில் புதிய ஸ்பெஷல் எடிசனை அறிமுகப்படுத்தியுள்ளது. வரவிருக்கும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களை டார்க்கெட் செய்து கொண்டுவரப்பட்டு உள்ள இந்த புதிய ஸ்பெஷல் எடிசன், ஹைரைடருக்கு தனித்துவமான மற்றும் ஸ்போர்ட்டியான தோற்றத்தை வழங்குகிறது.

இந்த லிமிடெட் எடிசன் ஸ்டைலிங் பேக்கேஜில், பிரத்யேக ஏரோடைனமிக் பாடி கிட் இடம்பெறுகிறது. இதில் பாடி கிட்டில் முன்பக்க ஸ்பாய்லர், பின்பக்க ஸ்பாய்லர் மற்றும் சைடு ஸ்கர்ட்ஸ் ஆகியவை அடங்கும். இது ஹைரைடரின் பிரீமியம் தரத்திலான வடிவமைப்பை மேலும் மேம்படுத்துகிறது. ஏரோ எடிசன் பேக்கேஜின் விலை ரூ.31,999 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

toyota urban cruiser hyryder aero edition

இது அனைத்து ஹைரைடர் வேரியண்ட்களிலும் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் தற்போதைய அல்லது புதிய வாகனங்களில் இதைச் சேர்த்து, தங்கள் எஸ்யூவியின் தோற்றத்தை தங்களது விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளலாம். ஏரோ எடிசன் வெள்ளை, சில்வர், கருப்பு மற்றும் சிவப்பு ஆகிய நான்கு வண்ணங்களில் வழங்கப்படுகிறது.

இந்த 4 பிரீமியம் தரத்திலான வண்ணங்கள், ஹைரைடரின் துணிச்சலான ஸ்டைலிங்குடன், வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்ய அதிக ஆப்ஷன்களை வழங்குகின்றன. முன்பக்க ஸ்பாய்லர், எஸ்யூவியின் முகப்பிற்கு மேலும் கூர்மையான மற்றும் ஆக்ரோஷமான தோற்றத்தை அளிக்கிறது. பின்பக்க ஸ்பாய்லர் காரின் ஏரோடைனமிக்ஸ் மற்றும் ஸ்போர்ட்டி தன்மையை மேம்படுத்துகிறது.

toyota urban cruiser hyryder aero edition

சைடு ஸ்கர்ட்ஸ், டொயோட்டா ஹைரைடருக்கு ஒரு உறுதியான, செயல்திறன் மிக்க தோற்றத்தை வழங்குகிறது. 2022ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, அர்பன் க்ரூஸர் ஹைரைடர் இந்தியாவில் டொயோட்டாவின் வெற்றிகரமான எஸ்யூவிகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இதுவரை 1.68 லட்சத்திற்கும் அதிகமான ஹைரைடர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

B-எஸ்யூவி பிரிவில் ஒரு முன்னணி மாடலாக, டொயோட்டா ஹைரைடர் அதன் மேம்பட்ட தொழில்நுட்பம், சௌகரியம் மற்றும் வலிமையான ஹைப்ரிட் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களால் தொடர்ந்து வாடிக்கையாளர்களை ஈர்க்கிறது. ஹைரைடர் இரண்டு பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. அவை செல்ஃப்-சார்ஜிங் ஸ்ட்ராங் ஹைப்ரிட் எலெக்ட்ரிக் சிஸ்டம் மற்றும் நியோ டிரைவ் பெட்ரோல் வேரியண்ட் ஆகும்.

ஸ்ட்ராங் ஹைப்ரிட் மாடலில் டொயோட்டாவின் இ-டிரைவ் டிரான்ஸ்மிஷன் கிடைக்கிறது. இந்த ஆப்ஷனில் ஹைரைடர் காரை 40% தூரத்தையும், 60% நேரத்தையும் முழுவதும் எலெக்ட்ரிக் பவரில் இயக்க முடியும். இதன் மூலமாக, 27.97 கிமீ/லி என்ற அற்புதமான எரிபொருள் செயல்திறனை பெறலாம். மறுப்பக்கம், நியோ டிரைவ் வேரியண்ட் 1.5 லிட்டர் கே-சீரிஸ் என்ஜினுடன் இயக்கப்படுகிறது.

toyota urban cruiser hyryder aero edition

இது 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. 2WD மற்றும் 4WD ஆப்ஷன்களும் உள்ளன. ஹைரைடரின் தனித்துவமான வடிவமைப்பு அம்சங்களில் கிரிஸ்டல் அக்ரிலிக் கிரில், இரட்டை எல்இடி டிஆர்எல்-கள் மற்றும் 17 இன்ச் அலாய் சக்கரங்களுடன் இணைக்கப்பட்ட செதுக்கப்பட்ட பாடி லைன்கள் ஆகியவை அடங்கும்.

உட்புறத்தில், காற்றோட்ட வசதியுடன் கூடிய லெதர் இருக்கைகள், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் கூடிய 9 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை ஆடம்பரத்தை பறைசாற்றுகின்றன. மற்ற சிறப்பம்சங்களில் வயர்லெஸ் சார்ஜிங், ஆம்ப்லியன்ட் லைட்டிங், 360 டிகிரி கேமரா, சாய்க்கக்கூடிய வசதி உடன் பின் இருக்கைகள் மற்றும் பின்பக்க ஏசி வென்ட்கள் ஆகியவை அடங்கும். இவை இந்திய குடும்பங்களுக்கு சௌகரியத்தையும் வசதியையும் உறுதி செய்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தனித்துவம், நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் சாலைகளில் கவர்ச்சியான தோற்றத்தை விரும்பும் வாடிக்கையாளர்களுக்காகவே ஏரோ எடிசன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக டொயோட்டா தெரிவித்துள்ளது. இது டொயோட்டாவின் நம்பகத்தன்மை மற்றும் புதுமைக்கான நற்பெயருடன் ஸ்டைலை ஒருங்கிணைக்கிறது. டொயோட்டாவின் நம்பகமான செயல்திறனை துணிச்சலான, பிரீமியம் அழகியலுடன் இணைத்து வாங்க விரும்புபவர்களுக்கு ரூ.10.94 லட்சத்தில் இருந்து கிடைக்கும் ஹைரைடர் காரை ஏரோ எடிசன் பேக்கேஜ் உடன் வாங்குவது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, October 17, 2025, 11:10 [IST]
English summary
Toyota introduces new aero edition in urban cruiser hyryder check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X